உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இந்திய மகளிர் காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய மகளிர் காங்கிரசு
சுருக்கம்AIMC
உருவாக்கம்15 செப்டம்பர் 1984 (38 ஆண்டுகளுக்கு முன்னர்)
நிறுவனர்கள்சுசீதா கிர்பலானி,
இந்திய தேசிய காங்கிரசு
தலைமையகம்24, அக்பர் சாலை, புது தில்லி 110001
National President
Netta D'Souza
தேசியச் செயலர்
ஐசுவரியா மகாதேவ்
தாய் அமைப்பு
இந்திய தேசிய காங்கிரசு
வலைத்தளம்https://www.inc.in/all-india-mahila-congress

அகில இந்திய மகளிர் காங்கிரசு (All India Mahila Congress) என்பது இந்திய தேசிய காங்கிரசின் மகளிர் பிரிவாகும்.[1] மிகச் சமீபத்தில் இதன் தலைவி சுசுமிதா தேவ் 2021-ல் பதவி விலகியதால் தற்போது நெட்டா டிசோசா அகில இந்திய மகளிர் காங்கிரசின் செயல் தலைவராக 17 ஆகத்து 2021 அன்று காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டார்.[2][3][4]

வரலாறு

[தொகு]

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் 30,000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட 1984ஆம் ஆண்டின் மத்தியில் பெங்களூரில் நடைபெற்ற மாநாடுதான் இந்த அமைப்பின் ஆரம்பக்கால குறிப்பிடத்தக்கக் கூட்டமாகும்.[5]

அமைப்பு

[தொகு]

அகில இந்திய மகளிர் காங்கிரசு மாநிலந்தோறும் கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் oன்றிய பிரதேசங்களில் அகில இந்திய மகளிர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில மகளிர் காங்கிரசு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.[6]

பிரதேச மகிளா காங்கிரஸ் கமிட்டிகளின் பட்டியல்
மாநிலம் தலைவர் ஆதாரம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் டி.எம்.சி.சி நீலவேணி [7]
ஆந்திர பிரதேச பி.எம்.சி.சி கே.பிரமீலாம்மா [8]
அருணாச்சல பிரதேசம் மெரினா காங்லாங் [9]
அசாம் மீரா போர்தாகூர் கோஸ்வாமி [10]
பீகார் அமிதா பூஷன் [11]
சண்டிகர் தீபா அஸ்திர் துபே [12]
சத்தீஸ்கர் பூலோ தேவி நேதம்
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ
தில்லி அம்ரிதா தவான்
கோவா பீனா சாந்தாராம் நாயக் [13]
குஜராத் ஜென்னி தும்மர் [14]
அரியானா சுமித்ரா சவுகான்
இமாச்சலப் பிரதேசம் ஜைனப் சாண்டல் [15]
ஜம்மு காஷ்மீர் இந்து பவார் [16]
சார்க்கண்டு
கருநாடகம்
கேரளா ஜெபி மாதர்
லடாக்
லட்சத்தீவு
மத்தியப் பிரதேசம் மாண்டவி சவுகான்
மகாராட்டிரம் திருமதி. சாருலதா டோகாஸ்
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
மும்பை அனிஷா பகுல்
நாகாலாந்து
ஒடிசா பண்டிதா பரிதா
புதுச்சேரி
பஞ்சாப் ஸ்ரீமதி. பல்வீர் சோதி (ராணி)
ராஜஸ்தான் ஸ்ரீமதி. ரெஹானா ராயஸ் சிஸ்டி
சிக்கிம்
தமிழ்நாடு
தெலங்காணா சுனிதா ராவ் முதிராஜ்
திரிபுரா
உத்தராகண்டம்
உத்தரப்பிரதேசம் ஆராதனா மிஸ்ரா
மேற்கு வங்காளம்

தலைவர்களின் பட்டியல்

[தொகு]
பெயர் காலம்
பேகம் அபிதா அகமது 1983–1988
ஜெயந்தி பட்நாயக் 1988–1990 [17]
குமுத்பென் ஜோஷி 1990–1993
கிரிஜா வியாஸ் 1993–1998
அம்பிகா சோனி 1998–1999
சந்திரேஷ் குமாரி கடோச் 1999–2003
ரீட்டா பகுகுணா ஜோஷி 2003–2008
பிரபா தாக்கூர் 2008–2011
அனிதா வர்மா 2011–2013
ஷோபா ஓசா 2013–2017
சுசுமிதா தேவ் 2017–2021[3]
நெட்டா டிசோசா தற்போதைய

பொதுச்செயலர்

[தொகு]

அக்டோபர் 2015-ல், முன்பு திரைப்பட நடிகையாக இருந்த நக்மா, அலுவலக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[18] சனவரி 2019-ல் இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, அப்சரா ரெட்டியை தேசிய பொதுச் செயலாளராக நியமித்தார், ரெட்டி இப்பதவியினை வகிக்கும் முதல் திருநங்கை ஆவார்.[19]

மார்ச் 2020-ல், ஐசுவர்யா மகாதேவ் இதன் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆகத்து 2021-ல், நெட்டா டிசோசா தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Singh (2003).
  2. The New Indian Express (2019).
  3. 3.0 3.1 "Sushmita Dev, Who Backed CAA, Quits Cong; Kapil Sibal Says 'Party Moves on with Eyes Wide Open'". News18. 16 August 2021.
  4. "Congress appoints Netta D'Souza as acting president of Mahila Congress". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-appoints-netta-dsouza-as-acting-president-of-mahila-congress/articleshow/85406081.cms. 
  5. Badhwar (2014).
  6. Kumar (1990).
  7. sanjib (2017-04-18). "New State President of Mahila Congress Committee appointed". Andaman Sheekha (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-11.
  8. "Prameelamma to head A.P. Mahila Congress" (in en-IN). 2021-06-03. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/prameelamma-to-head-ap-mahila-congress/article34720433.ece. 
  9. "Arunachal: APMCC conducts motivational and leadership awareness programme for women in grassroot level". Arunachal24 (in அமெரிக்க ஆங்கிலம்). 8 December 2021. Retrieved 2022-12-02.
  10. NEWS, NE NOW (2022-03-23). "Mira Borthakur appointed as president of Assam Pradesh Mahila Congress". Northeast Now (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-02.
  11. Madan Kumar (Feb 21, 2014). "State Mahila Congress chief to expose government | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-12-02.
  12. ANI (2019-11-17). "Deipa Asdhir Dubey appointed as Chandigarh Mahila Congress President". https://www.business-standard.com/article/news-ani/deipa-asdhir-dubey-appointed-as-chandigarh-mahila-congress-president-119111700613_1.html. 
  13. "Goa Congress Women's Wing Chief Pratima Coutinho Joins AAP". NDTV.com. Retrieved 2022-12-02.
  14. "Gujarat: Jenny Thummar appointed Mahila Congress chief". The Indian Express (in ஆங்கிலம்). 2022-03-28. Retrieved 2022-12-02.
  15. "Women not safe under BJP rule: Himachal Mahila Cong chief". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2022-12-02.
  16. "J&K Mahile Congress takes out protest march over women rights". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-03-09. Retrieved 2022-12-02.
  17. PoI (2014).
  18. PTI (2015).
  19. Newsd (2019).
  20. CTBUREAU NTB (2020).

வெளி இணைப்புகள்

[தொகு]