யோசுவா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யோசுவா நூலை உள்ளடக்கிய எபிரேய மொழி விவிலியம்
விவிலிய
நூல்கள்
பழைய ஏற்பாடு
தொடக்க நூல்
விடுதலைப் பயணம்
லேவியர்
எண்ணிக்கை
இணைச் சட்டம்
யோசுவா
நீதித் தலைவர்கள்
ரூத்து
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 அரசர்கள்
2 அரசர்கள்
1 குறிப்பேடு
2 குறிப்பேடு
எஸ்ரா
நெகேமியா
எஸ்தர்
யோபு
திருப்பாடல்கள்
நீதிமொழிகள்
சபை உரையாளர்
இனிமைமிகு பாடல்
எசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஒசேயா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீக்கா
நாகூம்
அபக்கூக்கு
செப்பனியா
ஆகாய்
செக்கரியா
மலாக்கி
இணைத் திருமுறை
தோபித்து
யூதித்து
எஸ்தர் (கி)
சாலமோனின் ஞானம்
சீராக்கின் ஞானம்
பாரூக்கு
தானியேல் (இ)
1 மக்கபேயர்
2 மக்கபேயர் தொகு

யோசுவா (Joshua) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஆறாவது நூலாக இடம்பெறுவதாகும்.

பொருளடக்கம்

நூலின் பெயர் [தொகு]

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sefer Y'hoshua" அதாவது "யோசுவாவின் நூல்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. முன்னைய இறைவாக்கினர் நூல்கள் என்னும் பிரிவில் முதலாவதாக இதை யூத மக்கள் கணிப்பர்.

நூலில் காணப்படும் கருத்துகள் [தொகு]

இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இசுரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.

இந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

முன்பு மோசேயின் மூலம் இசுரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.

நூலின் பிரிவுகள் [தொகு]

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. கானான் நாட்டைக் கைப்பற்றல்

அ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல்
ஆ) இசுரயேலரின் வெற்றிகள்
இ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள்

1:1 - 12:24

1:1-18
2:1 - 11:23
12:1-23

326 - 344

326 - 327
327 - 343
343 - 344

2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல்

அ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி
ஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி
இ) அடைக்கல நகர்கள்
ஈ) லேவியர்க்குரிய நகர்கள்

13:1 - 21:45

13:1-33
14:1 - 19:51
20:1-9
21:1-45

344 - 356

344 - 345
346 - 354
354
354 - 356

3. கிழக்கே குடியேறிய குலத்தார் 22:1-34 356 - 358
4. யோசுவாவின் இறுதி மொழிகள் 23:1-16 359 - 360
5. செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1-33 360 - 362

மேலும் காண்க [தொகு]

விக்கிமூலத்தில் யோசுவா நூல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=யோசுவா_(நூல்)&oldid=1384929" இருந்து மீள்விக்கப்பட்டது