பரோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரோட்டாவின் தோற்றம்
பரோட்டா செய்முறை விளக்கம்

பரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பொருளடக்கம்

வகைகள் [தொகு]

  • சாதாரண பரோட்டா
  • கொத்து பரோட்டா
  • முட்டை பரோட்டா
  • சில்லி பரோட்டா
  • விருதுநகர் வீச்சு பரோட்டா
  • வீச்சு

தேவையான பொருட்கள் [தொகு]

பரோட்ட மாவு அடித்தல்
தமிழ் நாட்டில் ஒரு பரோட்டா கடை
  • மைதா மாவு (தேவையான அளவு).
  • உப்பு (தேவையான அளவு)
  • எண்ணெய் (தேவையான அளவு)
  • தண்ணீர் (தேவையான அளவு)

செயல்முறை [தொகு]

  • மைதா மாவை பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணிர் விட்டும் பின் எண்ணெய் விட்டும் பிசைந்து, மிருதுவான பின்னர் சிறு உருண்டைகளாக பிசைந்த மாவை உருட்ட வேண்டும். உருண்டையை உருட்டும் கட்டையின் உதவியோடு, பெரிய வட்டமாக உருட்டி, அதனை மடிக்து, அதனை அழுத்தி சிறிது வட்டமாக மாற்றவும். பின்னர் தோசைக்கல்லில் இட்டு சந்தன நிறத்தில் மாறியவுடன் எடுத்தால் பரோட்டா தயாராகி விடும்.

இதையும் பார்க்க [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

சிக்கல்கள் [தொகு]

பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. [1]

மேலதிக விவரங்கள் [தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
"http://ta.wikipedia.org/w/index.php?title=பரோட்டா&oldid=1353312" இருந்து மீள்விக்கப்பட்டது