கீழத்தூர்

ஆள்கூறுகள்: 11°3′0″N 76°13′0″E / 11.05000°N 76.21667°E / 11.05000; 76.21667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழத்தூர்
கிராமம்
பூந்தானம் நம்பூதிரியின் பிறப்பிடம்
ஆள்கூறுகள்: 11°3′0″N 76°13′0″E / 11.05000°N 76.21667°E / 11.05000; 76.21667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை (2011)மொழிகள்
 • மொத்தம்20,457
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்679325

கீழத்தூர் (Keezhattur) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1] புகழ்பெற்ற பண்டைய மலையாள கவிஞரான பூந்தானம் நம்பூதிரியின் பிறப்பிடமான பூந்தானம் இல்லம் இங்கு அமைந்துள்ளது. பூந்தானம் இல்லம் இப்போது ஒரு பிரபலமான கலாச்சார மையமாக உள்ளது. கீழத்தூர் ஒரு பெரிய ஊராட்சியாகும். 'கீழத்தூர் பூரம்' இங்கு நடைபெறும் ஒரு முக்கிய திருவிழாவாகும். இதன் நிர்வாக அலுவலகங்கள் மலப்புறம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான பெரிந்தல்மண்ணையிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் உள்ள அக்கப்பரம்புவில் அமைந்துள்ளன.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கீழத்தூரில் 9,787 ஆண்களும் 10,670 பெண்களும் என 20,457 மக்கள் உள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

கீழத்தூர் கிராமம் பெரிந்தல்மண்ணை நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 திரூர் வழியாக செல்கிறது. இச்சாலை வடக்கில் கோவாவையும் மும்பையையும் இணைக்கிறது. தெற்கில் கொச்சியையும், திருவனந்தபுரத்தையும் இணைக்கிறது. நெடுஞ்சாலை எண் 966 பாலக்காட்டையும், கோயம்புத்தூரையும் இணைக்கிறது. கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ளது. அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பட்டிக்காட்டில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "Keezhattur Village Population - Perinthalmanna - Malappuram, Kerala". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழத்தூர்&oldid=3179170" இலிருந்து மீள்விக்கப்பட்டது