அமதான் மாகாணம்
அமாதான் மாகாணம்
Hamedan Province استان همدان | |
---|---|
ஈரானுக்குள் அமாதானின் அமைவிடம் | |
நாடு | ஈரான் |
மண்டலம் | மண்டலம் 4 |
தலைநகரம் | அமாதான் |
பெருநகரம் | 8 |
பரப்பளவு | |
• மொத்தம் | 19,368 km2 (7,478 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 17,58,268 |
• அடர்த்தி | 91/km2 (240/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRST) |
பிரதான மொழிகள் | பாரசீகம் அசர்பைசானி இலூரிசு குர்திசு |
அமாதான் மாகாணம் (Hamadan Province, பாரசீகம்: استان همدان:) ஈரான் நாட்டின் 31 மாகாணங்களில் ஒரு மாகாணம் ஆகும். அமாதான் நகரம் இம்மாகாணத்தின் மையமாக செயல்படுகிறது. 19546 கிலோமீட்டர் 2 பரப்பளவு கொண்ட அமாதான் மாகாணத்தில் 1996 ஆம் ஆண்டில் மக்கள் தொகையாக 1.7 இலட்சம் நபர்கள் இருந்ததாகவும், 17,58,268 நபர்கள் இருந்ததாக 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டின் நிர்வாக வசதிக்காக, 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட ஐந்து மண்டலங்களில் இம்மாகாணம் நான்காவது மண்டலத்தில் வைக்கப்பட்டது[2].
அமாதான், தூசெர்கான், நகாவந்து, மலாயெர், அசாதாபாத்து, பகர், பாமெனின், இரசான், கபுத்ரகாங்கு போன்றவை இம்மாகணத்தின் பெரிய நகரங்களாகும்.
புவியியல்
[தொகு]வடமேற்கிலிருந்து தென்மேற்கை நோக்கிச் செல்லும் அல்வாண்டு மலையின் உயரப்பகுதியில் அமாதான் மாகணம் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான ஈரான் நாட்டின் சக்ரோசு மலைத்தொடரில் ஒரு பகுதி அல்வாண்டு மலையாகும். அமதானில் மிதவெப்ப சூடான கோடை காலமும் அதனுடன் ஒப்பீட்டத்தக்க அளவில் குளிர் காலமும் நிலவுகிறது.
மக்கள் தொகையும் மொழிகளும்
[தொகு]மக்கள் தொகையியல்
[தொகு]கவுண்டிகள் எனப்படும் பெருநகரங்களில் , மலாயெர் மாவட்டம் 310000 நபர்கள். நகாவந்து மாவட்டம் 200000 நபர்கள், அமாதான் மாவட்டம் 700000 நபர்கள், தூசெர்கான், அசாதாபாத்து மாவட்டங்கள் கிட்டத்தட்ட 150000 நபர்கள், இரசான், கபுத்ரகாங்கு, பகர் மாவட்டம் ஒவ்வொன்றும் சுமார் 120000 முதல் 140000 நபர்கள் வரையும் மக்கள் தொகையாகக் கொண்டுள்ளன.
1997 ஆம் ஆண்டின் அலுவல்பூர்வ புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமாதான் மாவட்டத்தில் அப்பொழுது 5634444 நபர்கள் வழ்ந்ததாக கணக்கிடப்பட்டது.
மொழிகள்
[தொகு]- பாரசீக மொழி: அமாதான் நகரத்திலுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3]. ஈரான் நாட்டின் அலுவலக மொழியும் பாரசீக மொழியாகும்[4][5]
- அசர்பைசானி மொழி: அமாதான் நகரத்திற்கு வடக்கு,மேற்குப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அசீரி மொழியைப் பேசினர். (மாகாணத்தின் 562 கிராமங்கள்)[4][5].
- இலூரிசு: அமாதான் மாகாணத்திற்குத் தெற்குப் பகுதியில் இருக்கும் மலாயெர், நகாவந்து, சாமென் பகுதிகளில் இலூரிசு மொழியைப் பேசினர். (இலூரி மற்றும் இலாக்கைச் சேர்ந்த 255 கிராமங்கள்)[4][5].
- குர்திசு: மாகானத்தின் மேற்கில் வாழ்ந்த மக்கள் குர்திசு மொழியைப் பேசினர்[4][5]
பெருநகரங்களின் மொழிகள்
[தொகு]- அமாதான் நகரத்தில் 80 சதவீத மக்கள் பாரசீக மொழியையும், 12% மக்கள் அசீரி மொழியையும், 8% மக்கள் இலுரி, குர்திசு மற்றும் இலாகி மொழிகளையும் பேசுகின்றனர்.
- அமாதான் மாகாணத்திலுள்ள பெருநகரங்களில் அமாதான் நகரத்தை உள்ளடக்கிய அமாதான் பெருநகரில் 70 சதவீத மக்கள் பாரசீக மொழியையும், 22% மக்கள் அசீரி மொழியையும், 8% மக்கள் இலுரி, குர்திசு மற்றும் இலாகி மொழிகளையும் பேசுகின்றனர்[4]
- அமாதான் நகரத்தைப் பொருத்தவரையிலும் 97% மக்கள் பாரசீக மொழியைப் பேசத்தெரிந்தவர்களாக உள்ளனர். எஞ்சியிருக்கும் 3% பிற மொழிகளை மட்டும் பேசுகின்றனர்[6].
- 1997 இல் நகாவந்து நகரத்தின் மக்கள் தொகை 184160 நபர்களாக இருந்தது. இவர்களில் 99% மக்கள் இலூரி மற்றும் இலாகி மொழியைப் பேசினர்[4].
- 1997 இல் மலாயெர் மக்கள் தொகை 297062 நபர்களாக இருந்தது. இவர்களில் 45% மக்கள் பாரசீக மொழியையும், 45% மக்கள் இலூரி மற்றும் இலாகி மொழியையும், 10% மக்கள் அசீரி மொழியையும் பேசினர்.[4]
- 1997 இல் தூசெர்கான் நகரின் மக்கள் தொகை 118945 நபர்களாக இருந்தது. இவர்களில் பெரும்பான்மையோர் இலூரி மற்றும் இலாகி மொழியையும், 22% மக்கள் சிறுபான்மையில் அசீரி மொழியையும் பேசினர்[4].
- 1997 இல் அசாதாபாத் நகரில் மக்கள் தொகை 110077 நபர்களாக இருந்தது. இவர்களில் 63% மக்கள் பாரசீக மொழியையும், 4% மக்கள் இலூரி மற்றும் இலாகி மொழியையும், 19% மக்கள் குர்திசு மொழியையும் 14% மக்கள் அசீரி மொழியையும் பேசினர்[4].
- 1997 இல் கபுர்தகாங்கு நகரில் மக்கள் தொகை 152318 நபர்களாக இருந்தது. இவர்களில் 5% மக்கள் பாரசீக மொழியையும், 5% மக்கள் குர்திசு மொழியையும் 90% மக்கள் அசீரி மொழியையும் பேசினர்.
- 1997 இல் இரசான் நகரில் மக்கள் தொகை 123790 நபர்களாக இருந்தது. 0.53% மக்கள் குர்திசு மொழியையும் 99.47% மக்கள் அசீரி மொழியையும் பேசினர்[4].
- 1997 இல் பகர் நகரில் மக்கள் தொகை 127600 நபர்களாக இருந்தது. இவர்களில் 4.5% மக்கள் பாரசீக மொழியையும், 1.3% மக்கள் இலூரி மொழியையும், 7.9% மக்கள் குர்திசு மொழியையும் 86.3% மக்கள் அசீரி மொழியையும் பேசினர்[4].
வரலாறு
[தொகு]ஈரான் மற்றும் அதன் நாகரிகத்தின் மிக பழமையான பகுதிகளில் அமாதான் மாகாணமும் ஒன்றாகும். இந்த பகுதியில் காணப்படும் எச்சங்கள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன. மெதியாவில் வாழ்ந்த மெதியர்கள் பாரசீகர்களுடன் கூட்டு சேர்வதற்கு முன்னர் அவர்களின் கூடுமிடமாக இருந்த எக்பாடனா மட்டும் இன்றைய அமாதானில் எஞ்சியிருக்கிறது. எக்பாடானவை அரசர் யாம்சித் கட்டியதாக கவிஞர் பெர்தோசி சொல்கிறார். முற்காலத்தில் இங்கே ஒரு கோட்டை இருந்ததாக வரலாற்று பதிவுகள் சொல்கின்றன. ஆஃப்ட் எசார் என்ற பெயரிலான அக்கோட்டையில் ஆயிரம் அறைகள் இருந்ததாகவும் அதன் ஆடம்பரம் பாபிலோன் கோபுரத்திற்கு சமமானதாகவும் இருந்தது என்றும் நம்பப்படுகிறது.
நகரின் கட்டமைப்புகள் கி.மு. 700 முதல் ஆட்சிபுரிந்த மெதிய அரசர் தியா ஆக்குடன் தொடபுடையதாக அறியப்படுகிறது. கிரேக்கப் பதிவுகளின்படி இந்நிலப்பகுதியானது எக்படான் பகுதி என்று குறிக்கப்படுகிறது. பார்த்தியன் காலத்தில், சிதெசிபோன் பாரசீகத்தின் தலைநகராக மாறியது, மற்றும் பார்த்தியன் ஆட்சியாளர்களின் கோடைக்கால தலைநகரமாகவும் வசிப்பிடமாகவும் அமாதான் கருதப்பட்டது. பார்தியர்களுக்கு பிறகு, சசானித்துகள் அதேபோல தங்கள் கோடை அரண்மனைகளை அமாதானில் கட்டினார்கள்.
633 ஆம் ஆண்டில் நகாவந்து போர் நடந்த போது அமாதான் அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது. சில காலம் அமாதான் செழித்தும் சில நேரங்களில் அதன் செழிப்பு மங்கியும் இருந்துள்ளது. புவாய்கிட்டுகளின் காலத்தில் அமாதான் ஏராளமான சேதங்களைக் கண்டது. 11-வது நூற்றாண்டில், செல்யூக்கர்கள் தலைநகர் பாக்தாத்தை மீண்டும் அமாதானுக்கு மாற்றினார்கள்.
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் பொதும் அமாதான் நகரத்தின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது. தைமூர்களின் படையெடுப்பின் போது முற்றிலுமாக இந்நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் சபாவித் சகாப்தத்தில் இந்த நகரம் மீண்டும் ஒருமுறை தழைத்தது. 18 ஆம் நூற்றாண்டில், அமாதான் ஒருமுறை ஓட்டோமன்களுக்கு தாரைவார்க்கப்பட்டது.. ஈரான் மற்றும் ஓட்டோமான்கள் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதால் நாதிர்சா மீண்டும் இதைக் கைப்பற்றினார்.
இன்றைய அமாதான்
[தொகு]இன்றைய அமாதான் மாகாணத்தில் 18,20,000 நபர்கள் வாழ்கின்றனர். நிர்வாக வசதிக்காக இம்மாகாணம் 8 நிர்வாக கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்கள் மேலும் மாவட்டம் என்ற துணைப்பிரிவுகள் 23 ஆக பிரிக்கப்பட்டு இயங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது மே 31, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-02. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 "Hamedan provinces - Population and ethnicites". பார்க்கப்பட்ட நாள் August 30, 2016.
{{cite web}}
: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு] accessed on March 12, 2006. Replaced with Archive link on February 22, 2010. - ↑ 5.0 5.1 5.2 5.3 "جمعيت و قوميتها". Archived from the original on 2006-04-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ Official statistics from 1997 (1375) - Hamadan provinces - Population and ethnicites -"Archived copy". Archived from the original on 2008-05-12. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) CS1 maint: bot: original URL status unknown (link) accessed on March 12, 2006. Replaced with Archive link on Feb 22, 2010.
புற இணைப்புகள்
[தொகு]- Official website of Hamadan Governorship
- Hamadan Cultural Heritage Organization பரணிடப்பட்டது 2005-05-29 at the வந்தவழி இயந்திரம்
- Official website of Hegmataneh (Ecbatana) பரணிடப்பட்டது 2008-04-22 at the வந்தவழி இயந்திரம்
- Hamedān entries in the Encyclopædia Iranica