சாம்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாம்பார்
Sambaar kadamba.jpg
சாம்பார்
தொடங்கிய இடம்
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி தமிழ்நாடு
ஆக்கியோன் ராஜா சம்போஜி
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்
விவரம்
முக்கிய மூலப்பொருட்(கள்) பட்டாணி,
துவரம் பருப்பு,
புளி,
தனியா விதை
காய்கறிகள், மற்றும்
மிளகாய்ப் பொடி

சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறி, மிளகாய்ப் பொடி, பட்டாணி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு (துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பயற்றம்பருப்பு), புளிக்கரைசல், காய்கறிகள் என்றாலும், தயாரிக்கப்படும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது. முருங்கைக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் மிகவும் சிறப்பானது.

சுவாரசியமான கதை[தொகு]

சாம்பார் தோன்றியது தொடர்பாக ஒரு சுவாரசியமான கதை கூறப்படுகிறது. தஞ்சாவூரை மராத்தியர்கள் ஆண்டு வந்தார்கள். ராஜா சம்போஜி என்ற மராட்டிய மன்னன் 18 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டு வந்தார். அரசரே ஒரு நல்ல சமையல் கலைஞர். அப்போது அரண்மனை சமையலறையில் மன்னருக்காக அம்ட்டி (சாம்பாரின் முன்னோடி) என்ற குழம்பைத் தயாரிப்பர்களாம். இதற்காக உலர்ந்த கோக்கும் (Garcinia indica, a plant in the mangosteen family (Clusiaceae), commonly known as kokum) என்ற புளிப்புச் சுவை கூட்டும் வாசனை சரக்கை மகராஷ்டிரத்திலிருந்து தருவிப்பார்களாம். ஒரு சமயம் குறித்த காலத்தில் உலர்ந்த கோக்கும் மகராஷ்டிரத்திலிருந்து வந்து சேரவில்லை. அன்று ராஜா சம்போஜி தன்னுடைய சமையலறையில் அம்ட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். உதவியாளர்கள் கோக்கும் இல்லாதது பற்றி மன்னரிடம் கூறுவதற்குள் நடுநடுங்கினார்கள். உடனிருந்த அரண்மனை விதூஷகன் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண எண்ணினான். தமிழ்நாட்டில் மக்கள் கறி சமைக்கும் போது புளிப்புக் கூட்ட புளியைப் பயன்படுத்துவது பற்றி மன்னரின் காதில் கிசுகிசுத்தான். மன்னர் இதை முயன்று பார்க்கும்படி வலியுறுத்தினான். அன்று துவரம் பருப்பு, காய்கறிகள், வாசனைப் பொருட்கள், புளி எல்லாம் சேர்த்து மன்னரால் சமைக்கப்பட்ட வாய்லா என்ற குழம்பு பரிமாறப்பட்டது. அரச குடும்பத்தினர் அன்று ருசி பார்த்த குழம்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. மன்னர் மனமகிழ்ந்தார். அன்று மன்னர் சம்போஜி தயாரித்த அம்ட்டிக்கு சாம்பார் (சம்போஜி+அம்ட்டி) என்று பெயரிடப்பட்டது.

தமிழக கல்வெட்டு[தொகு]

சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு.தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE)

என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.

"கறியமுது பல சம்பாரம"---- பல காய்கறிகளை கொண்டு அரிசி உணவு படைத்தல் என்று பொருள்.

"நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"---- அதாவது மிளகு மற்றும் நெய் சேர்ந்த சாம்பரம் உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

இப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது இப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் மாராட்டிய மாநிலத்தில் வேரும்பருப்பை தால் என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பார்&oldid=1635532" இருந்து மீள்விக்கப்பட்டது