புறாத்தீவு தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புறாத்தீவு தேசிய பூங்கா
Pigeon Island National Park
Pigeon Island National Park.JPG
புறாத்தீவு தேசிய பூங்கா நுளைவு
{{{float_caption}}}
{{{base_caption}}}
புறாத்தீவு தேசிய பூங்கா
அமைவிடம்கிழக்கு மாகாணம், இலங்கை
கிட்டிய நகரம்திருகோணமலை
ஆள்கூறுகள்8°43′N 81°12′E / 8.717°N 81.200°E / 8.717; 81.200ஆள்கூறுகள்: 8°43′N 81°12′E / 8.717°N 81.200°E / 8.717; 81.200
பரப்பளவு471.4 எக்டேர்கள் (1.820 sq mi)
நிறுவப்பட்டது2003
நிருவாக அமைப்புவனவுயிர் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை

புறாத்தீவு தேசியப் பூங்கா (Pigeon Island National Park, உள்ளூர் வழக்கு: புறா மலை) என்பது இலங்கையிலுள்ள இரு கடல்சார் தேசியப் பூங்காக்களில் ஒன்று. இப்பூங்கா கிழக்கு மாகாணத்திலுள்ள நிலாவெளி கடற்கரையிலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பெயர் அங்கு வாழும் பாறைப் புறாவின் பெயரால் ஏற்பட்டது. இத் தேசியப் பூங்கா இலங்கையிலுள்ள சிறந்த பவளப் பாறைகள் சிலவற்றைக் கொண்டுள்ளது.[1] புறாத்தீவு 1963இல் புகலிடமாகக் குறிக்கப்பட்டது. 2003 இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இத்தேசியப் பூங்கா இலங்கையில் 17வது தேசியப் பூங்காவாகும். பிரித்தானிய இலங்கையில் இது சுடு பயிற்சித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.[2] புறாத்தீவு 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களில் சிலவற்றில் ஒன்றாகும்.[3]

பெளதீக அமிசங்கள்[தொகு]

புறா மலை

புறாத்தீவு இரு தீவுகளைக் கொண்டு, பெரிய புறாத்தீவும் சிறிய புறாத்தீவும் ஆக காணப்படுகின்றது. பெரிய புறாத்தீவு கரையில் பவளப் பாறைகளைக் கொண்டு 200 மீ நீளமாகவும், 100 மீ அகலமாகவும் காணப்படுகின்றது. சிறிய புறாத்தீவு பாறை திட்டுக்களினால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. இத் தேசிய பூங்கா இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படுகின்றது. இதன் வருடாந்த வெப்பநிலை 27.0 °C (80.6 °F) ஆகும்.[1] வருடாந்த மழைவீழ்ச்சி 1,000–1,700 milliமீட்டர்கள் (39–67 in)க்கு இடைப்பட்டதாகும். இது ஒக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதிக மழையினைப் பெறுகின்றது.

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pigeon Island National Park". iwmi.org. International Water Management Institute. 2011-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. (சிங்கள மொழி) Senarathna, P.M. (2009). Sri Lankawe Jathika Vanodhyana (2nd ). Sarasavi Publishers. பக். 220–221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5. 
  3. Kariyawasam, Dayananda (3 March 2005). "Major plan under way to restore Lanka's natural ecosystems". Daily News. Archived from the original on 2012-10-10. https://web.archive.org/web/20121010202117/http://www.dailynews.lk/2005/03/03/fea01.html. பார்த்த நாள்: 2009-06-22.