யாசுது மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாஸ்த் மாநிலம்
استان یزد
ஈரானிய மாநிலம்
Yazd Province montage.png
Map of Iran with Yazd highlighted
ஈரானில் இயாஸ்தின் அமைவிடம்
நாடு ஈரான்
மண்டலம்மண்டலம் 5
தலைநகரம்இயாஸ்த்
கவுன்ட்டிகள்10
பரப்பளவு
 • மொத்தம்1,29,285 km2 (49,917 sq mi)
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்1,074,428
 • அடர்த்தி8.3/km2 (22/sq mi)
நேர வலயம்ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+04:30)
முதன்மை மொழிகள்பாரசீகம்
பெகதினி¹

இயாஸ்த் மாநிலம் (Yazd Province, பாரசீகம்: استان یزد, Ostān-e Yazd ) ஈரானின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர் இயாஸ்த் ஆகும். 2014இல் இது மண்டலம் 5இல் சேர்க்கப்பட்டது.[1]

131,575 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாநிலம் பத்து கவுன்ட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அபர்கு கவுன்ட்டி, அர்தகான் கவுன்ட்டி, பாஃப்க் கவுன்ட்டி, பெகபாத் கவுன்ட்டி, கதம் கவுன்ட்டி, மெஹ்ரிஸ் கவுன்ட்டி, மெபோத் கவுன்ட்டி, அஷ்கெசர் கவுன்ட்டி, டஃப்ட் கவுன்ட்டி, இயாஸ்த் கவுன்ட்டி. 1996 கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 750,769 ஆகும்; இதில் 75.1% நகர்ப்புறவாசிகள், மீதம் 24.9% சிற்றூர்வாசிகள் ஆவர். 2011 கணக்கெடுப்பில், இதன் மக்கள்தொகை (தென் கோரசன் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட டபாஸ் கவுன்ட்டியையும் சேர்த்து) 1,074,428 ஆக இருந்தது. டபாசு கவுன்ட்டி நீங்கலாக 2006இல் 895,276 ஆக இருந்தது.[2]

இயாஸ்த் நகரம் இதன் நிர்வாகத் தலைநகராக மட்டுமன்றி பொருளியல் நிலைக்கானத் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதுவே இம்மாநிலத்தில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது.

இயாஸ்திலுள்ள சரத்துஸ்திர கோவில்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian (Farsi)). Hamshahri Online. 22 June 2014 (1 Tir 1393, Jalaali). Archived from the original on 23 June 2014. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-01-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-08-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசுது_மாகாணம்&oldid=3226165" இருந்து மீள்விக்கப்பட்டது