ககனஹள்ளி

ஆள்கூறுகள்: 16°50′08″N 76°55′57″E / 16.835433°N 76.932541°E / 16.835433; 76.932541
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகஹள்ளி
சன்னதி
கிராமம்
கனகஹள்ளி is located in இந்தியா
கனகஹள்ளி
கனகஹள்ளி
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கனகஹள்ளி கிராமததின் அமைவிடம்
கனகஹள்ளி is located in கருநாடகம்
கனகஹள்ளி
கனகஹள்ளி
கனகஹள்ளி (கருநாடகம்)
ஆள்கூறுகள்: 16°50′08″N 76°55′57″E / 16.835433°N 76.932541°E / 16.835433; 76.932541
நாடு India
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்குல்பர்கா
பரப்பளவு
 • மொத்தம்1.5 km2 (0.6 sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்585218
தொலைபேசி குறியீடு எண்08474

கனகஹள்ளி (Kanganahalli), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் வடக்கில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்த, பேரரசர் அசோகர் காலத்திய பௌத்த பெருந்தூபிகள் கொண்ட தொல்லியல் கிராமம் ஆகும். இது சன்னதிக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

வரலாறு[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கனகஹள்ளி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தது.[2] கனகஹள்ளி தொல்லியல் களம் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு முடிய காலத்தவை என அகழாய்வில் தெரிய்வந்துள்ளது. கிமு முதல் நூற்றாண்டில் கனகஹள்ளி கிராமத்தில் பௌத்த தூபி மற்றும் விகாரைகள் நிறுவப்பட்டது. இதனை கிபி 3 - 4-ஆம் நூற்றாண்டு வரை, மகாயானம் மற்றும் ஈனயானம் பௌத்தத் துறவிகள் பராமரித்தார்கள். சாதவாகனர் ஆட்சியின் போது, அமராவதி தொல்லியல் களத்தின் கட்டிட கலைத் தாக்கம், கனகஹள்ளி பௌத்த தொல்லியல் களத்தின் மீது ஏற்பட்டது.[3]

இந்தியத் தொல்லியல் ஆய்வக மேற்பார்வையில்[தொகு]

பேரரசர் அசோகர் மற்றும் அவரது இராணியின் சிற்பம், சன்னதி, கிபி முதல் நூற்றான்டு - 3-ஆம் நூற்றாண்டு.[4][5]
பிராமி எழுத்தில் இராய அசோகா ("Rāya Asoko" (𑀭𑀸𑀬 𑀅𑀲𑁄𑀓𑁄) எனப்பொறிக்கப்பட்ட கல்வெட்டு.[6]

அகழாய்வுகள் 1994 - 1998[தொகு]

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1994 - 1998 காலத்தில் கனகஹள்ளி தொல்லியல் களத்தை ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான தூபிகள், புத்தரின் சிற்பங்கள், புத்தரின் பாத அச்சுகள், இயக்கர்களின் சிற்பங்கள், விகாரைகளின் செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டது. மேலும் சாதவாகனர் அரசர்கள் மற்றும் புத்தர் ஜாதக கதைகள் தொடர்பான கதைகளின் கல்வெட்டுக்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது.

கல்வெட்டுக்கள்[தொகு]

கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி முதல் நூற்றாண்டு காலத்திய ஒரு நீண்ட கல்வெட்டும், 145 குறு கல்வெட்டுகளும் கனகஹள்ளி அகழாய்வின் போது கிடைத்தது. அவைகளில் குறிப்பிடத்தக்கது இராய அசோகா என பிராமி எழுத்துமுறையில் பொறித்த கல்வெட்டாகும்.[7] Kanaganahalli in Karnataka is the site with an inscription in Brahmi script reading "Ranyo Ashoka" (King Ashoka) and a sculpture of King Ashoka.[8] [9]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GULBARGA DISTRICT". பார்க்கப்பட்ட நாள் 2009-02-18.
  2. "Excavations - 2000-2005 - Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2009-02-18.
  3. "Kanganhalli: A unique discovery of Buddhist site in India". Dr. D. Dayalan, Archaeological survey of india. பார்க்கப்பட்ட நாள் 2009-05-10.
  4. Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA333. 
  5. Singh, Upinder (2017) (in en). Political Violence in Ancient India. Harvard University Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780674975279. https://books.google.com/books?id=t6A4DwAAQBAJ&pg=PA162. 
  6. Thapar, Romila (2012) (in en). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199088683. https://books.google.com/books?id=NoAyDwAAQBAJ&pg=PT27. 
  7. Michael Meister, "Early Architecture and Its Transformations: New Evidence for Vernacular Origins for the Indian Temple," in The Temple in South Asia, ed. Adam Hardy, London 2007
  8. It is not a Rayo Ashoka but Ranyo Ashoka. "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century" A Book By Upinder Singh.
  9. Ranyo Ashoka inscription refer to http://storyofkannada.blogspot.com/2009/12/karnataka-ashoka-s-swarnabhoomi.html?m=1

வார்ப்புரு:Gulbarga topics

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககனஹள்ளி&oldid=3513571" இலிருந்து மீள்விக்கப்பட்டது