விக்டோரியா அசரென்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டோரியா அசரென்கா
Вікторыя Азаранка
Виктория Азаренко
Azarenka.JPG
செல்லப் பெயர் விகா, அஃசி
நாடு பெலருசின் கொடி பெலருஸ்
வசிப்பிடம் மொனாக்கோ, மான்டே கார்லோ
பிறந்த திகதி 31 சூலை 1989 (1989-07-31) (அகவை 22)
பிறந்த இடம் மின்ஸ்க், பெலரசு எஸ்எஸ்ஆர், சோவியத் ஒன்றியம்
தற்போது பெலரசு
உயரம் 1.80 மீ (5)
நிறை 66 kg (150 lb; 10.4 st)
தொழில்ரீதியாக விளையாடியது 2003
விளையாட்டுக்கள் வலது-கை (இரு-கை பின்னாட்டம்)
வெற்றிப் பணம் $9,040,357
ஒற்றையர்
சாதனை: 284–122 (69%)
பெற்ற பட்டங்கள்: 9 WTA, 1 ITF
அதி கூடிய தரவரிசை: No. 3 (12 செப்டம்பர் 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (2012)
பிரெஞ்சு ஓப்பன் QF (2009, 2011)
விம்பிள்டன் SF (2011)
அமெரிக்க ஓப்பன் 4R (2007)
இரட்டையர்
சாதனைகள்: 134–51
பெற்ற பட்டங்கள்: 6 WTA, 3 ITF
அதிகூடிய தரவரிசை: No. 7 (7 சூலை 2008)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 29 சனவரி 2012.

விக்டோரியா அசரென்கா (Victoria Azarenka, பெலருசிய: Вікторыя Фёдараўна Азаранка, உருசியம்: Виктория Фёдоровна Азаренко; பிறப்பு 31 சூலை, 1989) பெலரசைச் சேர்ந்த ஓர் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். இவரது ஆட்டவாழ்விலும் தற்போதும் மிக உயர்ந்தநிலையில் தரவரிசையில் மூன்றாவதாக உள்ளார். இந்நிலையை இவர் செப்டம்பர் 12,2011இல் அடைந்தார். இந்தப் பின்னணியில் பெலரசு ஆட்டக்காரர்களிலேயே மிக உயர்ந்த நிலையை எட்டி சாதனை படைத்துள்ளார்.[1]

அசரென்கா இரண்டு கலப்பு இரட்டையர் பெருவெற்றித் தொடர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டில் யு.எசு.ஓப்பனில் மாக்ஸ் மிர்ன்யியுடனும் 2008ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பனில் பாப் பிரியனுடனும் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார். சனவரி 2012 நிலவரப்படி, அசரென்கா ஒன்பது பட்டங்களைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் இறுதியாட்டத்தில் மரியா சரப்போவாவை 6-3, 6-0 என்ற நேர்சுற்றில் வென்று பெருவெற்றித் தொடர் ஒன்றில் தனது முதலாவது வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் டென்னிசு பெண்களுக்கான உலகத் தர வரிசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

Wikinews-logo.svg
விக்கிசெய்திகளில்

தொடர்பான செய்தி உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_அசரென்கா&oldid=1093742" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்