அம்பாபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அம்பாபாலி அல்லது அமர்பாலி, பழங்காலத்து இந்திய நாடான வைசாலியின் அரசவை நடனமங்கை. இவளைப் பற்றி பழைய பௌத்த மற்றும் பாளி மொழி நூல்களில் செய்திகள் அறியப்படுகின்றன. சமஸ்கிருத்தத்தில் "அமர" என்பது "மா"வையும், "பாலி" - இலையையும் குறிக்கும், அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

அமர்பாலி ஒப்பற்ற அழகுடையவளாக இருந்தமையால், வைசாலி நாட்டின் பல செல்வந்தர்கள் அவளைத் தனதாக்க முற்பட்டனர். இப்பிரச்சனையைத் தீர்க்க அவளை அரசவை நாட்டியக்காரியாக்க வேண்டியிருந்தது. அமர்பாலியின் அழகு அண்டை நாடுகளுக்கும் பரவ, வைசாலியின் அண்டைநாடான மகதத்தின் அரசனான பிம்பிசாரனுக்கு, அவளுக்கு இணையான அழகுடைய நடனமங்கையைத் தனது அரசவைக்கு நியமிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. பின் வைசாலி மீது படையெடுத்து அவளை மணமுடித்தான். இவர்களிருவருக்கும் பிறந்த மகவுக்கு விமல கொண்டண என பெயரிடப்பட்டது.

ஒருமுறை அமர்பாலி புத்தருக்கு விருந்தளிக்க விரும்பினாள். புத்தரும், வைசாலி அரசின் எதிர்ப்பையும் மீறி விருந்துக்கு வர ஒப்புக்கொண்டார். அமர்பாலி புத்தருக்கு ராஜபோக உபச்சாரம் செய்தாள். இந்நிகழ்வுக்குப்பின் அவள் புத்த மதத்தை தழுவி புத்தகன்னிகையானாள், விமல கொண்டணனும் பௌத்த துறவியானான்.

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாபாலி&oldid=1396555" இருந்து மீள்விக்கப்பட்டது