புன்னகை பூவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புன்னகை பூவே
இயக்கம்சபாபதி தட்சிணாமூர்த்தி
தயாரிப்புகலைப்புலி எஸ். தாணு
திரைக்கதைடி. சபாபதி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புநந்தா
ரேகா வேதவியாஸ்
காவேரி
வடிவேலு (நடிகர்)
ஒளிப்பதிவுசுரேஷ் தேவன்
படத்தொகுப்புமு. காசி விசுவநாதன்
கலையகம்வி. கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 20, 2003 (2003-04-20)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புன்னகை பூவே (Punnagai Poove) என்பது 2003 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். என். ஆர். மனோகர் எழுதி, சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கிய இப்படத்தில் மௌனம் பேசியதே புகழ் நந்தா, புதுமுகம் ரேகா வேதவியாஸ், காவேரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க வடிவேலு, செந்தில், எம். எஸ் .விஸ்வநாதன் ஆகியோர் பிற துணை வேடங்களில் நடிதுள்ளனர். கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும், பாலிவுட் நடிகையுமான சரிகா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் வழியாக மீண்டும் நடிக்க வந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்தார். அவர் இயக்குனர் சபாபதி தீட்சிணாமூர்த்தியுடன் இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்தார். 3 நவம்பர் 2002 அன்று வெளியிடப்பட்ட பாடல் பதிவில், அறிவுமதி, பா. விஜய், பழனி பாரதி, எம். ரத்னகுமார் ஆகியோரால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள் உள்ளன. முதன்முறையாக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்பட்டதின் வழியாக திரைப்படத்தில் தோன்றினார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வீனஸ் வீனஸ் பெண்ணே"  தேவன், ஹரிணி 4:42
2. "வானம் தூவும் பூ மழையே"  ஹரிஷ் ராகவேந்திரா, கோவை ரஞ்சனி 4:21
3. "ஏனோ உயிர்மேலே"  பவதாரிணி 2:16
4. "ஜாகிங் செய்யும் சீசர்"  பாப் ஷாலினி 1:55
5. "திலக்காணி கானா"  கார்த்திக், திப்பு 3:27
6. "சிறகாகி போனதே"  சுசித்ரா, கங்கா, கோவை ரஞ்சனி 1:48
7. "ஒரு பூங்கிளி"  ஸ்ரீநிவாஸ், பிரசன்னா 4:45
8. "என் காதலி"  யுவன் சங்கர் ராஜா 3:24
மொத்த நீளம்:
26:38
இசைப்பதிவில் இல்லதவை

படத்தில் இடம்பெற்ற பாடல் பதிவில் இல்லாத பாடல் பின்வருமாறு:

  1. "இது இன்னிசையா" - யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஹேமா சர்தேசாய், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பாடியது

வெளியீடு[தொகு]

படம் 20 ஏப்ரல் 2003 அன்று வெளியிடப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "Sarika makes a comeback". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "The Hindu : "Punnagai Poovae"". www.thehindu.com. Archived from the original on 2003-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னகை_பூவே&oldid=3660512" இலிருந்து மீள்விக்கப்பட்டது