திருப்பாதிரிப்புலியூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருப்பாதிரிப்புலியூர் | |
| படிமம்:Cuddalore temple.jpg | |
| பெயர் | |
|---|---|
| வேறு பெயர்(கள்): | பாடலீஸ்வரர் கோயில் |
| பெயர்: | பாடலேஸ்வரர் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | கடலூர் மாவட்டம் |
| அமைவு: | கடலூர் மாவட்டம் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | பாடலேஸ்வரர் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | 2000 Years Ago |
திருப்பாதிரிப்புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாப்புலியூர் பாடலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்கள் அடங்கிய பாடல் பெற்ற தலம் பாடலீஸ்வரர் கோவில். இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலமாகும்.
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 18வது தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார்.