நந்தா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தா துரைராஜ்
பிறப்புகோவிந்த் செந்தரம்பாளையம் துரைராஜ்
கோயமுத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்நந்தா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002- தற்போது வரை

நந்தா என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[1] சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.[2] இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர், கோவையில் துரைராஜ் - ராணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கார்த்திக் என்ற இளைய சகோதரர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பனின் பேரன் ஆவார்.

திரைப்பட விபரம்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2002 மௌனம் பேசியதே கண்ணன்
2003 புன்னகை பூவே வெங்கட்
2005 கோடம்பாக்கம் சுகவண்ணன்
செல்வம் செல்வம் /கண்ணன்
அகரம் திரு
2006 ஆணிவேர் மருத்துவர் நந்தா
2007 உற்சாகம் கணேசன்
2009 ஈரம் பாலகிருஷ்ணன் பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2010 ஆனந்தபுரத்து வீடு பாலா
2011 வந்தான் வென்றான் ரமணா
வேலூர் மாவட்டம் முத்துக்குமார்
2014 அதிதி மதியழகன் [3]
2015 கதம் கதம் நந்தா
புதிய திருப்பங்கள் ஆதித்யா முன் தயாரிப்பு
வில்லங்கம் படப்பிடிப்பில் [4]
அதிபர் டேவிட் படப்பிடிப்பில்

பின்னணி குரல் கொடுத்தவை[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர் குறிப்புகள்
2014 ஜே சி டேனியல் பிரித்விராஜ் செல்லுலாய்டு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sify.com/movies/nanda-weds-vidyaroopa-imagegallery-kollywood-nhprOmjgcgd.html
  2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/water-water-everywhere-eeram/article659914.ece
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Trouble-in-Nandhaa-Ananyas-paradise/articleshow/26583399.cms
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_(நடிகர்)&oldid=3359458" இருந்து மீள்விக்கப்பட்டது