இரசாவி கொரசான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரசாவி கொரசான் மாகாணம்
Razavi Khorasan Province

استان خراسان رضوی
மாகாணம்
இரசாவி கொரசானின் தலைநகரான மசுகத்தில் இமாம் ரெசாவின் சமாதி
இரசாவி கொரசானின் தலைநகரான மசுகத்தில் இமாம் ரெசாவின் சமாதி
இரசாவி கொரசான் மாகாண மாவட்டங்கள்
இரசாவி கொரசான் மாகாண மாவட்டங்கள்
ஈரானில் இரசாவி கொரசான் மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் இரசாவி கொரசான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°17′53″N 59°36′21″E / 36.2980°N 59.6057°E / 36.2980; 59.6057ஆள்கூற்று: 36°17′53″N 59°36′21″E / 36.2980°N 59.6057°E / 36.2980; 59.6057
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 5
தலைநகரம்மசுகது
மாவட்டங்கள்28
பரப்பளவு
 • மொத்தம்1,18,884
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்59,94,402
 • அடர்த்தி50
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
மொழிகள்பாரசீகம்

இரசாவி கொரசான் மாகாணம் (Razavi Khorasan Province (Persianபாரசீகம்: استان خراسان رضوی, Ostâne Xorâsâne Razavi) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது நாட்டின் வட பகுதியில் உள்ளது. மாகாணத்தின் தலைநகராக மசுகது நகரம் உள்ளது. மாகாணத்தில் உள்ள பிற நகரங்கள் குவான், டர்காஸ், செரன், சரக்ஸ், ஃபரிமானன், டோர்பட்-இ ஹேடிரிஹே, டோர்பட்-இ ஜாம், டபத், கஃப், ரோஷ்தகர், காஷ்மீர், பர்தாஸ்கன், நிஷாபூர், சபாஸ்வர், கோனாபாத், கலட் ஆகியவை ஆகும். இரசாவி கொரசான் மாகாணத்தின் மாவட்டங்களாக கலிலாபாத் கவுண்டி, மஹவெத் கவுண்டி, சேனாரன் கவுண்டி, டர்காஸ் கவுண்டி, கலாட் கவுன்ட், கச்சான் கவுண்டி, மஷ்காட் கவுண்டி, சரசஸ் கவுண்டி, நிஷப்பூர் கவுண்டி, ஃபிரூசே கவுண்டி, கோசாப் கவுண்டி, ஜொய்ய்ய்ன் கவுண்டி, ஜோகாத்தி கவுண்டி, தாவாரான் கவுண்டி, சாப்சேவர் குவாந்தான் கவுன்ட், ரோஷ்கார்க் கவுண்டி, டப்பாட் கவுண்டி, பாக்ஸ்ஜ் கவுண்டி, ஜவேக் கவுண்டி, ஃபரிமின் கவுன்ட், டோர்பாட்-ஜாம் கவுண்டி, டோர்பட்-இ ஹேடரிஹெய்ன் டவுன் & டார்பேபே மற்றும் ஷான்சிஸ் கவுண்டி போன்றவையாகும். ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான கொராசானாக இருந்து 2004 செப்டம்பர் 29 அன்று பிரிக்கப்பட்ட மூன்று மாகாணங்களில் இரசாவி கொரசான் மாகாணமும் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது 2014 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் ஈரானின் ஐந்தாம் வட்டாரத்தின் ஒரு பகுதிகாக ஆக்கப்பட்டது.[2] மஷ்தாத் நகரில் மாகாணத்தின் தலைமை செயலகம் உள்ளது.

வரலாற்று காலம் முழுவதும் பெரிய குராசான் பிராந்தியமானது பல வம்சங்கள் மற்றும் அரசாங்கங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியும் கண்டிருக்கிறது. பாரசீகர்கள், அராபியர்கள், துருக்கியர்கள், குர்துகள்,[3] மங்கோலியர்கள், துர்க்மெனியர்கள், ஆப்கானியர்கள் போன்ற பல்வேறு பழங்குடிகள் பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதியில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஈரானின் பண்டைய புவியியலாளர்கள் ஈரானை ("சாசானியப் பேரரசு") எட்டு பிரிவுகளாகப் பிரித்தனர், இவற்றில் பரப்பளவில் மிகப் பெரியதானது பெரிய குராசான் ஆகும்.

குராசானில் உள்ள மெர்வினை அடிப்படையாக கொண்டு பல ஆண்டுகள் பார்த்தியா பேரரசு இருந்தது. சாசானியப் பேரரசு காலத்தின் போது, மாகாணத்தை நான்கு பிரிவுகளாக கொண்டு "பாட்கோஸ்பான்" எனப்பட்ட தளபதிகள் பகுதிக்கு ஒருவராக என மொத்தம் நான்கு தளபதிகளால் இந்த மாகாணமானது நிர்வகிக்கப்பட்டது.

பாரசீகத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த போது கொராசான் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் இங்கு இருந்த நான்கு பெரிய நகரங்களான நிஷாபர், மெர்வ், ஹெரட், பால்க் போன்றவற்றின் பெயர்களால் அழைக்கப்பட்டன.

651ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரேபியப் படைகளால் கொராசனை கைப்பற்றப்பட்டது. இப்பகுதி 820 வரை அப்பாசிய மரபினரின் கையில் இருந்தது. அதன்பிறகு 896 ஆம் ஆண்டு ஈரானிய தாஹீத் குலத்தின் ஆட்சியிலும், 900 இல் சாமனித்து வம்சத்தாலும் ஆளப்பட்டது.

கசினியின் மகுமூது 994 இல் கொரசானை வென்றார். 1037ஆம் ஆண்டு செல்யூக் பேரரசின் ஆட்சியாளரான முதலாம் துர்கூல் பேக், நிஷாபூரை வெற்றி கொண்டார்.

1507இல், கொராசான் உஸ்பெக் பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1747இல் நாதிர் ஷாவின் மரணத்திற்குப் பிறகு இப்பகுதியை ஆப்கானிய துரானியப் பேரரசு கைப்பற்றியது.

பின்னர் பாரசீகர்களின் கைகளுக்கு வந்த இப்பகுதிகள் ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான கொராசானாக இருந்தது. பெரிய குராசான் எனப்பட்ட இது 2004 செப்டம்பர் 29 அன்று இரசாவி கொரசான் மாகாணம், வடக்கு கொரசான் மாகாணம், தெற்கு கொரசான் மாகாணம் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]