உலுரித்தான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லொரஸ்தான் மாகாணம் (பாரசீக மொழி:استان لرستان , Luristan, Lurestan, அல்லது Loristan ),[1] என்பது மேற்கு ஈரானின் சக்ரோசு மலைகளில் உள்ள ஒரு மாகாணமாகும். லொரஸ்தான் மக்கள் தொகை 2006 இல் 1,716,527 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014 இல் இது மண்டலம் 4 இல் இருந்தது.[2]

லொரஸ்தான் மாகாணம் 28,392 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தின் முக்கிய நகரங்களாக கோர்ராமாபாத், போருஜெர்ட், டோருட், அலிகுடார்ஸ், குஹ்தாஷ், அஸ்னா, அலேஷ்தார், நூராபாத் மற்றும் பொல்-இ டோக்தார் ஆகியன ஆகும்.

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

கஹர் ஏரி, டோருட்
Sepiddasht
டாரே-யே அனாரன், கோர்ராமாபாத் கவுண்டி
ஓஷ்டோரங்குஹின் ஒரு தோற்றம்
லொரஸ்தானில் ஃப்ரிட்டிலரியா

லொரஸ்தான் என்ற பெயரின் பொருள் "லர்ஸ் என்ற மக்கள் வாழும் நிலம்" என்பது ஆகும். இது மேற்கு ஈரானின் இலாம் மாகாணப் பகுதியுடன் ஒத்துப்போகிறது. இந்த மாகாணம் கெர்மான்ஷா மாகாணத்திலிருந்து பர்ஸ் மாகாணம் வரை வடமேற்கிலிருந்து தென்கிழக்காக சுமார் 650 கி.மீ வரை நீண்டும், 150-180 கி.மீ. அகன்றும் உள்ளது.   இந்த மாகாணத்தின் நிலப்பரப்பானது முதன்மையாக மலைப்பகுதியாக உள்ளது. இநத மாகாணத்தில் சக்ரோசு மலைத்தொடர்களைச் சேர்ந்த ஏராளமான மலைத்தொடர்கள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கு வரை நீண்டுள்ளன. இதன் மத்திய மலைத்தொடரில் பல முகடுகள் உள்ளன, அவை கிட்டத்தட்ட எப்போதும் பனிமூடியவையாக உள்ளன. இவை ஏறத்தாழ 4000 மீட்டருக்கு மேற்பட்ட உயரம் கொண்டவையாக உள்ளன. இந்த மலைப்பகுதிகளானது ஈரானின் மிக முக்கியமான நதிகளான ஜயண்டெருட், ஜராஹி, கருண், டிஸ், அபி, கார்கே போன்றவற்றின் நீராதாரமாக உள்ளது. இந்த உயர்ந்த மலைத்தொடர்களுக்கு இடையில் பல வளமான சமவெளிகள் மற்றும் குறைந்த மலைப்பாங்கான, நல்ல நீர்வளமிக்க மாவட்டங்கள் உள்ளன.

மாகாணத்தின் மிக உயரமான இடம் 4,050 மீட்டராக உள்ள ஓஷ்டோரங்கு சிகரமாகும். மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். இதன் வெளிப்புற சரிவுகளில் ஓக், எல்ம், மேப்பிள், அக்ரூட் பருப்பு மரங்கள், பாதாம் மரங்கள் போன்றவை கொண்ட காடுகளைக் கொண்டுள்ளது.[3]

மேற்கு லொரஸ்தான் மாகாணமானது ஜாக்ரோஸ் மலைகளுக்கு உட்பட்ட தொடர்ச்சியாக வளமான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளது. புஷ்ட்-இ குஹ் பகுதியானது கபீர் கு மலைத்தொடரின் மேற்கு அடிவாரத்தில் உள்ளது. பிஷ்-இ குஹ் பகுதி கபீர் குவின் கிழக்கே அமைந்துள்ளது. கிமு 3 மில்லினியின் இடைக்காலத்தில் வெண்கலக் காலத்தின் போது இந்த பகுதியில் மனித குடியேற்றங்கள் இருந்தன.

காலநிலை அடிப்படையில், மாகாணத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: மலைப்பிரதேசங்களான போரூஜெர்ட், டோரூட், அஸ்னா, நுருராபாத் மற்றும் அலிஷ்டார் போன்றவை குளிர்ந்த குளிர்காலநிலை மற்றும் மிதமான கோடைகாலத்தைக் கொண்டதாக இருக்கும். மத்திய பிராந்தியத்தில், வசந்த காலமானது நடு பெப்ரவரியில் தொடங்கி மே நடுப்பகுதி வரை நீடிக்கும். கோர்ரமாபாத்தின் நகரியம் இந்த நிலவியல் பகுதியில் உள்ளது. தெற்குப் பகுதிகளான பொல்-இ-டோக்தார் மற்றும் பாப்பி ஆகியவை குஜெஸ்தானின் சூடான காற்றோட்டப் பகுதியியல் உள்ளன. இதனால் இப்பகுதியானது வெப்பமிக்க கோடை மற்றும் ஒப்பீட்டளவில் மிதமான குளிர் பருவம் உள்ளது.[4]

காலநிலையானது பொதுவாக மிதஈர காலநிலை மற்றும் குளிர்கால மழையுடன், நிறைய பனித்தூவி ( கோப்பன் சிசா ) விழும். இது சக்ரோஸ் மலைகளின் மேற்கு திசையில் அமைந்திருப்பதால், லெரெஸ்தானில் ஆண்டு மழைப்பொழிவு ஈரானில் அல்போர்ஸ் மலைகளுக்கு தெற்கே எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. கோர்ராமாபாத்தில், ஆண்டு சராசரி மழையளவு மொத்தம் 530 மில்லிமீட்டர் (21)   அங்குலம் மழைக்கு இணையானதாகும், அதே சமயத்தில் 1270 மில்லிமீட்டர் (50) வரை   அங்குலம்) மிக உயர்ந்த மலைப்பகுதிகளில் விழக்கூடும். ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் பொதுவாக முற்றிலும் வறண்டவை. ஆனால் கோர்ராமாபாத்தில்  திசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நான்கு அங்குல மழையை எதிர்ப்பார்கலாம்.

வெப்பநிலையானது பருவங்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில் இடையே பரவலாக வேறுபடுகிறது. கோர்ராமாபாத்தில், கோடை வெப்பநிலை பொதுவாக குறைந்தபட்சம் 12 °C (54  °F) முதலிலிருந்து, அதிகபட்சமாக 32 °C (90   டிகிரி பாரன்ஹீட்) ஆக இருக்கும். குளிர்காலத்தில், அவை குறைந்தபட்சம் -2 °C (28   °F) முதலிலிருந்து இருக்கும் அதிகபட்சம் 8 °C (46   டிகிரி பாரன்ஹீட்) வரை இருக்கும்.

நிர்வாக பிரிவுகள்[தொகு]

லொரஸ்தான் மாகாணத்தில் பதினொரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன அவை : அலிகுடார்ஸ் கவுண்டி, அஸ்னா கவுண்டி, போருஜெர்ட் கவுண்டி, டெல்ஃபான் கவுண்டி, டோரூட் கவுண்டி, டோவ்ரே கவுண்டி, கோர்ராமாபாத் கவுண்டி, குஹ்தாஷ் கவுண்டி, செல்செலே கவுண்டி, போல்டோக்தார் கவுண்டி மற்றும் 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூமேஷ்கன் கவுண்டி ஆகியவை ஆகும்.[5][6]

இடதுபுறத்தில் உள்ள வரைபடத்தை உருவாக்கியதிலிருந்து, குஹ்தாஷ் கவுண்டியானது ரூமேஷ்கன் கவுண்டி மற்றும் சிறிய குஹ்தாஷ் கவுண்டி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Luristan (Lorestan) Province". Iran Visitor. 23 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. . Archived from the original on 23 June 2014. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  3. "Archived copy". 2014-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-10 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link) Lorestan region
  4. [1] Lorestan Land of Culture and Civilization
  5. "Rumeshkhan: Governance" (பெர்ஷியன்). Lorestan province. 26 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  6. "وزارت کشور شماره ۱۰۶۲۲۸/ت۴۹۲۴۳هـ" [No. 106228/49243 of the Ministry of Interior] (பெர்ஷியன்). Laws and Regulations Portal of the Islamic Republic of Iran. 26 May 2013. 28 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 நவம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுரித்தான்_மாகாணம்&oldid=3333918" இருந்து மீள்விக்கப்பட்டது