உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்காலக்குடி சமணர் படுகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருங்காலக்குடி சமணர் படுகைகள், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி குறுவட்டத்தில், கருங்காலக்குடி எனும் கிராமத்தில் உள்ளது. [1] கருங்காலக்குடி கிராமத்தின் பஞ்சபாண்டவர் குன்றுகளில் சமணத் துறவிகள் தங்கிய குகைக் குன்றுகளும், படுகைகளும், தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளது. தமிழ்நாட்டில் இங்குதான் முதன் முதலில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி 9-ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகிறது. சமணத் துறவிகள் இங்கு தங்கி கல்வி, மருத்துவப் பணிகள் செய்துள்ளனர்.[2]இதனை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பராமரிக்கிறது.

அமைவிடம்

[தொகு]

கருங்காலக்குடி சமணர் படுகைகள், மதுரையிலிருந்து 46 கிமீ தொலைவிலும், மேலூருக்கு வடக்கே சிங்கம்புணரி செல்லும் வழியில் 16 கிமீ தொலைவிலும் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மதுரை மேலூர் வருவாய் வட்டத்தின் பிர்காக்களும், வருவாய் கிராமங்களும்
  2. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்