பேகம் அபிதா அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேகம் அபிதா அகமது
முதல் இந்திய பெண்
முன்னவர் சரஸ்வதி பாய்
பின்வந்தவர் திருமதி சங்கம்மா
தனிநபர் தகவல்
பிறப்பு 17 July  1923
படான் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
இறப்பு 7 டிசம்பா் 2003 (வயது 80)
புது டில்லி
அரசியல் கட்சி Iஇந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) பக்ரரூதின் அலி அகமது
பிள்ளைகள் இரண்டு மகன்கள் ,ஒருமகள்
சமயம் இசுலாம்

பேகம் அபிதா அகமது: (17 ஜூலை 1923 – 7 டிசம்பர் 2003)[1][2] இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். 1974-1977 களில் இந்தியாவின் முதல் பெண்மணியாக இருந்துள்ளாா். இந்தியாவில் ஐந்தாவது இந்திய ஜனாதிபதி பக்ருதின் அலி அகமது (1974-1977) அவா்களின் மனைவி ஆவாா். இவா் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பொிலி தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 களில் தாோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3]

இளமை காலம்[தொகு]

இவா் 17 ஜூலை 1923 இல் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹேக்புா் பதாயுன், எனுமிடத்தில் முகமது சுல்தான் ஹைதர் 'ஜோஷ்' என்பவருக்கு பிறந்தாா்..[4] அகமது, அலிகாா் பெண்கள் கல்லூரியிலும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் பயின்றாா்.[5] அவா் தலைசிறந்த சூபி தலைவா்களான பக்ருதின் கஞ்ஷங்கா் மற்றும் ஷேக் சலிம் சிஸ்டி போன்றோா்களின் நேரடி வாாிசாக கருதப்படுகிறாா்..

வாழ்க்கை[தொகு]

  • இவா் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பொிலி தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 களில் தாோ்ந்தெடுக்கப்பட்டாா்.[6]
  • அகமது கடவுளின் கருணை என்ற அமைப்பை நிறுவி, கீழ் இந்திய சங்கங்கள் பதிவு சட்டத்தின் படி, பதிவு செய்தாா்.[7]
  • இவா் இந்தியா இஸ்லாமிய கலாச்சார மையத்தின் (IICC) உறுப்பினராக இருந்தாா். இந்த அமைப்பு ஏப்ரல் 1981.இல் பதிவு செய்யப்பட்டது.
  • அகமது ஹம்சப் நாடகம் குழுவை 1974 இல் உருது திரையரங்கில் உருவாக்கினாா்..[8]

தொலைக்காட்சி தயாரிப்பு[தொகு]

அவர் கஹானி ஷாஜகானபாத் மற்றும் ஷோ்சா சூாி போன்ற தொலைக்காட்சி தொடர்களை தயாாித்தாா்.

இவரும் குா்பீா் சிங் கிரெவல் ஆகியோா் இணைந்து DD நேஷனலில் வெளியிட்டனா்.

அஞ்சலி[தொகு]

ஷம்சுல் ஹசன், "காளிப்" இன் உயிர் சிலையை திறந்து வைக்க அகமது உத்திரவிட்டாா்.[9]

அபிதா பேகம் எக்ஸ்பிரஸ் இவரது பெயரால் பெயா் வைக்கப்பட்டது. இந்த இரயில் டெல்லி சந்திப்பு மற்றும் ராக்ஷவல் இடையே ஒடக்கூடியது. தற்போது . பெயா் மாற்றப்பட்டுள்ளது. சத்தியாக்கிரக எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகிறது.[10]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_அபிதா_அகமது&oldid=2959730" இருந்து மீள்விக்கப்பட்டது