ஊத்தப்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஊத்தப்பம் | |
|---|---|
ஊத்தப்பம் |
|
| தொடங்கிய இடம் | |
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | தென்னிந்தியா |
| விவரம் | |
| முக்கிய மூலப்பொருட்(கள்) | அரிசி,உளுந்து கலவைமாவு |
ஊத்தப்பம் (Uttapam) (தெலுங்கு: ఉతప్పం) (கன்னடம்: ಉತ್ತಪ್ಪಾ) தோசை போன்று ஈரமாவை சுட்டு செய்யப்படும் ஓர் காலை உணவாகும். 1:3 என்ற கணக்கில் உளுந்தையும் அரிசியையும் (சிலர் இதிலும் 1:1 கணக்கில் புழுங்கல் மற்றும் பச்சரிசியைக் கலப்பர்) கலந்த கலவையை ஓரிரவு ஊறவைத்து ஈரமாவு தயாரிக்கப்படுகிறது. [1] இது மொறுமொறுப்பாக இல்லாது சற்றே தடிமனாக பான்கேக் போல தோசைக்கல்லில் நேரடியாக சுடப்படுகிறது. பொதுவாக இதன்மேலாக பொடியாக நறுக்கப்பட்ட தக்காளி அல்லது வெங்காயம்-மிளகாய் தூவப்படுகிறது; மற்ற வழமையான மேல்தூவல்களாக தேங்காய் துருவல், காய்களின் கலவை இருக்கின்றன. இது பொதுவாக சாம்பார் , சட்னியுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஓர் வழமையான ஊத்தப்பத்தில் 180 கலோரிகள் கிடைக்கின்றன.
வாரணாசித் தெருக்களில் ஊத்தப்பம்