உள்ளடக்கத்துக்குச் செல்

அரேபியன் ஓரிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Oryx|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
அரேபியன் ஓரிக்ஸ்
Arabian oryx
துபாய் பாலைவனப் பாதுகாப்புக் காப்பகத்தில் ஒரு ஆண் மான்
CITES Appendix I (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Oryx
இனம்:
இருசொற் பெயரீடு
Oryx leucoryx
(Pallas, 1777)

அரேபியன் ஓரிக்ஸ் அல்லது வெள்ளை ஓரிக்ஸ் (Arabian oryx or white oryx) என்பது ஒரு நடுத்தர அளவிலான மறிமான் ஆகும். இது ஒரு தனித்துவமான தோள்பட்டை, நீண்ட, நேரான கொம்புகள் மற்றும் குஞ்சம் உள்ள வாலைக் கொண்டது.[2] இது அரபுத் தீபகற்பத்தின் பாலைவன மற்றும் புல்வெளிப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க மறிமான் பேரினத்தைச் சேர்ந்த, மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மிகச்சிறிய ஒரு உறுப்பினராகும். அரேபிய ஓரிக்ஸ் 1970 களின் முற்பகுதியில் அவற்றின் பாரம்பரிய வாழிடத்தில் அற்றுவிட்டது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலைகள் மற்றும் தனியார் காப்பகங்களில் பாதுகாக்கபட்டது. மேலும் 1980 இல் தொடங்கி மீண்டும் அதன் பாரம்பரிய வாழிடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1986 ஆம் ஆண்டில், அரேபியன் ஓரிக்ஸ் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் செம்பட்டியலில் அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. மேலும் 2011 ஆம் ஆண்டில், காடுகளில் அழிந்துவிட்டதாக பட்டியலிடப்பட்ட பின்னர் அழிவாய்ப்பு இனம் என்ற நிலைக்குத் திரும்பிய முதல் விலங்கு இதுவாகும். 2016 ஆம் ஆண்டில், காடுகளில் 850 முதிர்ந்த மான்கள் உள்பட மொத்தம் 1,220 மான்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலகலவில், 6,000-7,000 மான்கள் வரை காப்பிடங்களில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

உடற்கூறியல் மற்றும் உருவவியல்

[தொகு]
இஸ்ரேலில் உள்ள யோத்வதா ஹை-பார் இயற்கை காப்பகத்தில்

அரேபியன் ஓரிக்ஸ் நிற்கும்போது தோள்வரை சுமார் 1 மீ (3.3 அடி) உயரம் இருக்கும். இதன் எடை சுமார் 70 கிலோ (150 எல்பி) வரை இருக்கும். இதன் உடல் வெண்மை நிறமானதாகும். உடலின் அடிப்பகுதி மற்றும் கால்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும் தலை கழுத்து, நெற்றியில், மூக்கில், கண் பகுதி முழுவதும் கொம்பிலிருந்து வாய் வரையிலான இடத்தில் கருப்பு பட்டைகள் உண்டு. இரு பாலித்தவைக்கும் நீளமான, நேராக அல்லது சற்று வளைந்த, வளையங்கள் கொண்ட கொம்புகள் உண்டு. அவை 50 முதல் 75 cm (20 முதல் 30 அங்) நீளமானவை.

அரேபியன் ஓரிக்ஸ்கள் பகலில் மணற் குன்றின் சரிவில் வெயில் படாத இடத்தில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இவை மழைப்பொழிவைக் கண்டறிந்து அதை நோக்கி நகரக் கூடியவை. அதாவது இவை பெரிய அளவிலான எல்லைப் பகுதிகளைக் கொண்டுள்ளன; ஓமானில் ஒரு மந்தை 3,000 km2 (1,200 sq mi) க்கும் அதிகமான பரப்பளவில் வாழக்கூடியதாக இருக்கும். மந்தைகளில் இரு பாலினத்தைச் சேர்ந்தவையாகவும், பொதுவாக இரண்டு முதல் 15 மறிமான்கள் வரை இருக்கும். இருப்பினும் ஒரு மந்தையில் 100 வரையிலான மறிமான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரேபியன் ஓரிக்ஸ்கள் பொதுவாக ஒன்றுக்கொன்று சண்டையிடுவது இல்லை. இது மந்தையில் அமைதி நிலவ வழிசெய்கிறது.[3]

அரேபியன் ஓரிக்களை வேட்டையாடுபவைகளாக மனிதர்களுக்கு அடுத்து ஓநாய்கள் மட்டுமே உள்ளன. காடுகளிலும், பாதுகாப்பாக வளர்க்குமிடங்களிலும் அரேபியன் ஓரிக்ஸ்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.[4] வறட்சி காலங்களில், ஊட்டக்குறை மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் இவற்றின் ஆயுட்காலம் கணிசமாகக் குறையலாம். ஆண் மான்களுக்கு இடையேயான சண்டை, பாம்புக்கடி, நோய், வெள்ளத்தின் போது நீரில் மூழ்குதல் ஆகியவை இவற்றின் மரணத்திற்கான பிற காரணங்களாகும்.[5]

பரவல் மற்றும் வாழ்விடம்

[தொகு]

வரலாற்று ரீதியாக, அரேபியன் ஓரிக்ஸ் மத்திய கிழக்கின் பெரும்பகுதி முழுவதும் பரவியிருந்தன. 1800 களின் முற்பகுதியில், இவை சினாய், பாலத்தீனம், திரான்ஸ்ஜோர்டான், ஈராக்கின் பெரும்பகுதி, அறபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டன. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இவற்றின் வாழிட எல்லை சவூதி அரேபியாவை நோக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டது. மேலும் 1914 வாக்கில், சில மட்டுமே அந்த நாட்டிற்கு வெளியே தப்பிப்பிழைத்தன. ஒரு சில மான்கள் ஜோர்டானில் 1930களில் பதிவாகியிருந்தன, ஆனால் 1930களின் நடுப்பகுதியில், வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள நஃபுட் பாலைவனத்திலும் தெற்கில் உள்ள றுப்உல் காலீயில் மட்டுமே எஞ்சியிருந்தன.[2]

1930 களில், அரேபிய இளவரசர்களும் எண்ணெய் நிறுவன எழுத்தர்களும் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் நீள்துப்பாக்கிகள் மூலம் அரேபியன் ஓரிக்சை வேட்டையாடத் தொடங்கினர். வேட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் சிலர் வேட்டைக்கு 300 வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், வடக்குப் பகுதியில் இருந்த மறிமான்கள் முழுமையாக இல்லாமல் அழிந்தன. 1972 ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் காட்டில் இருந்த கடைசி அரேபியன் ஓரிக்ஸ் அறியவந்தது.[6] .

அரேபியன் ஓரிக்ஸ்கள் சரளை பாலைவனம் அல்லது கடினத்தரை பாலைவன மணற் பகுதியில் இருக்க விரும்புகின்றன. அங்கு இவற்றின் வேகம் மற்றும் சகித்துவாழும் தன்மை போன்றவை பெரும்பாலான வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்கும். சவுதி அரேபியாவில் உள்ள மணல் பாலைவனங்களில், மென்மையான குன்றுகள் மற்றும் முகடுகளுக்கு இடையே உள்ள கடினமான மணல் தரைப் பகுதிகளில் இவை காணப்பட்டன.[2]

ஓமன், சவுதி அரேபியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் அரேபியன் ஓரிக்ஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹவார் தீவில், பகுரைனில் ஒரு சிறிய எண்ணிக்கையில் மான்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல தளங்களில் பெருமளவில் அரை-பாதுக்ககபட்ட பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட மொத்த மான்களின் எண்ணிக்கை இப்போதுவரை சுமார் 1,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அருகிய இனம் என்ற நிலைக்குத் தகுதிபெறத் தேவையான 250 வளர்ந்த மான்கள் என்ற எண்ணிக்கைக்கும் கூடுதலான அரேபியன் ஓரிக்ஸ் உள்ளன. இருப்பினும், பெரும்பான்மையான மான்கள் சவுதி அரேபியாவில் குவிந்துள்ளன.[1]

சூழலியல்

[தொகு]

உணவு

[தொகு]

அரேபியன் ஓரிக்ஸின் உணவில் முக்கியமாக புற்கள் உள்ளன. ஆனால் இவை மொட்டுகள், செடிகள், பழங்கள், கிழங்குகள், வேர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்களையும் அவற்றின் பகுதிகளையும் சாப்பிடுகின்றன. அரேபியன் ஓரிக்ஸின் மந்தைகள் எப்போதாவது மழைப் பெய்யும் பகுதியை நோக்கி நகர்ந்து அங்கு வளரும் புதிய தாவரங்களை சாப்பிடுகின்றன. இவற்றால் தண்ணீர் இல்லாமல் பல வாரங்கள் இருக்க முடியும்.[3]

நடத்தை

[தொகு]

அரேபியன் ஓரிக்ஸ் அதன் வாழ்விடத்தில் அல்லது உணவுக்காக அலையாமல் ஓய்வெடுக்கும் நேரத்தில் புதர்கள் அல்லது மரங்களின் கீழ் மென்மையான நிலத்தில் ஆழமற்ற பள்ளங்களை தோண்டி அதில் படுத்துக் கொள்கிறது. இவை தொலைவில் பெய்யும் மழைப்பொழிவை இங்கிருந்தே கண்டு புதிய தாவர வளர்ச்சி ஏற்படும் பகுதியின் திசையை நோக்கிக் செல்லும் தன்மையைக் கொண்டுள்ளன. ஒரு மந்தையிலுள்ள மான்களின் எண்ணிக்கை பெரிதும் மாறுபடும் (எப்போதாவது 100 வரை பதிவாகும்), ஆனால் சராசரியாக 10 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும்.[7]

பாலைவன சூழலுக்கான தகவமைப்புகள்

[தொகு]

அரேபியன் ஓரிக்ஸ் அதன் உடலியல் மற்றும் நடத்தையை ஆண்டின் வெவ்வேறு காலத்துக்கு ஏற்ப மாற்றி, உணவும், நீரும் குறைவாக இருக்கும் காலங்களில் உயிர்வாழ்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்கின்றன. கோடைக் காலத்தில், இவை வாழும் பாலைவனச் சூழல்களில் பொதுவாக வறட்சி இருக்கும் போது, அரேபியன் ஓரிக்ஸ் பகலில் நிழல் தரும் மரங்களுக்கு அடியில் முற்றிலும் செயலற்ற நிலையில் கிடப்பதனாலும். இரவில் சிறிய எல்லைப் பகுதிகளில் தீவனம் தேடுவதன் மூலமும் இது வளர்ச்சிதை மாற்றத்தை வெகுவாக குறைத்துக் கொள்கிறது.[8] பகல் வெப்பத்தின் போது இதன் உடல் வெப்பநிலையை அதிகரிக்க விடுவதன் மூலம், உடலைக் குளிர்விக்க உடலில் உள்ள நீர்சத்தை குறைவாகவே ஆவியாக்குகிறது. இதனால் உடலில் உள்ள நீரை மிகுதியாக தக்கவைத்துக் கொள்கிறது. பின்னர் இரவில் வீசும் குளிர்ந்த இரவு காற்றினால் உடல் வெப்பநிலையை சாதாரண நிலைக்கு மீண்டும் குறைத்துக் கொள்கிறது.[9]

மனிதர் வாழ்வில்

[தொகு]
ஒரு தென் அரேபிய சிற்பத்தூண் துண்டில், சாய்ந்திருக்கும் ஐபெக்ஸ் காட்டாடு மற்றும் மூன்று அரேபியன் ஓரிக்ஸ்சின் தலைகளை சித்தரிக்கபட்டுள்ள. ஐபெக்ஸ் மான் தென் அரேபியாவில் மிகவும் புனிதமான விலங்குகளில் ஒன்றாகும், அதே நேரத்தில் ஓரிக்ஸ் மான் அத்தர் கடவுளுடன் தொடர்புடையது. இந்த சிறபத்தின் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டு.

அரேபியன் ஓரிக்ஸ் யோர்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,[10] பகுரைன், கத்தார் ஆகியவற்றின் தேசிய விலங்கு ஆகும்.[11]

அரேபியன் ஓரிக்ஸ் என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள பல வணிக நிறுவனங்களின் பெயராகும், குறிப்பாக அல் மஹா ஏர்வேஸ் மற்றும் அல் மஹா பெட்ரோலியம் போன்றவை இப்பயரைப் பயன்படுத்துகின்றன.

2006 ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ விளையாட்டு சின்னமாக "ஓரி" என்று பெயரிடப்பட்ட கத்தார் ஓரிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.[12] மேலும் மத்திய கிழக்கு விமான நிறுவனமான கத்தார் ஏர்வேசுக்கு சொந்தமான விமானங்களின் வால் பகுதியில் அதன் படம் இடமெபெற்றது.

யூனிகார்ன் தொன்மம்

[தொகு]

ஒற்றைக் கொம்பு கொண்ட கொம்புக் குதிரை குறித்த கதை ஒரு கொம்பை இழந்த ஓரிக்சை அடிப்படையாகக் கொண்டது. அரிசுட்டாட்டில் மற்றும் மூத்த பிளினி ஆகியோர் ஓரிக்சை யூனிகார்னின் "முன்மாதிரி" என்று கருதினர். சில கோணங்களில் பார்க்கும் போது, ஓரிக்சின் இரண்டைக் கொம்புகளுக்கு பதிலாக ஒற்றைக் கொம்பு இருப்பதாகத் தோன்றலாம்,[13] மேலும் இதன் கொம்புகள் ஏதாவது ஒரு காரணத்தினால் உடைந்தால் மீண்டும் வளர முடியாத தன்மைக் கொண்டவை. இதனால் அரேபியன் ஓரிக்ஸ் அதன் கொம்புகளில் ஒன்றை இழந்தால், அது தன் வாழ்நாள் முழுவதும் ஒற்றைக் கொம்புடன்மட்டுமே இருக்கும்.

பாதுகாப்பு

[தொகு]
அபுதாபி அமீரகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அல் ஐன் உயிரியல் பூங்காவில்.

பீனிக்ஸ் விலங்குக்காட்சிசாலை மற்றும் லண்டனின் விலங்கினங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு சங்கம் (தற்போது விலங்கினங்கள் மற்றும் ஃப்ளோரா இன்டர்நேஷனல் ), இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் நிதி உதவியுடன், அரேபியன் ஓரிக்சை அழிவிலிருந்து காப்பாற்றிய பெருமைக்குரியது. 1962 ஆம் ஆண்டில், இந்த குழுக்கள் பீனிக்ஸ் மிருகக்காட்சிசாலையில், சில நேரங்களில் " ஓரிக்ஸ் நடவடிக்கை" என்று குறிப்பிடப்படும் காப்புப் பணிகள் துவங்கின.[14][15] இதில் ஒன்பது விலங்குகள் கொண்ட மந்தையைக் கொண்டு தொடங்கி, பீனிக்ஸ் விலங்கு காட்சி சாலையில் 240 பிறப்புகள் வெற்றிகரமாக உண்டாயின. பீனிக்ஸ் நகரிலிருந்து, அரேபியன் ஓரிக்ஸ்கள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு புதிய மந்தைகளைத் உருவாக்க அனுப்பப்பட்டன.

1968 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமாரகத்தைச் சேர்ந்த சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான், வனவிலங்குகள், குறிப்பாக அரேபிய ஓரிக்ஸ் போன்ற குளம்பிகள் மீது அக்கறை கொண்டு, அவற்றைப் பாதுகாக்க அல் ஐன் உயிரியல் பூங்காவை நிறுவினார்.[16]

அரேபியன் ஓரிக்ஸ்கள் 1972 இல் அதன் பாரம்பரிய வாழிடங்களில் வேட்டையாடப்பட்டு அற்றுவிட்டன. 1980 வாக்கில், விலங்கு காட்சி சாலைகளில் வளர்க்கபடும் அரேபியன் ஓரிக்சின் எண்ணிக்கை அதிகரித்து. இதனால் இவை மீண்டும் வனங்களில் அறிமுகப்படுத்தபட்டன. சான் டியாகோ காட்டு விலங்கு பூங்காவில் இருந்து அரேபியன் ஓரிக்ஸ்களைக் கொண்டு ஓமானில் மறு அறிமுக முயற்சி மேற்கொள்ளபட்டது.[6] ஓமானில் இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இப்போது சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலிலும் பாலைவனங்களில் இந்த மான்கள் உள்ளன.[17][18] . சவூதி அரேபியாவில் 2,000 கிமீ 2 அதிகமான பரப்பளவைக் கொண்ட ஒரு பெரிய, வேலியிடப்பட்ட காப்பகமான மஹாசத் அஸ்-சைட் பாதுகாக்கப்பட்ட பகுதியில் மிகப்பெரியருமளவிலான எண்ணிக்கையில் இந்த மான்கள் உள்ளன.[1]

2011 சூனில், அரேபியன் ஓரிக்ஸ் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக மீண்டும் பட்டியலிடப்பட்டது. 4 திசம்பர் 2020 நிலவரப்படி 1,200 க்கும் மேற்பட்ட அரேபியன் ஓரிக்ஸ்கள் காடுகளில் வாழ்வதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் மதிப்பிட்டுள்ளது. 6,000–7,000 வரையிலான இந்த மான்கள் உலகளவில் உயிரியல் பூங்காக்கள், பாதுகாப்பிடங்கள் மற்றும் தனியார் வளர்ப்பிடங்களில் வளர்க்கபட்டு வருகின்றன. இவற்றில் சில, சிரியா (அல் தலிலா), பகுரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பெரிய, வேலிகள் இடப்பட்டு பாதுகாக்கபட்ட திறந்த வெளி இடங்களில் உள்ளன.[1] காடுகளில் அழிந்துவிட்டதாக பட்டியலிடப்பட்ட பின்னர், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அழியவாய்ப்பு இனமாக மறுவகைப்படுத்தபட்டது இதுவே முதல் முறை.[1]

28, சூன், 2007 அன்று, ஓமானின் அரேபியன் ஓரிக்ஸ் சரணாலயம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட முதல் தளமாகும். இதற்கு யுனெஸ்கோவின் காரணம், ஓமன் அரசாங்கம் இத்தளத்தின் 90% பகுதியை எண்ணெய் ஆய்வுக்காக திறக்க முடிவு செய்தது ஆகும். இந்த தளத்தில் உள்ள அரேபியன் ஓரிக்ஸ் மான்களின் எண்ணிக்கை 1996 இல் 450 இல் இருந்து 2007 இல் 65 ஆகக் குறைந்துவிட்டது. இப்போது, நான்குக்கும் குறைவான இனப்பெருக்க தகுதிவாய்ந்த இணைகள் தளத்தில் உள்ளன.[19]

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 IUCN SSC Antelope Specialist Group (2017). "Oryx leucoryx". IUCN Red List of Threatened Species. 2017: e.T15569A50191626. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T15569A50191626.en. Retrieved 16 January 2022.
  2. 2.0 2.1 2.2 Talbot, L.M. (1960). A Look at Threatened Species. The Fauna Preservation Society. pp. 84–91.
  3. 3.0 3.1 Paul Massicot (2007-02-13). "Arabian Oryx". Animal Info. Archived from the original on 25 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-11.
  4. "Arabian Oryx". The Phoenix Zoo. Archived from the original on 15 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-27.
  5. "The Oryx Facts". The Arabian Oryx Project. Archived from the original on 12 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-27.
  6. 6.0 6.1 Stanley-Price, Mark (July–August 1982). "The Yalooni Transfer". Saudi Aramco World. Archived from the original on 2011-06-10. பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.
  7. Leu, H. (2001) "Oryx leucoryx" (On-line), Animal Diversity Web.
  8. Williams, Joseph B.; Ostrowski, Stéphane; Bedin, Eric; Ismail, Khairi (2001-07-01). "Seasonal variation in energy expenditure, water flux and food consumption of Arabian oryx Oryx leucoryx". Journal of Experimental Biology 204 (13): 2301–2311. doi:10.1242/jeb.204.13.2301. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9145. பப்மெட்:11507113. http://dx.doi.org/10.1242/jeb.204.13.2301. 
  9. "Animals at the extremes: The desert environment". June 10, 2019. Archived from the original on 2017-01-05. பார்க்கப்பட்ட நாள் November 8, 2021.
  10. "The UAE National Symbols...". TEACH United Arab Emirates (Jess Jumeira School) 2 (2). Nov–Dec 2014. http://www.joomag.com/magazine/teach-uae-magazine-issue-2-volume-2-nov-dec-2014/0289202001417014217?page=35. 
  11. Tamra Orr (30 June 2008). Qatar. Marshall Cavendish. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-2566-3. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.
  12. "Mascot of Asian Games 2006". Travour.com. Archived from the original on 16 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-07.
  13. "Arabian Oryx". Natural History Museum of Los Angeles County. Archived from the original on 2007-10-10. பார்க்கப்பட்ட நாள் 2008-01-25.
  14. The Arabian Oryx Project – Timeline. oryxoman.com
  15. Phoenix Zoo Species Survival Plan பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்.
  16. "History". Al Ain Zoo. 15 October 2017. Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  17. Saltz, D. (1998). "A long-term systematic approach to planning reintroductions: the Persian fallow deer and the Arabian oryx in Israel". Animal Conservation 1 (4): 245. doi:10.1111/j.1469-1795.1998.tb00035.x. 
  18. Gilad, O.; Grant, W.E.; Saltz, D. (2008). "Simulated dynamics of Arabian Oryx (Oryx leucoryx) in the Israeli Negev: Effects of migration corridors and post-reintroduction changes in natality on population viability". Ecological Modelling 210 (1–2): 169. doi:10.1016/j.ecolmodel.2007.07.015. 
  19. "Oman's Arabian Oryx Sanctuary: first site ever to be deleted from UNESCO's World Heritage List". UNESCO World Heritage Centre. Archived from the original on 18 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபியன்_ஓரிக்ஸ்&oldid=4110604" இலிருந்து மீள்விக்கப்பட்டது