தயிர் சாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயிர் சோறு
மாற்றுப் பெயர்கள்Yogurt rice
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, தயிர், tempering

தயிர்சாதம் அல்லது தயிர் சோறு (Curd rice, கன்னடம்: ಮೊಸರು-ಅನ್ನ (மசரு அண்ணா), தெலுங்கு: పెరుగు అన్నం (பெருகு அண்ணம்), Malayalam: Thayiru) என்பது ஒரு இந்திய உணவு ஆகும். இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.[1][2] தனியான உணவாகவும், அல்லது மதிய உணவின் போது சாம்பார் சாதம், ரசம் சாதம் தயிர் சாதம், என்ற வரிசையிலும் வகை வகையாக உண்ணலாம்.

தமிழ்நாட்டு வைணவத்திருத்தளங்களில் தயிர் சாதம் தயிரண்ணம் என்ற பெயரில் பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.

செய்முறை[தொகு]

பச்சரிசிசாதம் செய்து அதனுடன் தயிரை கலந்தால் எளிய தயிர் சாதம் தயார். எனினும் தயிர்சாததில் சீரகம். சிறிதளவு உப்பு, நறுக்கிய வெங்காயம் கொத்துமல்லி இலை, மோர் மிளகாய் போன்ற மசாலா வகைகளையும் கலந்து பயன்படுத்தலாம்.[3][4]

பரிமாறுதல்[தொகு]

தயிர்சாதம் தனியாக உண்ணும் போதுவழக்கமாக ஊறுகாய், அப்பளம், முறுக்கு, காராபூந்தி ஆகியவற்றுள் ஏதாவதொன்றை தொட்டு உண்பர். சில பகுதிகளில் சூடான குழைத்த சாததுடன் தயிர் கலந்து தாளித்து (கடுகு, பெருங்காயம் சின்ன வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்தல்) திராட்சை அல்லது மாதுளை முத்துக்கள் கலந்து பரிமாறலாம்.[5] [6]

சான்றுகள்[தொகு]

  1. Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121.
  2. Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
  3. Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121.
  4. Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
  5. Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
  6. ref> Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயிர்_சாதம்&oldid=3197114" இலிருந்து மீள்விக்கப்பட்டது