பூந்தானம் நம்பூதிரி
பூந்தானம் நம்பூதிரி | |
---|---|
பூந்தானம் நம்பூதிரியின் உருவச்சிலை, குருவாயூர், கேரளா | |
சுய தரவுகள் | |
பிறப்பு | பொ.ஊ. 1547 |
இறப்பு | பொ.ஊ. 1640 |
சமயம் | இந்து சமயம் |
அறியப்படுதல் | கவிஞர், வைணவம் (கிருஷ்ணர்) |
பூந்தானம் நம்பூதிரி (Poonthanam Nambudiri) என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல கவிஞரும், குருவாயூர் குருவாயூரப்பன் பக்தரும் ஆவார். இவர் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் வசித்து வந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். மலையாளத்தில் "தெய்வீக ஞானத்தின் பாடல்" என்று பொருள்படும் ஞானப்பனா என்ற இவரது தலைசிறந்த படைப்புக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். மலையாளத்தில் இவரது மற்ற முக்கிய கவிதைகள் பாசா கர்ணாமிருதம் மற்றும் குமாரகரணம் அல்லது சந்தனகோபாலபனா என்பதாகும். இவரது மற்ற படைப்புகளில் இராகவியம், விஷ்ணுவிலாசம் மற்றும் சமசுகிருதத்தில் சீதாராகவம் மற்றும் நவீன மலையாளத்தில் விஷ்ணுகீதா மற்றும் பஞ்சதந்திரம் ஆகியவை அடங்கும்.
கேரளாவில் இன்னும் பிரபலமாக இருக்கும் பல பாடல்கள் மற்றும் பிரார்த்தனை பாடல்களுக்கு பூந்தானமே காரணமாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பூந்தானம் 1547 ஆம் ஆண்டில் அசுவினி நாளில் மாசி மாதத்தில், மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணைக்கு அருகிலுள்ள கீழாற்றூரில் ஒரு நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் 'சந்தனா கோபாலம்' ஓதுவதன் மூலம் குருவாயூர் இறைவனைப் பிரியப்படுத்தத் தொடங்கினார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால் அன்னபிரசனம் விழாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. [2] துயரமடைந்த பூந்தானம் குருவாயூர் கோயிலி தஞ்சம் புகுந்து குமாரகரணத்தின் புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானம், ஒரு குழந்தையாக, ஒரு கணம், தனது மடியில் படுத்துக் கொண்ட குருவாயுரப்பனால் ஆறுதலடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கிருட்டிணரை தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். ஞானப்பனாவில் அவர் எழுதுகிறார்: "சிறிய கிருட்டிணர் நம் இதயத்தில் நடனமாடுகையில், நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா?" . பூந்தானம் தனது வாழ்நாள் முழுவதையும் பாகவதத்தைப் படித்து, இறைவனின் மகிமைகளை எளிய மலையாளத்தில் பாடினார். இவரது மகத்தான பணி, ஞானப்பனா என்பது இந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டது. [3] இவரது வீடான பூந்தானம் இல்லம் என்பது இப்போது குருவாயூர் தேவஸ்வத்தின் கீழ் உள்ளது. [4]
பூந்தானம் மற்றும் மேல்பத்தூர்
[தொகு]இவர் குருவாயூருடன் தொடர்புடைய மற்றொரு பிரபல கவிஞரான மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியின் சமகாலத்தவர். மலையாளத்தில் தனது "ஞானப்பனா" என்ற ஒரு படைப்பைப் படிக்க பூந்தானம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். [5] பூந்தானத்தின் பணிவு மற்றும் பக்தியால் ஈர்க்கப்பட்ட குருவாயூர் குருவாயூரப்பன் இவரது படைப்புகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பூந்தானத்தின் "சந்தானகோபாலபனா"வை புறக்கணித்ததற்காக பட்டத்திரியை ஒரு முறை கண்டித்தார் எனவும் அவர் பட்டத்திரியின் விபக்தியிலிருந்து பூந்தானத்தின் உண்மையான பக்திக்குத் திருப்பினார் என்றும் புராணக்கதை கூறுகிறது. [6]
இறப்பு
[தொகு]புராணத்தின் படி, 1640 ஆம் ஆண்டில் பூந்தானம் இந்த உலகத்தை விட்டு வெளியேறினார். அவர் சொர்க்கத்திற்கு புறப்படுவதாக அறிவித்தபோது, தன்னுடன் சேர விரும்பும் எவரையும் அவர் அழைத்தார். இதை கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். இறுதியில், நோய்வாய்ப்பட்ட மனைவியை பராமரித்த ஒரு வேலைக்காரி மட்டுமே அவனுடைய பரலோக பயணத்தில் அவருடன் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது.[7][6]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ I K K Menon. FOLK TALES OF KERALA. Publications Division Ministry of Information & Broadcasting Government of India. pp. 194–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2188-1.
- ↑ "Devotee the Lord loved". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3659524.ece.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-28.
- ↑ "Steps to develop Poonthanam Illam" இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230235959/http://www.hindu.com/2006/07/14/stories/2006071404110200.htm.
- ↑ "Stage for Bhakti". The Hindu. 17 September 2010. http://www.thehindu.com/arts/theatre/article677733.ece.
- ↑ 6.0 6.1 "To lovers of Krishna, in Tamil". The Hindu. 19 July 2012 இம் மூலத்தில் இருந்து 23 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120723041304/http://www.thehindu.com/arts/books/article3657486.ece.
- ↑ "Devotee the Lord loved". The Hindu. 20 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3659524.ece.