அறிவியல் முதுகலைக்கு கூட்டுச் சேர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை (Joint Admission Test for Masters) (JAM) என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் முதுநிலை அறிவியல் மற்றும் இளநிலை அறிவியல் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு பாடங்களுக்கான சேர்க்கையை ஒருங்கிணைக்க 2004-2005 கல்வியாண்டிலிருந்து நடத்தும் தேர்வாகும். முதநிலை அறிவியல், முதுநிலை-முனைவர் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மற்றும் இளநிலை அறிவியல் பட்டத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளும் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒரே தேர்வின் மூலம் சேர்க்கையை நடத்துவதும் அறிவியலை ஒரு பணிவிருப்பாக அறிவுத்திறனுள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்வதும் இத்தேர்வின் குறிக்கோள். நாளடைவில் இத்தேர்வு நாட்டின் பட்டப்படிப்பில் அறிவியல் கல்வித் தரத்தின் தரக்குறியீடாக விளங்கும்.

வெளியிணைப்புகள்[தொகு]