உடவளவை தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உடவளவை தேசியப் பூங்கா
அமைவு: இலங்கை
பரப்பு: 306 km²
தொடக்கம்: 1972

உடவளவை தேசியப் பூங்கா இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தேசிய வனமாகும். 1972 ஆம் ஆண்டு வளவை ஆற்றின் நீரேந்துப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. பூங்கா மொத்தம் 306 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. பூங்கா புல் நிலங்களாலும் சிறிய தேக்குக் காடுகளாலும் ஆனது.

பூங்காவில் 400க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள் இருக்கின்றன. காட்டு யானைகளை இலகுவாக பார்வையிட முடியும். மேலும் இங்கு சிறுத்தைகளும் காணப்படுகின்றன. முதலை, பொன்நிற நரி, நீர் எருமை போன்றவை இங்கு காணப்படும் முக்கிய விலங்குகளாகும். இங்கு வெள்ளை வயிறு கடற் கழுகு, Changeable Hawk கழுகு என்பனவும் சதுப்பு நிலங்களில் wader, Painted Stork பறவைகளும் காணப்படுகின்றன. நிலத்தில் வாழும் பறைவைகள் தாரளமாக காணப்படுகின்றன.இவற்றுள் Indian Roller,Indian Peafowl, Malabar Pied Hornbill, Pied Cuckoo என்பன சிலவாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடவளவை_தேசியப்_பூங்கா&oldid=1496215" இருந்து மீள்விக்கப்பட்டது