வஸ்கமுவை தேசிய வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வஸ்கமுவை தேசிய பூங்கா
Wasgamuwa National Park
WasgamuwaNationalPark-September2014 (1).JPG
வஸ்கமுவ தேசிய பூங்கா
Map showing the location of வஸ்கமுவை தேசிய பூங்கா Wasgamuwa National Park
Map showing the location of வஸ்கமுவை தேசிய பூங்கா Wasgamuwa National Park
வஸ்கமுவ தேசிய பூங்கா
அமைவிடம்மத்திய, வடமத்திய மாகாணங்கள், இலங்கை
கிட்டிய நகரம்மாத்தளை
பரப்பளவு39322 எக்டேர்
நிறுவப்பட்டதுஆகத்து 07, 1984
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

வஸ்கமுவை தேசிய பூங்கா (Wasgamuwa National Park) இலங்கையின் மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஓர் இயற்கைப் பூங்கா ஆகும். இப்பூங்கா 1984 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் போது இடம்பெயர்ந்த காட்டு விலங்குகளை பாதுகாக்க மற்றும் அடைக்கலம் செய்யும் நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நான்கு தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.[1] ஆரம்பத்தில் (1938 ல்) இது ஒரு இயற்கை இருப்பாக நியமிக்கப்பட்டு பின்னர் 1970 களின் முற்பகுதியில் ஒரு கண்டிப்பான இயற்கை இருப்பு பகுதியாக கருதப்பட்டது.[2] இலங்கை யானைகளை பெரிய கூட்டமாக காணக்கூடிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வஸ்கமுவையும் ஒன்றாகும். மேலும் இது இலங்கையிலுள்ள முக்கிய பறவை பகுதிகளில் ஒன்றாகும். வஸ்கமுவை என்ற பெயர் "வலஸ் கமுவை" என்ற சொல்லின் மூலம் பெறப்பட்டது.[3] "வலசா" என்பது சிங்கள மொழியில் தேன் கரடி என்றும் "கமுவ"  என்பது மரம் என்றும் பொருள் படும். இப்பூங்காவானது கொழும்பிலிருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]

பெளதீக அம்சங்கள்[தொகு]

இத்தேசிய பூங்காவின் ஆண்டு தினசரி வெப்பநிலை 28 °C  (82 °F) ஆவதோடு அது உலர் வலய காலநிலையையும் கொண்டுள்ளது. ஆண்டு மழைவீழ்ச்சி எல்லைகள் 1650-2100 மிமீ ஆகும். வட-கிழக்கு பருவமழை காலத்தின் போது அக்டோபர் முதல் சனவரி வரையான காலப்பகுதியில் மழை பெறப்படும். யூலை-செப்டம்பர்  வரையான காலப்பகுதி உலர் பருவமாகும். இத்தேசிய பூங்காவின் உயர்ந்த பகுதி சுது கண்ட (வெள்ளை மலை), இதன் உயரம் 470 மீட்டர் (1,540 அடி) ஆகும். மேலும் இத்தேசிய பூங்காவின் மண் குவார்ட்சு மற்றும் பளிங்கை கொண்டிருக்கிறது. வஸ்கமுவை காடானது இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[5] இப்பூங்காவானது முதன்மை, உயர்நிலை ஆற்றங்கரை காடுகள் மற்றும் புல்வெளிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.

வரலாறு மற்றும் வரலாற்று நீர்ப் பாசனம்[தொகு]

முதலாம் பராக்கிரமபாகு மூலம் கட்டப்பட்ட மலகமுவ, வில்மிடிய, டஸ்தொட்ட போன்ற நீர்ப்பாசன குளங்களின் இடிபாடுகள் மற்றும் கலிங்கா யோதா எல கால்வாய் என்பன இத்தேசிய பூங்காவில் எஞ்சியுள்ளன.[1] பண்டைய காலத்தில் மினிபே அணைக்கட்டின் இடது கரை கால்வாயிலிருந்து பராக்கிரம சமுத்திரத்திற்கு அம்பன் கங்கை மூலம் பாசப்பட்ட நீரானது வஸ்கமுவை ஊடகவே சென்றது.[4]

மேலும் இப்பூங்காவானது எல்லாளன் மற்றும் துட்டகைமுனு அரசர்களுக்கு இடையிலான யுத்தம் நடைபெற்ற போர்க்களமாக யுடங்கன பிடிய என்பவரால் அடையாளம் காணப்பட்டது.  துட்டஹேமுனுவுடைய இராணுவமானது போருக்கு முன் முகாமிட்ட புல்நிலமான கண்டஉரு பிடிய என்று அறியப்படுகிறது. மகானாக அரசன் மூலம் கட்டப்பட்ட சுளங்கனி சைத்தியவின் இடிபாடுகளை இத்தேசிய பூங்காவில் காணலாம். அதன் சுற்றளவு, 966 அடி (294 மீ) இது ருவான்வெலிசாயவை விட  அதிகமானதாகும். தற்போது  கலைபொருட்களான சைத்தியவில் இருந்து எடுக்கப்பட்ட (அரசன் விக்கிரம ராஜசிங்கனால் பாவிக்கப்பட்ட கிண்ணம்) மற்றும் பல வெண்கல சிலைகள் யுதங்கணா விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. 

தாவரவளம்[தொகு]

வஸ்கமுவையில் உள்ள சபாரி பாதை.

வஸ்கமுவை தேசிய பூங்கா இலங்கையிலுள்ள பாதுக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்தியில் உயர்ந்த உயிரியற் பல்வகைமை உடையதாக காட்சியளிக்கிறது. 150-க்கும் மேற்பட்ட மலர் இனங்கள் பூங்காவில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு Cryptocoryne walkeri மற்றும் Munronia pumila ஆகிய இரு பொருளாதார மதிப்புள்ள தாவரங்கள் உள்ளன. நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆற்றங்கரை காடுகள் விலங்கினங்களுக்கு பெரிதளவில் ஆதரவு அளிக்கிறது. இக்காடுகள் பல அடுக்குகளை கொண்டுள்ளது. Chloroxylon swietenia, Manilkara hexandra (பாலை), Elaeodendron glaucum, Pterospermum canescens, Diospyros ebenum (வெள்ளைத்துவரை), Holoptelea intergrifolia, Pleurostylia opposita, Vitex altissima (காட்டு நொச்சி), Drypetes sepiaria (வீரை ), மற்றும் Berrya cordifolia  போன்றவை வெளிப்படு அடுக்கில் உள்ள மேலாதிக்க மரங்களாகும். Polyalthia korinti, Diplodiscus verrucosus, Limonia acidissima (விளா), Cassia roxburghii மற்றும் Strobilanthes stenoden போன்றவை மற்ற படிநிலைகளில் உள்ள பொதுவானவைகளாகும். 1700 வருட பழமையான "ஒரு பெண்டி சியம்பலவா" (ஓடம்-நங்கூரமிட்டுள்ள-புளி) என்று அழைக்கப்படும் சில புளிய மரங்கள் இப்பூங்காவில் அமைந்துள்ளன.[6]

விலங்குகள்[தொகு]

காலையில் சூரியனை அனுபவித்து கொண்டிருக்கும் ஒரு மயில்

வஸ்கமுவ தேசிய பூங்காவனது 23 வகையான பாலூட்டிகளுக்கு உறையுள்ளாக காணப்படுகிறது.  இப்பூங்காவானது 150 இலங்கை யானை கூட்டங்களால் குடியிருக்க படுகிறது. சதுப்பு நில யானைகள் (Elephas maximus vil-aliya) மகாவலி ஆற்றுப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும் பூங்காவில் தென்படும் purple-faced langur (ஊதா முகக் குரங்குகள்) மற்றும் toque macaque போன்ற குரங்குகள் இலங்கைக்கே உரித்தான. அதே வேலை நீர் எருமை மற்றும் இலங்கை அச்சு மான் என்பன பொதுவாக காணக்கூடியவை, இலங்கை சிறுத்தை மற்றும் கரடி என்பன அரிதாகவே உள்ளன. சிறிய கோல்டன் பாம் புனுகு பூனையானது மற்றொரு அரிதாக காணப்படும் பாலூட்டி ஆகும்.

இப்பூங்காவிலுருந்து பதிவு செய்யப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 143 ஆகும். இவை 8 தனிச்சிறப்பான இனங்களை உள்ளடக்கியுள்ளது. சில பிரதேசங்களில் அரிதாக காணப்படும் செம்முக பூங்குயிலானது இப்பூங்காவிட்கே உரிய குடியுரிமை பறவையாகும்.[7] இலங்கைக் காட்டுக்கோழியானது இப்பூங்காவிலே வசிக்கிற மற்றொரு பறவையாகும். சிறுத்த பெருநாரை, yellow-fronted barbet, மற்றும் Sri Lanka spurfowl போன்ற இனங்கள் பூங்காவிலுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் நீரோடைகளுக்கு விஜயம் செய்ய கூடியன. மயில், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் மற்றும் கரண்டிவாயன் போன்றன பூங்காவிலுள்ள பிற நீர்வாழ் பறவைகளாகும்.  மேலும் அரிய வகையான Sri Lanka frogmouth ஐ இப்பூங்காவில் காணலாம். மற்றொரு அரிய வகையான செவ்விறகுக் குயிலை மகாவலி ஆற்றுக்கு அருகில் காணலாம்.

இப்பூங்காவில் மட்டுமே காணப்படுவதும் அருகிய இனமான Fejervarya pulla என்பது பூங்காவிலுள்ள எட்டு ஈரூடகவாழி இனங்களில் ஒன்றாகும்.  மேலும் இப்பூங்காவில் 17 வகையான ஊர்வனைகள் உள்ளன. அவற்றில் 5 வகைகள் இப்பிரதேசத்திற்கே உரியவை.நீர் நிலைகளில்  நீர் உடும்பு மற்றும் முக்கர் முதலை என்பவற்றை பொதுவாக காணக்கூடியதாக உள்ளது. Lankascincus , Calotes ceylonensis மற்றும் Otocryptis wiegmanni போன்ற பல்லி வகைகளும் Chrysopelea taprobanica என்ற பாம்பு வகையும் அழிந்து வரும் ஊர்வனைகள் ஆகும். Garra ceylonensis மற்றும் combtail என்பன இப்பூங்காவில் மட்டுமே அரிதாக காணப்படக்கூடியவைகளாகும். இவை இப்பூங்காவிலுள்ள நீர்வாழ் இருப்பிடங்களில் 17 வகையான மீன்களுக்கு மத்தியில் வசிக்கின்றன. மேலும் இப்பூங்காவில் 50 வண்ணத்துப்பூச்சி வகைகளில் 8 வகையானவை இப்பூங்காவில் மட்டுமே அரிய அளவில் காணப்படுகிறது.

சவால்களும் பாதுகாப்பும்[தொகு]

கிராம வாசிகள் தங்களது கால்நடைகளை பூங்காவினது புல்வெளிகளில் விடுவதனால் காட்டு விலங்குகளுக்கும் உள்ளூர் விலங்குகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு காட்டு விலங்குகளுக்கு நோய் பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.. இம்மந்தைகள் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் குளங்களை பயன்படுத்துவதனால் காட்டு விலங்குகள் இம்மந்தைகளோடு போட்டியிட வேண்டியுள்ளது. மேலும் இம்மந்தைகள் பூங்காவின் மின்சார வேலியை சேதப்படுத்தி சட்ட விரோதமாக உள்நுழைவது பெரிதொரு சவாலாக அமைகிறது. இதை தடுப்பதும் ஒரு கடினமான பிரச்சினையாக இருந்து வருகிறது. யானைகள் கிராம மக்களின் பொருட்களை சேதப்படுத்துவதையும் அவர்கள் மீது அபாயகர தாக்குதல் மேற்கொள்ளுவதையும் பற்றி பூங்காவிலிருந்து அறிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு யானை போக்குவரத்து முகப்பானது வஸ்கமுவ தேசிய பூங்காவில் உத்தேசிக்கப்பட்டு வருகிறது.[8] மேலும் சூழலியலாளர்கள் மொரகஹகந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக பூங்கா பகுதியில் பிரேரிக்கப்பட்டுள்ள மீள் குடியேற்றத்திற்காக கவலை தெரிவித்துள்ளார்கள்.[9] இதற்கான காரணமாக யானை-மனிதன் மோதலின் விளைவு என்று கூறப்படுகிறது.[10]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wasgamuwa National Park
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 (Sinhalese)Senarathna, P.M. (2004). "Wasgomuwa". Sri Lankawe Jathika Vanodhyana (2nd ). Sarasavi Publishers. பக். 173–179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5. 
  2. Nanayakkara, Eeasha; Marasinghe, Ranjan; Amerasinhe, Manjula. "Development and Management of Eco Lodges by Adjoining Communities of Wasgamuwa Park – Pilot Project" (PDF). protectedareas.net. 2016-03-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-07-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Amaleeta, Nimashi (2007-01-07). "Wasgamuwa Calling all nature lovers". The Nation. Archived from the original on 2016-03-03. https://web.archive.org/web/20160303190158/http://www.nation.lk/2007/01/07/eyefea7.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  4. 4.0 4.1 (Sinhalese)Senarathna, P.M. (2005). "Wasgamuwa". Sri Lankawe Wananthara (1st ). Sarasavi Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-401-1. 
  5. வார்ப்புரு:WWF ecoregion
  6. "No Ordinary Tree". exploresrilanka.com. 2009-07-28 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Important Bird Area factsheet: Wasgomuwa, Sri Lanka". birdlife.org. BirdLife International. 2009. 2009-01-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. Jayasuriya, Sanjeevi (2002-01-20). "Eight baby elephants released into national park". The Island. Archived from the original on 2012-03-10. https://web.archive.org/web/20120310142232/http://www.island.lk/2002/01/20/news12.html. பார்த்த நாள்: 2009-07-28. 
  9. Edirisinghe, Dasun (2007-05-19). "Wasgomuwa: threatened with human settlements". The Island. Archived from the original on 2012-10-12. https://web.archive.org/web/20121012170858/http://www.island.lk/2007/05/19/satmag1.html. பார்த்த நாள்: 2009-07-28. 
  10. Jayewardene, Sunela (2008-01-13). "Chasing elephants is not the answer". The Sunday Times. http://sundaytimes.lk/080113/Plus/plus0009.html. பார்த்த நாள்: 2009-07-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்கமுவை_தேசிய_வனம்&oldid=3400075" இருந்து மீள்விக்கப்பட்டது