உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு கொராசான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு கொரசான் மாகாணம்
South Khorasan Province
استان خراسان جنوبی
ஈரானில் தெற்கு கொரசான் மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் தெற்கு கொரசான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°51′55″N 59°12′59″E / 32.8653°N 59.2164°E / 32.8653; 59.2164
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 5
தலைநகரம்பிரிஜென்ட்
மாவட்டங்கள்11
பரப்பளவு
 • மொத்தம்1,51,913 km2 (58,654 sq mi)
மக்கள்தொகை
 (2016)[1]
 • மொத்தம்7,68,898
 • அடர்த்தி5.1/km2 (13/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRST)
மொழிகள்பாரசீகம்

தெற்கு கொரசான் மாகாணம் (South Khorasan Province (பாரசீக மொழி: استان خراسان جنوبیOstān-e Khorāsān-e Jonūbī ) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். மாகாணத்தின் தலைநகராக பிரிஜென்ட் நகரம் உள்ளது. மாகாணத்தின் பிற முக்கிய நகரங்கள் பெர்டோவ்ஸ், தாபாஸ் மற்றும் கெயென் ஆகியவையாகும். இந்த மாகாணமானது 2014 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் ஈரானின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதிகாக ஆக்கப்பட்டது.[2]

இந்தப் புதிய மாகாணமானது, ஈரானிய புதிய நிர்வாக திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இது அடிப்படையில் பழைய குவாஷிஸ்தானைக் கொண்டு உருவாக்கி, இதனுடன் பெரிய குராசானின் சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், வரலாற்று ரீதியாக குவாஷிஸ்தானானது தனித்துவமான ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு தனித்துவமான கலாச்சாரம், வரலாறு, சுற்றுச்சூழல், சூழலியல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான பெரிய குராசான் மாகாணமானது 2004 செப்டம்பர் 29 அன்று இரசாவி கொரசான் மாகாணம், வடக்கு கொரசான் மாகாணம், தெற்கு கொரசான் மாகாணம் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டபோது இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட தெற்கு கொரேசன் மாகாணத்தில் பிர்ஜண்ட் கவுண்டி மாவட்டம் மற்றும் சில மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை (அதாவது நேபபன், தர்மியன் மற்றும் சர்பிஷேஹ்) மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது, அடுத்தடுத்த ஆண்டுகளில், பழைய குவாஷினைச் சேர்ந்த (குவான், பெர்தோசு, டாபாஸ் போன்றவை ) வடக்கு மற்றும் மேற்கு நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் தெற்கு கொராசானுக்குள் இணைக்கப்பட்டன.

தெற்கு கொரசான் மாகாணமானது 11 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவை: பிரிஜ்சாண்டு கவுண்டி: ஃபெர்டோஸ் கவுண்டி, தாபாஸ் கவுண்டி, கயேன் கவுண்டி, நெஹபான்டான் கவுண்டி, டாரியியன் கவுண்டி, சர்பிஷெஹௌன், பாஷூய்ஹௌய் கவுண்டி, சரேன் கவுண்டி, ஸுர்ஹுக் கவுண்டி மற்றும் கஸ்ஃப் கவுண்டி ஆகியவை ஆகும்.

வரலாறு

[தொகு]

வரலாற்று காலம் முழுவதும் பெரிய குராசான் பிராந்தியமானது பல வம்சங்கள் மற்றும் அரசாங்கங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியும் கண்டிருக்கிறது. பாரசீகர்கள், அராபியர்கள், துருக்கியர்கள், குர்துகள்,[3] மங்கோலியர்கள், துர்க்மெனியர்கள், ஆப்கானியர்கள் போன்ற பல்வேறு பழங்குடிகள் பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதியில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஈரானின் பண்டைய புவியியலாளர்கள் ஈரானை ("சாசானியப் பேரரசு") எட்டு பிரிவுகளாகப் பிரித்தனர், இவற்றில் பரப்பளவில் மிகப் பெரியதானது பெரிய குராசான் ஆகும்.

குராசானில் உள்ள மெர்வினை அடிப்படையாக கொண்டு பல ஆண்டுகள் பார்த்தியா பேரரசு இருந்தது.

சாசானியப் பேரரசு காலத்தின் போது, மாகாணத்தை நான்கு பிரிவுகளாக கொண்டு "பாட்கோஸ்பான்" எனப்பட்ட தளபதிகள் பகுதிக்கு ஒருவராக என மொத்தம் நான்கு தளபதிகளால் இந்த மாகாணமானது நிர்வகிக்கப்பட்டது.

பாரசீகத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த போது கொராசான் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் இங்கு இருந்த நான்கு பெரிய நகரங்களான நிஷாபர், மெர்வ், ஹெரட், பால்க் போன்றவற்றின் பெயர்களால் அழைக்கப்பட்டன.

651ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரேபியப் படைகளால் கொராசனை கைப்பற்றப்பட்டது. இப்பகுதி 820 வரை அப்பாசிய மரபினரின் கையில் இருந்தது. அதன்பிறகு 896 ஆம் ஆண்டு ஈரானிய தாஹீத் குலத்தின் ஆட்சியிலும், 900 இல் சாமனித்து வம்சத்தாலும் ஆளப்பட்டது.

கசினியின் மகுமூது 994 இல் கொரசானை வென்றார். 1037ஆம் ஆண்டு செல்யூக் பேரரசின் ஆட்சியாளரான முதலாம் துர்கூல் பேக், நிஷாபூரை வெற்றி கொண்டார்.

பல படையெடுப்பாளர்களுக்கு எதிரான பதிலடியை கசினி முகமது கொடுத்துவந்தார். இறுதியாக கஜினி துருக்கியரால் சுல்தான் சான்ஜர் தோற்கடிக்கப்பட்டார். ஆனார் அதன்பிறகும் பலர் படையெடுத்து வந்தனர். 1157 ஆம் ஆண்டில் கொராசானை குவாரசமிய அரசமரபினர் கைப்பற்றினர். 1220இல் இப்பகுதியானது செங்கிஸ் கானால் மங்கோலியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.

1507இல், கொராசான் உஸ்பெக் பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1747இல் நாதிர் ஷாவின் மரணத்திற்குப் பிறகு இப்பகுதியை ஆப்கானியர் கைப்பற்றினர்.

பின்னர் பாரசீகர்களின் கைகளுக்கு வந்த இப்பகுதிகள் ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான கொராசானாக இருந்தது. இது 2004 செப்டம்பர் 29 அன்று இரசாவி கொரசான் மாகாணம், வடக்கு கொரசான் மாகாணம், தெற்கு கொரசான் மாகாணம் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National census 2016". amar.org.ir. பார்க்கப்பட்ட நாள் 2017-03-14.[]
  2. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 (1 Tir 1393, Jalaali) இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  3. "Kurds in Khorasan". CSKK. Archived from the original on 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கொராசான்_மாகாணம்&oldid=3559051" இலிருந்து மீள்விக்கப்பட்டது