ஈரானின் மாகாணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரானின் அரசாட்சிப் பிரிவு

ஈரான் 31 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவார்.

வரலாறு[தொகு]

1950 வரை. ஈரான் 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை அர்தலான், அசர்பைசான், பலூச்சிஸ்தான், பார்ஸ், கிலன், அராக்-எ அஜம், கொரசான், குசஸ்தான், கெர்மான், இலாரஸ்தான், லொரஸ்தான், மஜந்தரன் ஆகும். 1950-ஆம் ஆண்டு ஈரான் நாடு 10 மாகாணங்களுடனும் அதன் கீழ் ஆளுகைகளுமாய் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவை கிலான்; மஜந்தரன்; கிழக்கு அசர்பைசான்; மேற்கு அசர்பைசான்; கேர்மான்ஷா; குசஸ்தான்; ஃபர்ஸ்; கெர்மான்; கொரசான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகும். 1960-இலிருந்து 1981 வரை ஒவ்வொரு ஆளுகைகளும், மாகாணங்களாக உயர்த்தப்பட்டன. மிகச் சமீபமாக 2004ஆம் ஆண்டு மிகப்பெரிய மாகாணமான கொரசான் மாகாணத்தை மூன்று மாகாணங்களாக ஈரான் பிரித்துள்ளது.


பட்டியல்[தொகு]

மாகாணம் தலைநகரம் பரப்பளவு[1] மக்கள் தொகை[2] பெருமாவட்டங்கள்(counties) மற்ற தகவல் வரைபடம்
அர்தாபில் அர்தாபில் 17800 ச.கிமீ 1,257,624 9 1993 வரை, அர்தாபில் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது.[3] IranArdabil.png
கிழக்கு அசர்பைசான் தப்ரீசு 45650 ச.கிமீ 3,620,183 19 IranEastAzerbaijan.png
மேற்கு அசர்பைசான் உர்மியா 37437 ச.கிமீ 2,949,426 14 பாலவி பேரரசு இருந்தபோது உர்மியா இரேசையே என்று வழங்கப்பட்டது. IranWestAzerbaijan.png
புஷெர் பூசெகர் 22743 ச.கிமீ 887,115 9 முதலில் ஃபர்ஸ் மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இந்த மாகாணம் கலீஜ்-ஏ-ஃபர்ஸ் என்ற பெயரால் வழங்கப்பட்டது.(Persian Gulf) IranBushehr.png
சஹர் மஹல் மற்றும் பக்தியாரி சாகர்-இ கொர்து 16332 ச.கிமீ 842,002 6 1973 வரை இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. IranChaharMahaalBakhtiari.png
ஃபர்ஸ் ஷிராஸ் 122608 ச.கிமீ 4,385,869 23 IranFars.png
கிலான் ரஷ்த்து 14042 ச.கிமீ 2,410,523 16 IranGilan.png
கொலெஸ்தான் கொர்கான் 20195 ச.கிமீ 1,637,063 11 மே 31, 1997 அன்று, அலியாபாத்கொன்பாத்-எ-காவுஸ், கொர்கான், கொர்த்குய், மினுதஸ்து மற்றும் துருக்கமான் ஆகிய ஷேரிஸ்தான்கள், மஜந்தரன் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கொலெஸ்தான் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. 1937 வரை கொர்கான் எஸ்தராபா அல்லது அஸ்தராபா என்று அழைக்கப்பட்டது IranGolestan.png
ஹமாதான் ஹமாதான் 19368 ச.கிமீ 1,790,770 8 முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது IranHamadan.png
ஹொர்மொஸ்கான் பந்தர் அப்பாஸ் 70669 ச.கிமீ 1,410,667 11 கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இம்மாகாணம் பனாதார் வா ஜாசயேர்-எ பாஹ்ர்-எ ஒமான் என்று வழங்கப்பட்டது. IranHormozgan.png
இலாம் இலாம் 20133 ச.கிமீ 545,093 7 முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது IranIlam.png
இஸ்ஃபஹான் இஸ்ஃபஹான் 107029 ச.கிமீ 4,590,595 21 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் ஆகிய மாகாணங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டன. IranEsfahan.png
கெர்மான் கெர்மான் 180836 ச.கிமீ 2,660,927 14 IranKerman.png
கெர்மான்ஷா கெர்மான்ஷா 24998 ச.கிமீ 1,938,060 13 1950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது. IranKermanshah.png
கொரசான், வடக்கு பொஜ்னூருது 28434 ச.கிமீ 820,918 6 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும். IranNorthKhorasan.png
கொரசான், இரசாவி மஷாது 144681 ச.கிமீ 5,620,770 19 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும். IranRazaviKhorasan.png
கொரசான், தெற்கு பிர்ஜாந்து 69555 ச.கிமீ 640,218 4 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும். IranSouthKhorasan.png
குஜெஸ்தான் அஹ்வாஸ் 64055 ச.கிமீ 4,345,607 18 IranKhuzestan.png
கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத் யசூஜ் 15504 ச.கிமீ 695,099 5 குஜெஸ்தான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1990 வரை, இம்மாகாணம் பொவிர் அஹ்மாதி மற்றும் கொக்கிளுயே என்று அழைக்கப்பட்டது IranKohkiluyehBuyerAhmad.png
குர்திஸ்தான் சனந்தாஜ் 29137 ச.கிமீ 1,574,118 9 முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. IranKurdistan.png
லொரஸ்தான் கொர்ரமாபாத் 28294 ச.கிமீ 1,758,628 9 முதலில் குஜெஸ்தான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. IranLorestan.png
மர்கசி அரக் 29130 ச.கிமீ 1,361,394 10 மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.[4] 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான் , செம்னன், மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன. IranMarkazi.png
மாசாந்தரான் சாரி 23701 ச.கிமீ 2,940,831 15 IranMazandaran.png
கஸ்வின் கஸ்வின் 15549 ச.கிமீ 1,166,861 5 1996-ம் ஆண்டின் கடைசி நாளன்று, சஞ்சன் மாகாணத்தின் கசவின் மற்றும் தகேஸ்தான ஷாறேஸ்தான்கள் பிரிக்கப்பட்டு கஸ்வின் மாகாணம் உருவாக்கப்பட்டது IranQazvin.png
கொம் கொம் 11526 ச.கிமீ 1,064,456 1 1995 வரை, கொம் தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு ஷாரேஸ்தானாக விளங்கியது IranQom.png
செம்னன் செம்னன் 97491 ச.கிமீ 590,512 4 மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.[4] 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன IranSemnan.png
சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் ஜகேதான் 181785 ச.கிமீ 2,410,076 8 1986 வரை, இந்த மாகாணத்தின் பெயர் பலூச்சிஸ்தான் மற்றும் சிஸ்தான் என்று இருந்தது. IranSistanBaluchistan.png
தெஹ்ரான் தெஹ்ரான் 18814 ச.கிமீ 13,530,742 13 1986 வரை, தெஹ்ரான், மர்கசி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. IranTehran.png
யசுது யாசுது 129285 ச.கிமீ 992,318 10 முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[5] 1986-இல், கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதி யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 2002-இல், தபசு ஷாரேஸ்தான் (பரப்பளவு: 55,344 km²) கொரசான் மாகாணத்திலிருந்து யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது IranYazd.png
சஞ்சன் சஞ்சன் 21773 ச.கிமீ 970,946 7 முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன IranZanjan.png
ஈரான் (மொத்தம்) தெஹ்ரான் 1628554 ச.கிமீ 71,767,413 324

வெளி இணைப்புகள்[தொகு]

மூலம்[தொகு]

  1. Statistical Centre, Government of Iran. ""General Characteristics of Ostans according to their administrative divisions at the end of 1383 (2005 CE)"". 2006-04-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. Statistical Centre, Government of Iran. ""Population estimation by urban and rural areas, 2005"". 2006-04-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ICS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; former என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CMB என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானின்_மாகாணங்கள்&oldid=3290060" இருந்து மீள்விக்கப்பட்டது