வொக்கலிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வொக்கலிகர் எனப்படுவோர் தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகம். கர்நாடகாவில் வாழும் இரண்டாவது பெரிய சமுதாயம்.தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர், ஒக்கலிகர், ஒக்கலிக் கவுண்டர்,கவுடர்என்றும் அழைக்கப்படுகின்றனர். 'ஒக்கலிகர்' என்றால் 'குடியானவன்' என்று பொருள். இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். கன்னடம் இவர்களது தாய்மொழி ஆகும்.நீலகிரி மலையில் வாழும் 'படுகர்' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான். இவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினகளுள் .[1] ஒருவராக உள்ளனர்.

பொருளடக்கம்

பழக்க வழக்கங்கள் [தொகு]

  • இவர்கள் சமூகத்தில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திருமணத்தில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் இல்லை. ஆனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
  • "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், நாட்டாமை என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.

உட்பிரிவுகள் [தொகு]

ஒக்கலிகர் ஜாதிக்குள் 102 உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில:

  • மொரசு ஒக்கலிகர்
  • குஞ்சுடிக ஒக்கலிகர்
  • ரோதாகாரு ஒக்கலிகர்
  • ஹலிகார் ஒக்கலிகர்
  • ரெட்டி ஒக்கலிகர் [ஆந்திரா]
  • குடி ஒக்கலிகர்
  • க்ராமா ஒக்கலிகர்
  • சோழ ஒக்கலிகர்
  • கீரைகார ஒக்கலிகர்
  • தரப்பாடி ஒக்கலிகர்
  • காப்பு ஒக்கலிகர்
  • நம்தாரி ஒக்கலிகர்
  • முசுக்கு ஒக்கலிகர்
  • நொனப ஒக்கலிகர்
  • கோட்டே ஒக்கலிகர்
  • ஹலாக்கி ஒக்கலிகர்
  • உப்பில கொலகா ஒக்கலிகர்
  • தாச ஒக்கலிகர்
  • ஹொசதேவரு ஒக்கலிகர்
  • ஜொகி ஒக்கலிகர்
  • செட்டி ஒக்கலிகர்
  • கொடவா ஒக்கலிகர்
  • கங்கட்கர்/கங்கடிகர் (கங்க சத்ரியா) ஒக்கலிகர்.

முக்கியப் பிரமுகர் [தொகு]

  • நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
  • டாக்டர் சிவசாமி கவுண்டர் (தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்)
  • கவியரசு.நா. காமராசன் (முன்னாள் கதர் வாரிய துனைத்தலைவர்)

அரசியல் பங்களிப்பு [தொகு]

திரைப்படத் துறை பங்களிப்பு [தொகு]

தமிழ்த் திரைப்படங்களிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில் சிலர்;

  • திரைப்பட பாடலாசிரியர் கவியரசு.நா.காமராசன்.
  • திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயக்குமார்
  • திரைப்பட தயாரிப்பு நிர்வாகி மற்றும் தயாரிப்பாளர் மல்லியம்பட்டி S மாதவன்
  • திரைப்பட நடிகர் பீலிசிவம்
  • திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா
  • MLA மல்லையா

ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள் [தொகு]

ஒக்கலிகர் சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.

மேற்கோள்கள் [தொகு]

  1. India's communities, Volume 1; Volume 5 Page:1570

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வொக்கலிகர்&oldid=1419070" இருந்து மீள்விக்கப்பட்டது