மரியா சரப்போவா
| செல்லப் பெயர் | மாஷா | |
| நாடு | ||
| வசிப்பிடம் | பிராடெண்டன், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா | |
| பிறந்த திகதி | ஏப்ரல் 19, 1987 | |
| பிறந்த இடம் | நியாகன், சோவியத் ஒன்றியம் | |
| உயரம் | 1.88 மீ (6) | |
| நிறை | 59 கிலோகிராம்s (130 lb) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | ஏப்ரல் 19, 2001 | |
| விளையாட்டுக்கள் | வலது கை (இரு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | $25,238,715[1] | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 495–118 (80.75%) | |
| பெற்ற பட்டங்கள்: | 29 டபிள்யூடிஏ, 4 ஐடிஃப் | |
| அதி கூடிய தரவரிசை: | #. 1 (ஆகஸ்ட் 22, 2005) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (2008) | |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2012) | |
| விம்பிள்டன் | வெ (2004) | |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2006) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 23–17 | |
| பெற்ற பட்டங்கள்: | 3 டபிள்யூடிஏ | |
| அதிகூடிய தரவரிசை: | 41 (ஜூன் 14, 2004) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | 2R (2003, 2004) | |
| பிரெஞ்சு ஓப்பன் | ||
| விம்பிள்டன் | ||
| அமெரிக்க ஓப்பன் | 2R (2003)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஏப்ரல் 29, 2013. |
|
மரியா சரபோவா (உருசியம்: Мария Юрьевна Шарапова [mɐˈrʲijə ˈjurʲjɪvnə ʂɐˈrapəvə](
listen)(Maria Sharapova, பி. ஏப்ரல் 19, 1987) ஒரு ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு (குடியுரிமை பெறுவதற்கு முந்தைய நிலை) பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார் [2]. இவர் வரிப்பந்தாட்டத்தில் இதுவரை 27 பட்டங்கள் வென்றுள்ளார், அதில் 4 கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றிப் பட்டங்களும் அடங்கும். இவர் 5 வெவ்வேறு காலகட்டங்களில் முதல்நிலை வீராங்கனையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். ஆகசுட்டு 22, 2005 அன்று முதன் முதல் தரவரிசையில் உலகின் முதல் இடத்தை பிடித்தார், ஐந்தாம் முறையாக சூன் 11, 2012 அன்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் [3]. இதுவரை ஏழு கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றி தொடர்களின் இறுதி ஆட்டத்தில் பங்கெடுத்து நான்கில் வென்றுள்ளார். 17 வயதாக இருக்கும் போது தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற (200, 2003) செரீனா வில்லியம்சை தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை 2004ல் வென்றது இவரின் தொழில் முறை ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையாகும்.
ஆரம்ப வாழ்க்கை [தொகு]
1987 ஆண்டில் ரஷ்யாவில் உள்ள நயகன் ( சிபெரியா ) இடத்தில் பிறந்தார் . இவரது பெற்றோர் 1987ஆண்டில் இடம்பெற்ற செர்னோபில் அணு விபத்தின் பின் பெலருசின் கோமெல் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தனர்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ WTA Official Site: WTA Million Dollar Club. Retrieved October 8, 2012.
- ↑ இரண்டாம் நிலை தரவரிசை
- ↑ "Maria Sharapova reclaims world number one ranking". June 8, 2012. http://www.3news.co.nz/Maria-Sharapova-reclaims-world-number-one-ranking/tabid/415/articleID/257186/Default.aspx.