கிறிஸ்தவப் பகுதி
Appearance
கிறிஸ்தவப் பகுதி (எபிரேயம்: הרובע הנוצרי Ha'Rova Ha'Notzrí, அரபு மொழி: حارة النصارى Harat al-Nasarí) சுவருள்ள எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு புராதன பகுதிகளில் ஒன்று ஆகும். யூதப் பகுதி, இசுலாமியப் பகுதி, ஆர்மேனியப் பகுதி ஆகிய ஏனைய மூன்று பகுதிகளாகும். கிறிஸ்தவப் பகுதி பழைய நகர் வடமேல் மூலையில் அமைந்துள்ளது. வடக்கே புதிய வாயில், யோப்பா வாயிலுள்ள பழைய நகரின் மேற்குச் சுவர், தெற்கே யோப்பா - மேற்குச் சுவர் வழி, ஆர்மேனியப் பகுதி மற்றும் யூதப் பகுதி எல்லை, கிழக்கே இசுலாமியப் பகுதி எல்லையான தமஸ்கு வாயில் என நீண்டு செல்கின்றது. கிறிஸ்தவப் பகுதி கிட்டத்தட்ட 40 கிறிஸ்தவ புனித இடங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கிறிஸ்தவத்தின் அதி புனித இடங்களில் ஒன்றாகிய திருக்கல்லறைத் தேவாலயம் அங்கு காணப்படுகின்றது.[1]
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Christian quarter (Jerusalem) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
உசாத்துணை
[தொகு]- David Croyanker' "Jerusalem - an architectural point of view", Keter Publishings, 1996.