பயனர் பேச்சு:Udhay udhayan 03

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Udhay udhayan 03, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Udhay udhayan 03!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


வணக்கம் உதயன். அன்னாசி என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளதால் கூடுதல் தகவல்களை அப்பக்கத்தில் சேர்க்குமாறு வேண்டுகிறேன். ஏதேனும் உதவி தேவைப்படின் இப்பக்கத்திலே கேட்கலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:37, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் உதயன். பிற வலை தளங்களில் இருந்து தகவல்களை அப்படியே பிரதியிடுவது பதிப்புரிமை மீறிய செயலாகும். எனவே அவ்வாறு செய்ய வேண்டாம் இக்கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும். விக்கிப்பீடியாவின் பிற கட்டுரைகளைப் பார்வையிட்டு கலைக்களஞ்சிய நடைக்கேற்ப எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:06, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்[தொகு]

வணக்கம், Udhay udhayan 03!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton (பேச்சு) 04:29, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் நண்பரே, தாங்கள் பொறி்யியல் மாணவன் என்பதை அறிந்து மிகவும் மகிழ்வு கொள்கிறேன். நானும் பொறியியல் படித்தவன்தான். தாங்கள் எந்த துறை?. தற்பொழுது தாங்கள் எழுதிக் கொண்டிருக்கும் வார்ப்புரு:திருநெல்வேலி என்பது சரியானதல்ல. திருநெல்வேலி என்ற கட்டுரை முன்பே உள்ளது. அத்துடன் கட்டுரைகளை வார்பபுரு என்ற பெயர்வெளியில் எழுத வேண்டியதில்லை. எனவே விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் என்பதில் உள்ள கட்டுரைகளை படித்து தெளிவுருங்கள். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்த உதவுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் என்பதில் கேட்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:29, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஒரு வரிக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம், ஒருவரிக் கட்டுரைகள் விக்கியில் ஏற்கப்படுவதில்லை. கூடியவரை தகவல்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 12:48, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]

உதய், நீங்கள் விக்கிப்பீடியாவில் நிறைய முறை நல்ல தொகுப்புகளைச் செய்திருக்கிறீர்கள். எனினும், கட்டுரை ஒவ்வொன்றும் நான்கு வரிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய ஏதாவது யோசனை இருந்தால் தெரிவிக்கலாம். விக்கி நடைமுறை / தமிழ் / கட்டுரை தொடர்பான சந்தேகம் இருந்தால் எங்களில் யாராவது ஒருவரிடம் கேளுங்கள். விடை கூறுவோம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:15, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]

திருக்குறள்[தொகு]

திருக்குறள் கட்டுரையில் திருக்குரளைப் பற்றிய தகவல்களை மட்டுமே தரலாம். குறள்கள் 1330 ஐயுமோ அல்லது அவற்றின் உரையையோ இங்கு எழுத முடியாது. திருக்குறள் போன்ற மூல ஆக்கங்களை விக்கியின் சகோதரத் திட்டமான விக்கி மூலத்தில் தரலாம். அதற்கான இணைப்பை இங்குள்ள கட்டுரையில் தாருங்கள். விக்கிமூலத்தில் திருக்குறள் மூலப் பிரதி உள்ளது.--Kanags \உரையாடுக 13:08, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் எழுதல்[தொகு]

உங்களுக்கு விருப்பமான துறைகளில் கட்டுரைகளை எழுதுங்கள். எழுதத் தொடங்குவதற்கு முன்னர், விக்கியில் அத்துறையில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைப் பாருங்கள். அக்கட்டுரைகளில் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த மேலதிக தகவல்கள் இருந்தால் சேருங்கள். உ+ம்: நீங்கள் திரைப்படத்துறையில் விருப்பமானவர் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். பகுப்பு:திரைப்படம் இல் உள்ள கட்டுரைகளை ஒரு நோட்டம் விடுங்கள். பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் அங்குள்ளன. இவற்றில் பல குறுங்கட்டுரைகளே. அல்லது பகுப்பு:தொலைக்காட்சித் தொடர்கள் பகுப்பைப் பாருங்கள். மேலும், உரையாடல் பகுதியில் உங்கள் கையெழுத்தைப் பதிவதற்கு ~~~~ என எழுதுங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:19, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

விருப்பத் துறை தேர்வு[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் விக்கப்பீடியா பங்களிப்பின் இரண்டாவது கட்டத்தினை எட்டி விட்டீர்கள். தாங்கள் இப்பொழுது மிகவும் பிடித்தமான ஒரு துறையைத் தேர்வு செய்ய வேண்டும். திருக்குறள் கட்டுரையில் குறள்களுக்கு விளக்கம் எழுதுவதைக் கண்டேன். அதனால் தாங்கள் தமிழ் நூல்கள் தொடர்பான துறையைத் தேர்வு செய்து, தங்களுக்குத் தெரிந்த நூல்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் பதிவேற்றலாம் என்பது எனது தனிப்பட்ட யோசனை. இவைகளை மட்டுமே நீங்கள் எழுத வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. கலைக்களஞ்சியத்தில் தாங்கள் எந்த துறையில் வேண்டுமானாலும் பங்களிக்கலாம். தங்கள் பார்வைக்கு,..

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கூறுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:23, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

பயனர் பக்கம் வடிவமைப்பு[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் பயனர் பக்கத்தில் தமிழ் வார்ப்புருக்களைப் போன்று அனேக வார்ப்புருக்களை இணைத்திருந்தீர்கள். அவற்றை பயனர் பக்கத்தில் இட வேண்டியதில்லை. தங்களுக்கு பயனர் பக்கத்தினை வடிவமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்,. சிலரின் பயனர் பக்கத்தினை கீழே கொடுத்துள்ளேன். அவைகளைக் கண்டால் தங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும் நன்றி.

பேச்சு பக்கத்தில் கையெழுத்து[தொகு]

விக்கிப்பீடியாவின் கட்டுரை பேச்சுப் பக்கத்திலும், பயனர் பேச்சுப் பக்கத்திலும் தாங்கள் பேசும் பொழுது மட்டும் கையெழுத்தினை இடலாம். கட்டுரைகளில் இடுதல் கூடாது. இவ்வாறு தாங்கள் கையெழுத்தினை இடும் பொழுது இவர்தான் கருத்தினை தெரிவித்து உள்ளர் என்பது தெரியும். அத்துடன் அருகில் உள்ள பேச்சு என்பதை அழுத்தி உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திற்கும் வருதல் எளிதாகும். உதவிக்கு: விக்கிப்பீடியா:கையெழுத்து என்பதனைப் பாருங்கள் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:50, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

தங்களுடைய பயனர் பக்கத்தில் இணைப்பு இல்லாத சில வார்ப்புருக்களையும் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய "என் விக்கி வாழ்க்கையை மேம்படுத்த..." என்று தொடங்கும் வாசகத்தினையும் தற்போதைக்கு நீக்கியுள்ளேன் நண்பரே. அவற்றை பேச்சுப் பக்கத்தில் இணைத்துக் கொள்ளலாம். அத்துடன் தங்களுடைய கையெழுத்தினை விருப்பத்தேர்வுகள் என்ற பக்கத்தில் கையெழுத்து என்பதன் கீழ் இருக்கும் பெட்டியில் இடுங்கள். அதன் பின் --~~~~ என இடும் பொழுது கையெழுத்து முழுமையாக தெரிய வரும். நன்றாக தமிழில் எழுதும் தாங்கள் நிச்சயமாய் விக்கியின் பெரும் பங்களிப்பாளராய் வருவீர்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:30, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

கன்னங்குளம்[தொகு]

கன்னங்குளம் கட்டுரையை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.தங்கள் விக்கியார்வம் பிரமிக்கவைக்கிறது.மேலும் அக்கட்டுரையில் நீங்கள் தலைப்புக்களை அமைவிடம்: ............. கல்வி,தொழில்: ......... . என வழங்கியிருந்தீர்கள்.இவை தலைப்புக்கள் ஆகையால் அதை நீங்கள் இவ்வாறு இணைக்கலாம்.

== அமைவிடம் ==
................

== கல்வி,தொழில் == ............

இது இவ்வாறு காட்சியளிக்கும்.

அமைவிடம்[தொகு]

.................

கல்வி,தொழில்[தொகு]

.......

கட்டுரையில் திருத்தியுள்ளேன்.உங்களுக்கு உதவுமென நினைக்கின்றேன். மேலும் ஏதேனும் உதவி வேண்டும் எனில் எனது பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள்.நன்றி -- :) # நி $ ஆதவன் # ( உரையாட ) 16:00, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையைத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:50, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Udhay_udhayan_03&oldid=3185098" இலிருந்து மீள்விக்கப்பட்டது