படுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

படுகர் (Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது. இவர்கள் கர்நாடக மன்னர் ஐதர் அலி காலத்தின்போது, இம்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஐதர் அலியின் படைவீரர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டி, மைசூர் பகுதிகளிலிருந்து வெளியேறி நீலகிரி மலைப்பகுதிகளில் புகலிடம் தேடி இடமபெயர்ந்தவர்கள். இவ்வினத்தவர்களில் ஐம்பது சதவீதத்தினர் கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி விட்டனர். இவர்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கல்வி அறிவுடையவர்கள். பலர் சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் வைத்துள்ளன்ர். மேலும் அரசுப்பணிகளிலும், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி பகுதி மக்களைப் போல நடை உடை பாவனையுடன் நாகரீக மக்களாக காட்சி தருகின்றனர். படுகர்கள் கர்நாடகா சமவெளிப்பகுதியிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்” (Scheduled Tribes) என்ற சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் படுக இன மக்கள் நீலகிரி மலையில் வாழ்ந்தாலும் அவர்களிடம் “பட்டியலிட்ட பழங்குடியினருக்கு {Seheduled Tribes) உரிய எந்த அடையாளமும் காணவில்லை. நடுவன் அரசு வகுத்த ”பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்” (Scheduled Tribes) தொடர்பான விதிகளின்படி நீலகிரி மலைவாழ் படுகர் இன மக்களுக்கு, அவர்கள் கேட்கும் தகுதி பொருந்தி வராத காரணத்தினால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு “பட்டியலிட்ட பழங்குடியினர்”(Scheduled Tribes) என்ற தகுதி வழங்கவில்லை. நீலகிரிமலைப்பகுதிகளில் ஆதிகாலம் முதல் வாழும் தோடர்கள் போன்றோ அல்லது காடர்கள் போன்றோ அல்லது இருளர்கள் போன்றோ, படுகர்கள் பழங்குடியினர்கள் அல்ல. மேலும் படுகர்கள் அடர்ந்த காடுகளிலும் குடிசை போட்டு பழங்குடியினர் வாழ்க்கை வாழ்வதில்லை. படுகர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். படுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்


நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன<[1].

மலைபடுகடாம் என்னும் சங்ககால நூலில் (அடி 161) குறிப்பிடப்படும் 'ஆரிப் படுகர்' இவர்களின் முன்னோடிகள் என்பர். [2]

மேலும் பார்க்க[தொகு]

படக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. நீலகிரி படகர்கள், டாக்டர் பிலோ இருதயநாத்
  2. 2 பத்துப்பாட்டு செய்தி உரை, பொதுவன் அடிகள் (2009)
"http://ta.wikipedia.org/w/index.php?title=படுகர்&oldid=1653390" இருந்து மீள்விக்கப்பட்டது