உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு அசர்பைசான் மாகாணம்

ஆள்கூறுகள்: 37°33′10″N 45°04′33″E / 37.5528°N 45.0759°E / 37.5528; 45.0759
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு அசர்பைசான் மாகாணம்
West Azerbaijan Province
استان آذربایجان غربی
மேற்கு அசர்பைசான் மாகாண மாவட்டங்கள்
மேற்கு அசர்பைசான் மாகாண மாவட்டங்கள்
ஈரானில் மேற்கு அசர்பைசான் மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் மேற்கு அசர்பைசான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°33′10″N 45°04′33″E / 37.5528°N 45.0759°E / 37.5528; 45.0759
நாடு ஈரான்
வட்டாரம்மூன்றாம் வட்டாரம்
தலைநகரம்ஊர்மியா
மாவட்டங்கள்17
அரசு
 • ஆளுநர்கோர்பானலி சைதாட்
 • MPs of ParliamentWest Azerbaijan Province parliamentary districts
 • MPs of Assembly of ExpertsDirbaz, Ali Akbar Ghoreyshi & Mojtahed Shabestari
 • Representative of the Supreme LeaderMehdi Ghoreyshi
பரப்பளவு
 • மொத்தம்37,437 km2 (14,455 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்30,80,576
 • அடர்த்தி82/km2 (210/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRST)
மொழிகள்பாரசீகம் (அலுவல்)
உள்ளூர் மொழிகள்:
அசர்பைஜான்[2][3][4][5]
குர்தி[6][7][8][9][10]
அசீரியன்

மேற்கு அசர்பைசான் மாகாணம் (West Azerbaijan Province[11] ) என்பது ஈரானின் உள்ள முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் வட மேற்கில் உள்ளது. இதன் எல்லைகளாக துருக்கி, ஈராக்கு , அசர்பைசானின் தன்னாட்சி நாக்ஷிவன் குடியரசு, ஆகிய அண்டை நாடுகளுடன் எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் ஈரானுக்குள் கிழக்கு அஜர்பைசான், ஜான்ஜான், குர்திஸ்தான் மாகாணங்களை எல்லையாக கொண்டுள்ளது. இந்த மாகாணமானது ஈரானின் மூன்றாவது வட்டாரத்தில் உள்ளது.[12] இதை ஆர்மீனியாவிலிருந்து அசர்பைசான் குடியரசுவும் துருக்கியின் குறுகிய பகுதியாலும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு அசர்பைசான் மாகாணமானது 39,487 கிமீ², அல்லது உர்மியா ஏரியையும் சேர்த்து 43,660 கிமீ² பரப்பளவு கொண்டுள்ளது. 2012இல் மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 3 மில்லியன் (கணிப்பு) என இருந்தது.[13] மாகாணத்தின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் ஊர்மியா ஆகும்.

தொல்பொருளியல்

[தொகு]

இப்பகுதியியில் உள்ள தெபீ ஹசனுல் போன்ற தளங்களில் நடந்த அகழ்வாய்வுகள் வாயிலாக இங்கு நிரந்தர குடியேற்றங்களானது கி.மு 6 ஆயிரத்துக்கு முன்பே ஏற்பட்டது தெரியவருகிறது. 1958 ஆம் ஆண்டு ஹஸன்லுவில் பிரபலமான தங்க சாடி கண்டுபிடிக்கப்பட்டது. உலகளாவில் ஒயின் தயாரிப்பு குறித்த மிகப் பழமையான சான்றுகள் கிடைத்த முதன்மையான பகுதியான டெப்சா ஹஜ்ஜி ஃபிரூஸ் இந்த மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாகும்.[14][15][16] கோயி தெப்பே மற்றொரு குறிப்பிடத்தக்க தளமாக உள்ளது, அங்கு கி.மு. 800ஐச் சேர்ந்த ஒரு உலோகத் தகடு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் கில்கமெஷ் காப்பியத்திலிருந்து ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணமானது, பல வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள 169 தளங்கள் ஈரானின் கலாசார மரபுரிமை நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிலவியலும், கால நிலையும்

[தொகு]

மேற்கு அசர்பைசான் மாகாணமானது உர்மியா ஏரி உட்பட 43,660 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஈரானின் வடமேற்கே அமைந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் வீசும் பருவக் காற்றுகள் பெரும்பாலும் இந்த மாகாணத்தின் காலநிலையை பெரிதும் பாதிக்கின்றன. குளிர் காலத்தில் வடக்கில் இருந்து வீசும் குளிர் காற்றானது மாகாணத்தை பாதித்து, கடுமையான பனிக்கு காரணமாகின்றது.[17]

வானிலையியல் தரவுகளின் படி, மாகாணத்துக்குள் உள்ளூர் வெப்பநிலையானது மாறுபடுகிறது. சராசரி வெப்பநிலையானது 9.4 °C என்பதில் இருந்து, மேகுவில் 11.6 °C என்றும், டெகப்பில் 9.8 °C என்றும், ஊர்மியாவில் 10.8 °C என்றும், கோயாவில் 9.4 °C மாகுவில் 11.6 °C என்றும் மாறுபடுகிறது. இதே தரவுப்படி, மாகாணத்தில் அதிகபட்ச வெப்பநிலை சூலை மாதம் 34 ° C ஆகக் காணப்படுகிறது, அதேசமயம் குறைந்தபட்ச வெப்ப நிலையானது சனவரி மாதத்தில் -16 ° C ஆகும். வெப்பநிலை மாறுபாடானது அதிகப்பட்சமாக கோடையில் 4 ° C ஆகவும், குளிர்காலத்தில் 15 ° C ஆகவும் இருக்கும். ஆண்டு சராசரி வாழ்படிவானது வடக்கின் மாகுவில் சுமார் 300 மில்லிமீட்டர் (12 அங்குலம்) என்றும் தெற்குப் பகுதிகளில் 870 மில்லி மீட்டர் (34 அங்குலம்) என்றும் உள்ளது.[18] இதில் கணிசமான அளவு பனி இருக்கும்.

நிர்வாக பிரிவுகள்

[தொகு]

மேற்கு அசர்பைசான் மாகாணமானது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள்

[தொகு]

ஈரானில் இன ரீதியிலான உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் அல்லது கணக்கெடுப்பு விவரங்கள் எதுவும் இல்லை. மேற்கு அசர்பைசான் மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் அசர்பெய்சியர்கள் மற்றும் குர்துகள் ஆவர். மேலும் மாகாணத்தில் அரேபியர்கள், அசீரியர்கள், யூதர்கள் ஆகிய மூன்று சிறுபான்மை இன மற்றும் மதக் குழுவினர் உள்ளனர்.

மேற்கு அசர்பைசான் மாகாணத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் அசர்பைசான்கள்[19][20] 76.2 சதவிகிதம் .[21] மற்றும் குர்துகள் 21.7 சதவிகிதம் சதவிகிதம் அசர்பைசான்கள் பெரும்பாலும் சால்டோரன், மகு, கோயோ, சால்மாஸ், உர்மியா, நாகதேஷ், மைந்தோவாப், ஷாஹிந்தேஜ், தாகப் போன்ற மாவட்டங்களில் வாழ்கின்றனர், மேலும் குர்துகள் பெரும்பாலும் ஓஷ்வானியே, சர்தாஷ்ட், மஹாபாத், பிர்ஷானர், புக்கன் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர்.

பண்பாடு

[தொகு]

மேற்கு அசர்பைசான் அசாரி மற்றும் குர்திஷ் மரபுகளிலிருந்து பரவலாக வளமான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இசை, நடனம் போன்ற பல உள்ளூர் மரபுகள் மாகாண மக்களின் மத்தியில் தொடர்ந்து வாழ்கின்றன. பாரசீகத்தின் நீண்டகால மாகாணமாக உள்ள, மேற்கு அர்பைசான் குறித்து பாரசீக இலக்கியத்தில் பல சந்தர்ப்பங்களில் ஈரானின் தலை சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களால் பெருமையாக குறிப்பிட்டுள்ளனர்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்

[தொகு]

ஊர்மியா பல்கலைக்கழகமானது 1878 ஆம் ஆண்டு அமெரிக்கன் பிரஸ்பைடிரியன் மிஷனரினால் கட்டப்பட்டது. ஜோசப் கோக்ரான் தலைமையிலான அமெரிக்க மருத்துவ கூட்டாளிகளின் குழுவினால் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. ஊர்மியாவின் அருகே ஒரு பழைய கல்லறையில் கொக்ரான் மற்றும் அவருடைய சக ஊழியர்கள் அடக்கம் செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Selected Findings of National Population and Housing Census 2011
  2. "Geography: Turkic-speaking Groups" Iran: A Country Study, Federal Research Division, Library of Congress, (2008)
  3. Minahan, James (2002) Encyclopedia of the Stateless Nations: S-Z (Volume 4 of Encyclopedia of the Stateless Nations: Ethnic and National Groups Around the World) Greenwood Publishing Group, Westport, Connecticut, page 1765, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-32384-3
  4. Price, Glanville (editor) (2000) Encyclopedia of the languages of Europe Wiley-Blackwell, Oxford, England, page 21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-22039-8
  5. Shaffer, Brenda (2002) Borders and brethren: Iran and the challenge of Azarbaijani identity, MIT Press, Cambridge, Massachusetts, page 1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-69277-9
  6. گنجینه ای بنام آذربایجانغربی பரணிடப்பட்டது 2018-09-30 at the வந்தவழி இயந்திரம் - سازمان تعزیرات حکومتی (The government suspended) Farsi
  7. معرفی آذربایجان غربی - پورتال جامع آذربایجان غربی (Farsi & English)
  8. آذربایجان غربی ؛ رنگین کمان اقوام و اقلیت ها در مسیر توسعه பரணிடப்பட்டது 2013-01-04 at Archive.today - مهر نیوز Mehr News (Farsi)
  9. گردشگری استان பரணிடப்பட்டது 2011-12-23 at the வந்தவழி இயந்திரம் - سازمان نظام کاردانی ساختمان استان آذربایجان غربی (Farsi)
  10. استان آذربایجان غربی பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம் - سايت جامع گردشگري ايران (Farsi)
  11. Locally, "West Azerbaijan Province" is written: பாரசீக மொழி: استان آذربایجان غربی‎; அசர்பைஜான்: غربی آذربایجان اوستانی
  12. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  13. "Azarbayejān-e Gharbi". World Gazetteer. Archived from the original on 30 September 2007.
  14. "Penn Museum - University of Pennsylvania Museum of Archaeology and Anthropology". Archived from the original on 2008-12-16.
  15. Voigt, Mary M. and Meadow, Richard H. (1983) Hajji Firuz Tepe, Iran: the neolithic settlement University Museum, University of Pennsylvania, Philadelphia, Pennsylvania,
  16. Bert G. Fragner, ‘Soviet Nationalism’: An Ideological Legacy to the Independent Republics of Central Asia ’ in” in Van Schendel, Willem(Editor) . Identity Politics in Central Asia and the Muslim World: Nationalism, Ethnicity and Labour in the Twentieth Century. London , GBR: I. B. Tauris & Company, Limited, 2001. Excerpt from pg 24: "Under Soviet auspices and in accordance with Soviet nationalism, historical Azerbaijan proper was reinterpreted as 'Southern Azerbaijan', with demands for liberation and, eventually, for 're'-unification with Northern (Soviet) Azerbaijan a breathtaking manipulation. No need to point to concrete Soviet political activities in this direction, as in 1945–46 etc. The really interesting point is that in the independent former Soviet republics this typically Soviet ideological pattern has long outlasted the Soviet Union."
  17. "Azerbaijan". Encyclopædia Britannica.
  18. See Iranian Meteorological Agency பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம்
  19. Azerbaijanis (author Brenda Shaffer), page 206. // Encyclopaedia of Modern Asia. Volume 1: Abacus to China. Editors: David Levinson and Karen Christensen. New York: Charles Scribner's Sons, 2002, LXVII+ 529 pages.
  20. Federal Research Division, 2004, Iran A Country Study, Kessinger Publishing,
  21. General Culture Council of Islamic Republic of Iran for West Azerbaijan province: فهرست نویسی پیش از انتشار کتابخانه ملی جمهوری اسلامی ایران * شماره کتابشناسه ملّی:۲۸۹۰۶۹۰ *عنوان و نام پدیدآورنده:طرح بررسی و سنجش شاخص های فرهنگ عمومی کشور(شاخص های غیرثبتی){گزارش}:گزارش های پیشرفت طرح ها وکلان شهرها/به سفارش شورای فرهنگ عمومی کشور؛مدیر طرح و مسئول سیاست گذاری:منصور واعظی؛اجرا:شرکت پژوهشگران خبره پارس *بهاء:۱۰۰۰۰۰ ریال-شابک:۷-۶۸-۶۶۲۷-۶۰۰-۹۷۸ *وضعیت نشر:تهران-موسسه انتشارات کتاب نشر ۱۳۹۱ *وضعیت ظاهری:۲۹۵ ص:جدول(بخش رنگی)،نمودار(بخش رنگی)*یادداشت:عنوان دیگر:طرح و بررسی و سنجش شاخص های فرهنگ عمومی کشور(شاخص های غیرثبتی) سال ۱۳۸۹ *توصیفگر:شاخص های غیرثبتی+شاخص های فرهنگی+گزارش های پیشرفت طرح ها و کلان شهرها *توصیفگر:ایران ۳۸۶۲۸۹ *تهران۱۹۹۰۶۶ /مشهد۲۹۲۳۴۱ /اصفهان ۱۷۰۰۱۷/تبریز۱۸۴۸۱/کرج ۲۷۸۲۵۲/شیراز۲۵۱۷۰۳/اهواز۱۷۶۴۰۳/قم۲۷۰۸۷۷ *شناسنامه افزوده:واعظی،منصور،۱۳۳۳-۷۳۵۰۶۸ *شناسنامه افزوده:شرکت پژوهشگران خبره پارس /شورای فرهنگ عمومی *مرکز پخش:خیابان ولیعصر،زرتشت غربی،خیابان کامبیز،بخش طباطبایی رفیعی،پلاک۱۸،تلفن:۷-۸۸۹۷۸۴۱۵ *لیتوگرافی،چاپ وصحافی:سازمان چاپ و انتشارات اوقاف , (German)Titel: Der Plan um Untersuchungen und Auswertungen der Indikatoren der generellen Kultur des Landes,

வெளி இணைப்புகள்

[தொகு]