சூரியச் சுற்றுகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரியச் சுற்றுகலன் (Solar Orbiter) (SolO) ஒரு சூரிய நோக்கீட்டு ஆய்கலமாகும்.. இது நாசாவாலும் எசாவாலும் கூட்டுப் பங்களிப்பால் உருவாக்கப்ப்பட்டது. சூரியச் சுற்றுகலன் , அக எல்லியக்கோளத்தின் விரிவான அளவீடுகளையும் பிறந்தநிலைச் சூரியக் காற்றின் அளவீடுகளையும் பெறவும், சூரிய முனைப்பகுதியில் நெருக்கமான நோக்கீடுகளைச் ( இவற்றைப் புவியில்ளைருந்து எடுப்பது மிகவும் அரியதாகும்) செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுh. இந்த நோக்கீடுகள் சூரியன் எவ்வாறு எல்லியக்கோளத்தை உருவாக்கிக் கட்டுபடுத்துகிறது என்பதை ஆய முதன்மையானவை ஆகும்..

சூரியனை ஒரு மையம் பிறழ்வு வட்டணையில் இருந்து சூரிய ஆரம் ≈60 அல்லது 0.284 வானியல் அலகுகள் (AU) வரை நெருக்கமாக நகர்ந்து சோ எனும் இக்கலன் நோக்கீடுகள் செய்கிறது.[1] இந்தப் பயணத்தின் போது வட்டணை சாய்வு சுமார் 24 பாகையாக உயர்த்தப்படும். எசா, நாசா பங்களிப்புகளைக் கணக்கிட்டு மொத்தத் திட்டப் பணி செலவு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[2]

சோலோ 2020. பிப்ரவரி 10 அன்று ஐக்கிய அமெரிக்கா, புளோரிடா, கனவெராலில் இருந்து ஏவப்பட்டது. இதன் இயல்புத் திட்டப் பணி 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இது மேலும்2030 வரை நீட்டிக்கப்படலாம்.

மேலும் காண்க[தொகு]

=மேற்கோள்கள்[தொகு]

  1. "Kiepenheuer-Institut fuer Sonnenphysik: SolarOrbiter PHI-ISS". Kis.uni-freiburg.de. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  2. "Atlas launches Solar Orbiter mission". SpaceNews. 10 February 2020. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுற்றுகலன்&oldid=3786903" இலிருந்து மீள்விக்கப்பட்டது