குடைவரைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெரிய மலைகளை (வரைகளை) குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல்வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி. மு 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில் அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.

பொருளடக்கம்

முதல் குடைவரைக் கோவில் [தொகு]

மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவிலாகும். அத்துடன் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவரும் இவரே. தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர். [1]

தமிழ்நாட்டுக் குடைவரைகள் [தொகு]

பல்லவர்காலம் [தொகு]

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

ஆதாரம் [தொகு]

  1. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251
"http://ta.wikipedia.org/w/index.php?title=குடைவரைக்_கோயில்&oldid=1412733" இருந்து மீள்விக்கப்பட்டது