உள்ளடக்கத்துக்குச் செல்

காசி விசாலாட்சி கோயில்

ஆள்கூறுகள்: 25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E / 25.30889; 83.01083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசி விசாலாட்சி கோயில்
காசி விசாலாட்சி கோயில் is located in உத்தரப் பிரதேசம்
காசி விசாலாட்சி கோயில்
காசி விசாலாட்சி கோயில்
உத்தரப் பிரதேச வாரணாசியில் விசாலாட்சி கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E / 25.30889; 83.01083
பெயர்
வேறு பெயர்(கள்):வாரணாசியில் உள்ள சக்தி பீடம்
பெயர்:விசாலாட்சி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:வாரணாசி
அமைவு:மிர் படித்துறை, வாரணாசி
கோயில் தகவல்கள்
மூலவர்:விசாலாட்சி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1893
அமைத்தவர்:நாட்டுக்கோட்டை நகரத்தார்

காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் படித்துறையில் அமைந்துள்ளது.[1] பார்வதியில் அம்சமான விசாலாட்சிக்காக அமைக்கப்பட்ட இந்துக்கோயில். இக்கோவில் 1893-இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது.[2]

இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3]

பெயர்க் காரணம்

[தொகு]

விசாலாட்சி எனில் அகண்ட கண்களைக் கொண்டவள் என்று பொருள். காசி விசாலாட்சியின் பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]

விசாலாட்சி கோயில், வாரணாசியில் கங்கை கரையில் உள்ள மீர் படித்துறை அருகே அமைந்துள்ளது. இது காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடமேற்கில் 250 மீட்டர் தொலைவிலும், அன்னபூரணி தேவி கோயிலுக்கு மேற்கே 200 மீட்டர் தொலைவிலும் உள்ளது.

சக்தி பீடம்

[தொகு]

இது 51 சக்தி பீடங்களில் ஒன்று. சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமான வாரணாசியில் விழுந்ததாகக் கருதப்படுகிறது.[4]

முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இரு தேவியர்களும் வேறுபட்டுக் காட்சியளிக்கின்றனர்.[3]

நகரத்தார் திருப்பணி

[தொகு]

ஆதியில் காசி விசுவநாதர் கோயிலில் விசாலாட்சிக்கு என தனி சன்னதி இல்லை. விசாலாட்சி, அன்னபூரணி ஆகிய தேவியர் இருவரும் காசி விசுவநாத லிங்கத்தில் ஐக்கியமானவர்கள் என்பது தொன்நம்பிக்கை. ஆகையால் தனிக் கோயில்கள் இல்லை. பி‌ன்ன‌ர் அன்னபூரணி கோயில் 18ஆம் நூற்றாண்டில் பேஷ்வா பாஜிராவால் கட்டப்பெற்றது[4]

காசி விசாலாட்சி கோயிலில் 1908 இல் செய்யப்பட்ட குடமுழுக்கு விபரம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.

விசாலாட்சிக்கு தனிக்கோவில் வேண்டும் என்று எண்ணிய தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார். காசிவிசுவநாதர் கோவிலுக்கு அருகே கி.பி 1893-ல் ஒரு இடம்வாங்கி புதியதோர் கோயிலை கட்டி விசாலாட்சியை பிரதிட்டை செய்தனர்.[4]பின்னர் கி.பி 1908-ல் கோயிலை விரிவுபடுத்தி, உற்சவ மண்டபம், மடைப்பள்ளி ஆகியவற்றை உருவாக்கி, விநாயகர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களை பிரதிட்டை செய்து கும்பாபிடேகம் செய்துள்ளனர்.[4] இதை உறுதிசெய்யும் வகையில் கோயிலில் தமிழில் கல்வெட்டுகள் உள்ளன.[5] வட இந்திய மற்றும் தென்னிந்திய கோயிற்கலை பாணியில் இணைந்து இக்கோயிலை வடிவமைத்துள்ளனர். மேலும் இங்கு விசுவநாதருக்கு தனி சன்னதி உள்ளது. விசாலாட்சிக்கு உற்சவ மூர்த்தியும் வாகனங்களும் தங்க, வெள்ளி அங்கிகளும் ஆபரணங்களும் உள்ளன. விசாலாட்சி திருவுரு தமிழ்நாட்டில் செய்யப்பெற்றமையால் தமிழ்நாட்டு பாணியில் அழகுற உள்ளது.[4][2]

திருவிழாக்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  1. சக்தி பீடங்கள்
  2. ஆதி சக்தி பீடங்கள்

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Eck 1982, ப. 229.
  2. 2.0 2.1 சோமலெ (1963). "ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர நூற்றாண்டு மலர்". காசி நகரச் சத்திர மேலாண்மைக் கழகம்: 33. 
  3. 3.0 3.1 P. Arundhati (1 January 2001). Annapurna: A Bunch of Flowers of Indian Culture. Concept Publishing Company. pp. 17–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-897-4. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 பழ.கைலாஷ் (2022 நவம்பர் 16). "தமிழ் அண்ணை விசாலாட்சி". ஒரேநாடு: 23. 
  5. பழ.கைலாஷ் (2022). "காசி விசாலாட்சி கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்". தமிழக தொல்லியல் கழகம் ஆவணம் இதழ் 33: பக் 89. 

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_விசாலாட்சி_கோயில்&oldid=4063584" இலிருந்து மீள்விக்கப்பட்டது