உள்ளடக்கத்துக்குச் செல்

சகீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகீலா
பிறப்பு சனவரி 1977 (அகவை 42)[1]
கோடம்பாக்கம், மெட்ராஸ், இந்தியா[1]
வேறு பெயர் ஷாக்கு
தொழில் திரைப்பட நடிகை

சகீலா (பிறப்பு: சனவரி 1977) குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.

திரை வாழ்க்கை

[தொகு]

மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.

மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரை திரையுலகத்தினர் "சைக்லோன்" "லேடி லால்” என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.[2]

திரைப்படங்கள்

[தொகு]
வருடம் திரைப்படம் மொழி
2011 நின்டி கன்னடம்
2011 தேஜா பாய் & பேமலி மலையாளம்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழ்
2010 மாஞ்சா வேலு தமிழ்
2009 சிவா மனசுல சக்தி தமிழ்
2007 அழகிய தமிழ் மகன் தமிழ்
2007 சொட்டா மும்பை மலையாளம்
2006 பங்காரம் தெலுங்கு
2006 வாத்தியார் தமிழ்
2003 ஜெயம் தமிழ்
நீல தடகத்திலே நிழல் பக்ஷிகள் மலையாளம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "സിനിമാ അഭിനയവും വിവാദങ്ങൾ നിറഞ്ഞ ജീവിതവും". 24 News Live. யூடியூப். Retrieved August 3, 2019.
  2. தோழர் சகீலா- யுவா

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீலா&oldid=4114019" இலிருந்து மீள்விக்கப்பட்டது