ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்
இராமர் பாலம் கடல்சார் தேசிய வனம்
Map showing the location of ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்
Map showing the location of ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்
ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம்
வட மாகாணத்தில் அமைவிடம்
அமைவிடம்வட மாகாணம்
கிட்டிய நகரம்மன்னார்
ஆள்கூறுகள்09°04′15″N 79°37′42″E / 9.07083°N 79.62833°E / 9.07083; 79.62833ஆள்கூறுகள்: 09°04′15″N 79°37′42″E / 9.07083°N 79.62833°E / 9.07083; 79.62833
பரப்பளவு190 km2 (73 sq mi)
நிறுவப்பட்டது22 சூன் 2015 (2015-06-22)
நிருவாகிDepartment of Wildlife Conservation (Sri Lanka)

ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம் (Adam's Bridge Marine National Park) என்பது ஆதாமின் பாலம் சுற்றுவட்டாரத்தில் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள ஒரு தேசிய வனம் ஆகும். இது மன்னார் தென் மேற்கிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் என்பவற்றின் உதவியோடு அரசாங்கம் வட மாகாணத்தில் ஓர் ஒருங்கிணைந்த தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீட்டைச் செய்து 2014 இல் வெளியிட்டது. அதன்படி 18,990 ha (46,925 ஏக்கர்கள்) பரப்பளவு ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.[1][2] மே 2015 இல் அரசாங்கம் நெடுந்தீவு தேசிய வனம், சுண்டிக்குளம் தேசிய வனம், மடு வீதி தேசிய வனம் என்பவற்றுடன் இதனையும் தேசிய வனமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.[3] ஆதாமின் பாலம்22 சூன் 2015 அன்று 18,990 ha (46,925 ஏக்கர்கள்) பரப்பளவுடன் தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.[4][5]

உசாத்துணை[தொகு]