வடா பாவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வடா பாவ் | |
|---|---|
| தொடங்கிய இடம் | |
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | மகாராட்டிரம், குசராத் |
| விவரம் | |
| முக்கிய மூலப்பொருட்(கள்) | உருளைக் கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய் |
வடா பாவ் (மராட்டி: वड़ा पाव) என்பது ஒரு சைவ உணவாகும். இவ்வகை உணவு மகாராட்டிரம் மற்றும் குசராத்[1] பகுதிகளில் மிகவும் பரவலான நொறுக்குத்தீனி வகை உணவாகும். இதில் உருளைக் கிழங்கு போண்டாவும் (வடை அல்லது வடா என்று கூறுவர்) வெதுப்பியும் இருக்கும். இதனுடன் நன்கு எண்ணெய்யில் வறுத்த பச்சை மிளகாயை உடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வடா பாவ் என்பதில் வடா என்பது வடையையும் (போண்டாவையும்) பாவ் என்பது வெதுப்பியையும் குறிக்கும்.
மேலும் பார்க்க[தொகு]
| விக்சனரியில் வடா பாவ் என்னும் சொல்லைப் பார்க்கவும். |