நிசுகலங்க மகாதேவர் கோவில்
நிசுகலங்க மகாதேவர் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | நிசுகலங்க மகாதேவர் கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | பவநகர் |
மாவட்டம்: | பாவ்நகர் |
மாநிலம்: | குசராத்து |
நாடு: | இந்தியா |
நிசுகலங்க மகாதேவர் கோவில் (Nishkalank Mahadev Temple, அல்லது Koliyak Shiva Temple) இக்கோவில் இந்திய நாட்டில் குசராத்து மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் பவநகர் வட்டத்திற்கு உட்பட்ட கடற்கரைக் கிராமமான கோலியாக்கிலிருந்து ஒரு கிலோமீற்றர்கள் [1] தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள பாறையின் மேல் அமையப்பெற்றுள்ளது. இதில் நிசுகலங்க் என்றால் சுத்தமான இடம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. [2]
இங்கு அருள்பாலிக்கும் லிங்கனானது சுயம்பு லிங்கம் ஆகும். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலில் அமைந்துள்ளது. தினமும் இங்கு சென்று வழிபட கடல் காலை 8 மணிக்கு தண்ணீரை உள்வாங்கிக்கொள்கிறது. பின்னர் 6 மணிநேரம் மட்டுமே தரிசனம் செய்யமுடியும். மீண்டும் தண்ணீர் அந்த இடத்தைச் சூழ்ந்துகொள்ளும். பின்னர் சிவன் கோவிலுக்குச் செல்லும் பாதை முழுவதுமாக மறைக்கப்பட்டுவிடும். இங்கு மாதத்தில் முழு மதியின் போதும் மறைமதியின் போதும் அலையின் அளவு அதிகமாக இருக்கும். [3][4]
வரலாறு
[தொகு]மகாபாரதப் போரில் பாண்டுவின் மகன்களான பாண்டவர்கள் தனது பெரியப்பாவின் மகன்களான கௌரவர்களைக் கொண்று பாரதப் போரை வென்றனர். பின்னர் தமது மாமாவான கிருட்டினின் அறிவுரையின்படி பாவத்தைத்தீர்க்க இந்த சிவாலயத்திற்கு வந்து ஐந்து சிவ லிங்கங்களை நட்டு வழிபட்டார்கள். பின்னர் இவர்களின் பாவங்கள் அனைத்தையுமே இங்கு இருக்கும் சிவன் போக்கியதாக வரலாறு கூறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ more about under sea Shiva temple in Gujarat[தொடர்பிழந்த இணைப்பு] இந்தியா டிவி 17 ஆகசுட் 2014,
- ↑ கோலியாக் கடற்கரைக் கோவில்
- ↑ Mahadev Temple