அமர்நாத்
| அமர்நாத் | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | அமர்நாத்ஜி குடைவரை கோயில் |
| அமைவிடம் | |
| அமைவு: | அமர்நாத், ஜம்மு காஷ்மீர், |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | அமர்நாத் (சிவன்) |
| வரலாறு | |
| அமைத்தவர்': | அமர்நாத் பாபா |
அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது[1].
அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது[2]. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது[3].
இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிகுத் தெரிவித்ததாக நம்ப்ப்படுகிறது[4]. பார்வதி,,மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.
இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது[5]. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "New shrine on Amarnath route". The Hindu. 2005-05-30. http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm.
- ↑ 2.0 2.1 "Amarnathji Yatra - a journey into faith". Official Web Site of Jammu and Kashmir Tourism.
- ↑ Ortner, Jon. On the road again. PDN Gallery.
- ↑ "Amarnath Cave - The legend". Bhole Bhandari Charitable Trust.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm