குறிஞ்சிப்பாடி

ஆள்கூறுகள்: 11°34′N 79°36′E / 11.57°N 79.60°E / 11.57; 79.60
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி
இருப்பிடம்: குறிஞ்சிப்பாடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°34′N 79°36′E / 11.57°N 79.60°E / 11.57; 79.60
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு மற்றும் நடு நாடு இரண்டும் கலந்தது
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் குறிஞ்சிப்பாடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி குறிஞ்சிப்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

37,000 (2023)

2,652/km2 (6,869/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.95 சதுர கிலோமீட்டர்கள் (5.39 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kurinjipadi

குறிஞ்சிப்பாடி (ஆங்கிலம்:Kurinjipadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் பட்டணம் ஆகும்.


இது கடலூர்-திருச்சி கடலூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பசுமை நிறைந்த வயல்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி நகரியம் மற்றும் பாண்டிச்சேரி நகரங்கள் உள்ளன. குறிஞ்சிப்பாடியின் முக்கியத் தொழிலாக கைத்தறி லுங்கிகள், மணிலா உற்பத்தி & மளிகை மொத்த வியாபாரம் உள்ளது

அமைவிடம்[தொகு]

குறிஞ்சிபாடி நகருக்கு கிழக்கில் கடலூர் 32 கிமீ; மேற்கில் விருத்தாசலம் 31 கிமீ; வடக்கில் பண்ருட்டி 32 கிமீ; தெற்கில் சேத்தியாத்தோப்பு 19 கிமீ வடமேற்கு நெய்வேலி 15 கிமீதொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

13.95 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தமிழ்நாட்டின் பெரிய பேரூராட்சிகளில் ஒன்றுகுறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2023-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8509 வீடுகளும், 37000 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,206 மற்றும் 183 ஆகவுள்ளனர். [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. குறிஞ்சிப்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  5. Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிப்பாடி&oldid=3933922" இலிருந்து மீள்விக்கப்பட்டது