இஞ்சி
| Zingiber officinale இஞ்சி |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
|
நிலைபெற்றுள்ளது
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Zingiber officinale ரொசுக்கோ[1] |
இஞ்சி (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] பெயர் தோற்றம்
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.[2]
[தொகு] மருத்துவ குணங்கள்
தீரும் நோய்கள்:பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.
[தொகு] பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
[தொகு] உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
[தொகு] சுக்கு
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்கு கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்
[தொகு] காட்சி
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Zingiber officinale information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்த்த நாள் 2008-03-03.
- ↑ ஞா. தேவநேயப்பாவாணர். பண்டைத் தமிழ் நாகரிகமும், பண்பாடும், பக் 99