எஸ்தர் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்தர் (Esther) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
[தொகு] எஸ்தர் நூலின் பெயரும் கருப்பொருளும்
இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். அவருடைய இயற்பெயர் அதசா (Hadassah). எஸ்தர் (எபிரேயம்: אֶסְתֵּר) எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.
யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.
பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.
கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூல் இன்னும் விரிவாகக் காணப்படுகிறது.
[தொகு] எஸ்தர் நூலின் உட்கிடக்கை
| பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
|---|---|---|
| 1. எஸ்தர் அரசி ஆதல் | 1:1 - 2:23 | 754 - 757 |
| 2. ஆமானின் சதிகள் | 3:1 - 5:14 | 757 - 760 |
| 3. ஆமான் கொல்லப்படல் | 6:1 - 7:10 | 760 - 761 |
| 4. யூதர் தங்கள் எதிரிகளை முறியடித்தல் | 8:1 - 10:3 | 761 - 764 |