விவிலிய புத்தகங்கள்
விவிலிய புத்தகங்கள் (நூல்கள்) யூத சமயத்தவராலும் கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரேய விவிலியம் என்று கூறுவதும் உண்டு.
கிறித்தவர்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கும் விவிலிய நூல் தொகுதி இயேசு கிறிஸ்துவின் போதனையை உள்ளடக்கிய பகுதியாகிய நற்செய்தி நூல்களையும், அப்போதனையின் அடிப்படையில் அமைந்த வேறு நூல்களையும் கொண்டுள்ளது.
புதிய ஏற்பாட்டு நூல்கள் எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டைப் பொறுத்தமட்டில், கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபுவழி திருச்சபையும் புரடஸ்தாந்து சபைகளைவிட அதிகமான சில நூல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்நூல்கள் எபிரேய மொழியிலன்றி, கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] பழைய ஏற்பாடு
| தனாக் (யூத விவிலியம்) |
புரடஸ்தாந்தம் | கத்தோலிக்கம் | கிழக்கு மரபுவழி திருச்சபை | மூல மொழி |
|---|---|---|---|---|
| தோரா அல்லது அறநெறி நூல்கள் |
பென்டடூக் அல்லது ஐந்நூல்கள்
|
|||
| பெரெஷிட் (= தொடக்கத்தில்) | தொடக்க நூல் | தொடக்க நூல் | தொடக்க நூல் | எபிரேயம் |
| ஷெமொத் (= பெயர்கள்) | விடுதலைப் பயணம் | விடுதலைப் பயணம் | விடுதலைப் பயணம் | எபிரேயம் |
| வயிக்ரா (= அவர் அழைத்தார்) | லேவியர் | லேவியர் | லேவியர் | எபிரேயம் |
| பெமிட்பார் (= பாலைநிலத்தில்) | எண்ணிக்கை | எண்ணிக்கை | எண்ணிக்கை | எபிரேயம் |
| தெவாரிம் (வார்த்தைகள்) | இணைச் சட்டம் | இணைச் சட்டம் | இணைச் சட்டம் | எபிரேயம் |
| நெவீம் அல்லது இறைவாக்கினர்கள் |
வரலாறு
|
|||
| யோசுவா | யோசுவா | யோசுவா | யோசுவா | எபிரேயம் |
| நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் | நீதித் தலைவர்கள் | எபிரேயம் |
| கீழே பார் | ரூத்து | ரூத்து | ரூத்து | எபிரேயம் |
| சாமுவேல் | 1 சாமுவேல் | 1 சாமுவேல் | 1 சாமுவேல் (1 அரசுகள்)[1] | எபிரேயம் |
| 2 சாமுவேல் | 2 சாமுவேல் | 2 சாமுவேல் (2 அரசுகள்)[1] | எபிரேயம் | |
| அரசர்கள் | 1 அரசர்கள் | 1 அரசர்கள் | 1 அரசர்கள் (3 அரசுகள்)[1] | எபிரேயம் |
| 2 அரசர்கள் | 2 அரசர்கள் | 2 அரசர்கள் (4 அரசுகள்)[1] | எபிரேயம் | |
| குறிப்பேடு கீழே பார் |
1 குறிப்பேடு | 1 குறிப்பேடு | 1 குறிப்பேடு | எபிரேயம் |
| 2 குறிப்பேடு | 2 குறிப்பேடு | 2 குறிப்பேடு | எபிரேயம் | |
| எஸ்ரா | கிரேக்கம் (அல்லது அரமேயம் ?) | |||
| எஸ்ரா ( நெகேமியாவோடு) கீழே பார் |
எஸ்ரா | எஸ்ரா | எஸ்ரா (2 எஸ்திராஸ்)[1][2] | எபிரேயம்(+அரமேயம்) |
| நெகேமியா | நெகேமியா | நெகேமியா (2 எஸ்திராஸ்)[1][2] | எபிரேயம் | |
| தோபித்து | தோபித்து | அரமேயம் | ||
| யூதித்து | யூதித்து | எபிரேயம் | ||
| கீழே பார் | எஸ்தர் | எஸ்தர்[3] | எஸ்தர்[3] | எபிரேயம் |
| 1 மக்கபேயர்[4] | 1 மக்கபேயர் | எபிரேயம் அல்லது அரமேயம்? | ||
| 2 மக்கபேயர்[4] | 2 மக்கபேயர் | கிரேக்கம் | ||
| 3 மக்கபேயர் | கிரேக்கம் | |||
| 4 மக்கபேயர் | கிரேக்கம் | |||
| ஞான நூல்கள் | ||||
| கீழே பார் | யோபு | யோபு | யோபு | எபிரேயம் |
| கீழே பார் | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள்[5] | எபிரேயம் |
| ஓடிஸ்[6][சான்று தேவை] | எபிரேயம் (+ கிரேக்கம்) | |||
| கீழே பார் | நீதிமொழிகள் | நீதிமொழிகள் | நீதிமொழிகள் | எபிரேயம் [சான்று தேவை] |
| கீழே பார் | சபை உரையாளர் | சபை உரையாளர் | சபை உரையாளர் | எபிரேயம் |
| கீழே பார் | இனிமைமிகு பாடல் | இனிமைமிகு பாடல் | இனிமைமிகு பாடல் | எபிரேயம் |
| சாலமோனின் ஞானம் | சாலமோனின் ஞானம் | கிரேக்கம் | ||
| சீராக்கின் ஞானம் | சீராக்கின் ஞானம் | எபிரேய மொழி; பின்னர் கிரேக்கத்தில் பெயர்க்கப்பட்டது | ||
| பெரிய இறைவாக்கினர்கள் | ||||
| எசாயா | எசாயா | எசாயா | எசாயா | எபிரேயம் |
| எரேமியா | எரேமியா | எரேமியா | எரேமியா | எபிரேயம்(+ அரமேயம்) |
| கீழே பார் | புலம்பல் | புலம்பல் | புலம்பல் | எபிரேயம் |
| பாரூக்கு[7] | பாரூக்கு[7] | எபிரேயம் [8] | ||
| எரேமியாவின் கடிதம்[9] | கிரேக்கம் (அல்லது எபிரேயம்/அரமேயம்?)[10] | |||
| எசேக்கியேல் | எசேக்கியேல் | எசேக்கியேல் | எசேக்கியேல் | எபிரேயம் |
| கீழே பார் | தானியேல் | தானியேல்[11] | தானியேல்[11] | எபிரேயம் + அரமேயம் |
| சிறிய இறைவாக்கினர்கள் | ||||
| ட்ரை அசார் அல்லது பன்னிரெண்டு | ஓசேயா | ஓசேயா | ஓசேயா | எபிரேயம் |
| யோவேல் | யோவேல் | யோவேல் | எபிரேயம் | |
| ஆமோஸ் | ஆமோஸ் | ஆமோஸ் | எபிரேயம் | |
| ஒபதியா | ஒபதியா | ஒபதியா | எபிரேயம் | |
| யோனா | யோனா | யோனா | எபிரேயம் | |
| மீக்கா | மீக்கா | மீக்கா | எபிரேயம் | |
| நாகூம் | நாகூம் | நாகூம் | எபிரேயம் | |
| அபக்கூக்கு | அபக்கூக்கு | அபக்கூக்கு | எபிரேயம் | |
| செப்பனியா | செப்பனியா | செப்பனியா | எபிரேயம் | |
| ஆகாய் | ஆகாய் | ஆகாய் | எபிரேயம் | |
| செக்கரியா | செக்கரியா | செக்கரியா | எபிரேயம் | |
| மலாக்கி | மலாக்கி | மலாக்கி | எபிரேயம் | |
| கெத்துவிம் அல்லது படைப்புகள் (எழுத்துகள்) (Writings)[12] | ||||
| திருப்பாடல்கள் | எபிரேயம் | |||
| நீதிமொழிகள் | எபிரேயம் | |||
| யோபு | எபிரேயம் | |||
| இனிமைமிகு பாடல் | எபிரேயம் | |||
| ரூத்து | எபிரேயம் | |||
| புலம்பல் | எபிரேயம் | |||
| சபை உரையாளர் | எபிரேயம் | |||
| எஸ்தர் | எபிரேயம் | |||
| தானியேல் | எபிரேயம் + அரமேயம் | |||
| எஸ்ரா (நெகேமியாவோடு) | எபிரேயம்(+ அரமேயம்) | |||
| குறிப்பேடு | எபிரேயம் | |||
| மேலே பார்[4] | 1 மக்கபேயர் | எபிரேயம் அல்லது அரமேயம்? | ||
| மேலே பார்[4] | 2 மக்கபேயர் | கிரேக்கம் | ||
[தொகு] புதிய ஏற்பாடு
புதிய ஏற்பாட்டில் உள்ள 27 நூல்களையும் எல்லாக் கிறித்தவ சபைகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றின் வரிசை அமைப்பு மட்டும் சில வேளைகளில் மாறுபடுகிறது. கத்தோலிக்கம், கிரேக்க மரபுவழி சபை, புரடஸ்தாந்தம் ஆகிவை ஒரே வரிசைமுறையைக் கொண்டுள்ளன. அர்மீனிய, எத்தியோப்பிய மரபுகள் வேறு வரிசைமுறையைக் கடைப்பிடிக்கின்றன.
| கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, புரடஸ்தாந்தம், மற்றும் பெரும்பான்மையான மரபுவழி திருச்சபைகள் |
லூதரனியம் | மரபுவழி சிரிய திருச்சபை | மூல மொழி (நடைமுறை கிரேக்க மொழி) |
| நற்செய்திகள் | |||
| மத்தேயு | மத்தேயு | மத்தேயு | கிரேக்கம் (?)[13] |
| மாற்கு | மாற்கு | மாற்கு | கிரேக்கம் |
| லூக்கா | லூக்கா | லூக்கா | கிரேக்கம் |
| யோவான் | யோவான் | யோவான் | கிரேக்கம் |
| திருத்தூதர்கள் பணி வரலாறு | |||
| திருத்தூதர் பணிகள் | திருத்தூதர் பணிகள் | திருத்தூதர் பணிகள் | கிரேக்கம் |
| பவுலின் திருமுகங்கள் | |||
| உரோமையர் | உரோமையர் | உரோமையர் | கிரேக்கம் |
| 1 கொரிந்தியர் | 1 கொரிந்தியர் | 1 கொரிந்தியர் | கிரேக்கம் |
| 2 கொரிந்தியர் | 2 கொரிந்தியர் | 2 கொரிந்தியர் | கிரேக்கம் |
| கலாத்தியர் | கலாத்தியர் | கலாத்தியர் | கிரேக்கம் |
| எபேசியர் | எபேசியர் | எபேசியர் | கிரேக்கம் |
| பிலிப்பியர் | பிலிப்பியர் | பிலிப்பியர் | கிரேக்கம் |
| கொலோசையர் | கொலோசையர் | கொலோசையர் | கிரேக்கம் |
| 1 தெசலோனிக்கர் | 1 தெசலோனிக்கர் | 1 தெசலோனிக்கர் | கிரேக்கம் |
| 2 தெசலோனிக்கர் | 2 தெசலோனிக்கர் | 2 தெசலோனிக்கர் | கிரேக்கம் |
| 1 திமொத்தேயு | 1 திமொத்தேயு | 1 திமொத்தேயு | கிரேக்கம் |
| 2 திமொத்தேயு | 2 திமொத்தேயு | 2 திமொத்தேயு | கிரேக்கம் |
| தீத்து | தீத்து | தீத்து | கிரேக்கம் |
| பிலமோன் | பிலமோன் | பிலமோன் | கிரேக்கம் |
| பொதுத் திருமுகங்கள் | |||
| எபிரேயர் | எபிரேயர்[L 1] | எபிரேயர் | கிரேக்கம் (?)[14] |
| யாக்கோபு | யாக்கோபு[L 1] | யாக்கோபு | கிரேக்கம் |
| 1 பேதுரு | 1 பேதுரு | 1 பேதுரு | கிரேக்கம் |
| 2 பேதுரு | 2 பேதுரு | கிரேக்கம் | |
| 1 யோவான் | 1 யோவான் | 1 யோவான் | கிரேக்கம் |
| 2 யோவான் | 2 யோவான் | கிரேக்கம் | |
| 3 யோவான் | 3 யோவான் | கிரேக்கம் | |
| யூதா | யூதா[L 1] | கிரேக்கம் | |
| திருவெளிப்பாடு | |||
| திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு[L 1] | கிரேக்கம் | |
[தொகு] அட்டவணைக் குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 எபிரேயர், யாக்கோபு, யூதா, திருவெளிப்பாடு ஆகிய நான்கு விவிலிய நூல்களை ஏற்பது பற்றிச் சிறிது தயக்கம் இருந்தாலும், மார்ட்டின் லூதர் தாம் பதிப்பித்த செருமானிய விவிலியத்தில் அவற்றைச் சேர்த்தே பதித்தார்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் செப்துவசிந்தா மொழிபெயர்ப்பாகும்
- ↑ 2.0 2.1 எஸ்ரா மற்றும் நெகேமியா நூல்களை யூத விவிலியம் ஒன்றெனக் கொள்ளும்
- ↑ 3.0 3.1 103 வசனங்கள் கத்தோலிக்க மற்றும் மரபுவழி சபை விவிலியத்தில் மேலதிகமாக உள்ளன
- ↑ 4.0 4.1 4.2 4.3 உட்பிரிவின் படி இவ்வரிசை மாறும்
- ↑ கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றெங்கும் காணப்படாத 151ஆம் திருப்பாடலைச் சேர்த்துக்கொள்கிறது
- ↑ கத்தோலிக்க, புரடஸ்தாந்த விவிலியங்களில் காணப்படுவதில்லை
- ↑ 7.0 7.1 கத்தோலிக்க விவிலியத்தில் 6ஆம் அதிகாரம் (எரேமியாவின் கடிதம்) அதிகமாக உள்ளது. யூத விவிலியம் மற்றும் புரடஸ்தாந்த விவிலியத்தில் இந்நூல் இடம் பெறவில்லை
- ↑ Britannica 1911
- ↑ மரபுவழி திருச்சபைகளில் இது தனி நூலாய் உள்ளது
- ↑ New English Translation of the Septuagint
- ↑ 11.0 11.1 கத்தோலிக்க, மற்றும் கீழை மரபு சபை விவிலியங்களில் தானியேல் நூலோடு மூன்று இணைப்புகள் மேலதிகமாக உள்ளன. அவை இளைஞர் மூவரின் பாடல், சூசன்னா, பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும் என்பவையாகும். இவை புரடஸ்தாந்த பழைய ஏற்பாட்டில் இல்லை.
- ↑ இந்நூல்கள் கிறித்தவ விவிலியத் திருமுறையில் வரலாற்று மற்றும் ஞான நூல்கள் வரிசையில் உள்ளன.
- ↑ அரமேயம் அல்லது எபிரேய மொழியிலும் எழுதப் பட்டிருக்கலாம்.
- ↑ எபிரேய மொழியிலிருந்து லூக்காவால் மொழிபெயர்க்கப்பட்டது என்போரும் உளர்