உள்ளடக்கத்துக்குச் செல்

விப்பிள் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விப்பிள் நோய்
Low magnification micrograph of Whipple's disease showing the characteristic foamy appearing infiltrate of the lamina propria. Duodenal biopsy. H&E stain.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K90.8
ஐ.சி.டி.-9040.2
நோய்களின் தரவுத்தளம்14124
மெரிசின்பிளசு000209
ஈமெடிசின்article/183350 article/1166639
ம.பா.தD008061
ஆர்பனெட்3452

விப்பிள் நோய் (Whipple's disease) என்பது துரோபெரைமா விப்ளெய் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் உடற்தொகுதி நோயாகும். சோர்ச் ஒய்ட் விப்பிள் 1907 இல் இதனை முதன்முதலில் கண்டறிந்தபோது இது சிறுகுடலில் உணவு அகத்துறிஞ்சாமையை ஏற்படுத்தும் இரையகக் குடலியநோய் என்று கருதினர். எனினும், மூட்டுக்கள், மைய நரம்புத் தொகுதி, குருதிச் சுற்றோட்டத் தொகுதி, நுரையீரல் தொகுதி போன்ற வேறு ஒருங்கியங்களையும் இந்நோய் பாதிக்கின்றது எனப் பின்னர் அறியப்பட்டது.[1] எடை குறைதல், வயிற்றோட்டம், மூட்டுவலி முதலியன பொதுவான முதன்மை அறிகுறிகளாகும். [2] விப்பிள் நோய் ஆண்களில் ஏற்படும் விழுக்காடு அதிகமாக உள்ளது. நோயாளிகளில் 87% ஆண்களாவர். [3]பொதுவாக இந்நோய் நீண்ட நாட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படலாம்.

நோய் அறிகுறிகள்

[தொகு]

விப்பிள் நோய்க்குரிய பொதுவான அறிகுறிகள்[4]:

  • வயிற்றுவலி
  • வயிற்றோட்டம்
  • கொழுமிய மலம்
  • உடல் எடை குறைதல்
  • மூட்டுவலி
  • கண் கோளாறுகள்
  • நரம்பியப் பிறழ்வுகள் (ஞாபக மறதி, வலிப்பு)
  • காய்ச்சல்

ஒரு குறிப்பிட்ட மூட்டில் உருவாகும் மூட்டுவலி வேறு மூட்டுகளுக்கு இடம் பெயரும். எடுத்துக்காட்டாக, தோள்மூட்டில் வலி என்று தெரிவிக்கும் நோயாளி மறுதடவை முழங்காலில் வலி என்று தெரிவிக்கக்கூடும். ஞாபக மறதி ஏற்படல் தாமதித்து ஏற்படும் அறிகுறியாகும், இது உண்டாவது நோய் குணமாகும்தன்மை குறைவதைக் காட்டுகின்றது.[4]

உணவு அகத்துறிஞ்சாமைக்குரிய அறிகுறிகள் இந்நோயில் காணப்படும். இவ்வகையான சில அறிகுறிகள்[5]:

அறுதியிடல்

[தொகு]

நோய் அறிகுறிகள் மற்றும் அகநோக்கி உயிரகச்செதுக்கு ஆய்வு மூலம் அறுதியிடல் மேற்கொள்ளப்படுகின்றது.

சிகிச்சை

[தொகு]

விப்பிள் நோய்க்குரிய சிகிச்சை நீண்டகால நுண்ணுயிர் கொல்லி மருந்துகளாகும். முதலில் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு சிரைவழி (அ. நாளவழி) செப்திரியக்சோன் அல்லது பெனிசிலின், அதைத்தொடர்ந்து ஒரு அல்லது இரண்டு வருடங்களுக்கு கோ-திரிமொக்சாசோல் (பக்ட்ரிம்) கொடுக்கப்படுகின்றது. குறைவான காலத்துக்கு நுண்ணுயிர் கொல்லி வழங்கப்பட்டால் இந்நோய் மீளவும் தோன்ற வாய்ப்புள்ளது. [6]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Whipple, G. H. (1907). "A hitherto undescribed disease characterized anatomically by deposits of fat and fatty acids in the intestinal and mesenteric lymphatic tissues". Bulletin of the Johns Hopkins Hospital 18: 382–93. 
  2. Bai, J. C., Mazure, R. M., Vazquez, H. (October 2004). "Whipple's disease". Clin. Gastroenterol. Hepatol. 2 (10): 849–60. doi:10.1016/S1542-3565(04)00387-8. பப்மெட்:15476147. 
  3. Fenollar, F., Puéchal, X., Raoult, D. (January 2007). "Whipple's disease". New England Journal of Medicine 356 (1): 55–66. doi:10.1056/NEJMra062477. பப்மெட்:17202456. 
  4. 4.0 4.1 Dan L. Longo, MD, Anthony S. Fauci, MD, Dennis L. Kasper, MD (2012). Harrison's Principles of Internal Medicine. The McGraw-Hill Companies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07174889-6. {{cite book}}: Unknown parameter |Edition= ignored (|edition= suggested) (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. "Whipple Disease Clinical Presentation". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Whipple's disease". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விப்பிள்_நோய்&oldid=2262071" இலிருந்து மீள்விக்கப்பட்டது