உள்ளடக்கத்துக்குச் செல்

சாமனித்து பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமனித்து பேரரசு
سامانیان
819–999
கலீபா இஸ்மாயில் இபின் அகமது ஆட்சியில் உச்சத்தில் இருந்த சமானித்துப் பேரரசின் வரைபடம் வரைபடம்
கலீபா இஸ்மாயில் இபின் அகமது ஆட்சியில் உச்சத்தில் இருந்த சமானித்துப் பேரரசின் வரைபடம் வரைபடம்
நிலைபேரரசு
தலைநகரம்சமர்கந்து,
(819–892)
புகாரா
(892–999)
பேசப்படும் மொழிகள்பாரசீகம்(official/religious decree/mother tongue),[1][2][3][4]
அரபு (சமயச் சடங்களில் மட்டும்)[5]
சமயம்
சன்னி இசுலாம்(மற்றும் சியா இசுலாம், நெஸ்டோரியக் கிறித்துவம், சொராஷ்டிரம், பௌத்தம்)
அரசாங்கம்அமீரகம்
அமீர் 
• 819–864/5
அகமத் இபின் ஆசாத்
• 999
அப்த் அல் மாலிக்
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• தொடக்கம்
819
• முடிவு
999
பரப்பு
928 est.[6]2,850,000 km2 (1,100,000 sq mi)
முந்தையது
பின்னையது
சபாரித்து வம்சம்
அப்பாசியக் கலீபகம்
வடக்கு ஈரானின் அலித்து வம்சம்
பனிஜுரித்துகள்
புக்கர் குட்டாஸ்
உசுருசனா
பர்கானா
கசானவித்து வம்சம்
காரகானித்துகள்
பானு இலியாஸ்
பரிக்குனித்துகள்
முக்தாஜித்துகள்
பைத்து வம்சம்
தற்போதைய பகுதிகள்

சாமனித்து பேரரசு (Samanid Empire) (பாரசீக மொழி: سامانیان‎, பாரசீக சன்னி இசுலாமிய [7] அமீர்கள் கிபி 819 முதல் 999 முடிய ஆண்ட நிலப்பரப்பாகும்.

சாமனித்து பேரரசு, தற்கால ஈரான், ஆப்கானித்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைக் கொண்டிருந்தது.[8]

சாமனித்துப் பேரரசை நூ இபின் ஆசாத், அகமது இபின் ஆசாத், யாகியா இபின் ஆசாத் மற்றும் இலியாஸ் இபின் ஆசாத் எனும் நான்கு உடன்பிறப்புகள் சேர்ந்து தோற்றுவித்து, ஹெராத், குராசான் மற்றும் திரான்சாக்சியானா நிலப்பகுதிகளை, தன்னாட்சியுடன், அப்பாசியக் கலீபகத்தின் கீழ் ஆண்டனர். இப்பேரரசின் தலைநகரங்களாக சமர்கந்து மற்றும் புகாரா நகரங்கள் விளங்கியது.

வரலாறு

[தொகு]

தோற்றம்

[தொகு]

சமானித்து வம்சத்தின் பெயரிக்குரிய முன்னோர் பாரசீகத்தின் தேக்கான் குடும்பத்தினைச் சேர்ந்த சமான் குடா எனும் நிலக்கிழார் ஆவார்.

பாரசீகத்தின் குராசான் மாநிலத்தை ஆண்ட ஆளுநர் அசாத் இபின் அப்துல்லா அல் குவாசிரியின் காலத்தில் சமான் குடா, சோராட்டிய சமயத்திலிருந்து இசுலாமிற்கு மதம் மாறி, தன் மூத்த மகனுக்கு, ஆளுநரின் பெயரால் ஆசாத் இபின் சமான் எனப்பெயரிட்டார்.[9]

கிபி 819ல் குராசான் அளுநர் கஜான் இபின் அப்பாத், தனக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களை போராடி வீழ்த்திய சமான் குடாவின் நான்கு மகன்களில் ரபி இபின் லைத் மற்றும் நூ இபின் ஆசாத் ஆகியவர்களுக்கு சமர்கந்து பிரதேசத்தையும்; அகமது இபின் ஆசாத்திற்கு பெர்கானா பிரதேசத்தையும்: யாகியா இபின் ஆசாத்திற்கு தாஷ்கந்து பிரதேசத்தையும்; இலியாஸ் இபின் ஆசாத்திற்கு ஹெராத் பிரதேத்தையும் நிர்வகிக்க அனுமதி வழங்கினார்.[10] இந்நிகழ்வே சமானித்து வம்ச வளர்ச்சிக்கு தொடக்கமாக அமைந்தது.

எழுச்சி

[தொகு]

ஹெராத்தில் சமானித்து வம்சம் (819–857)

[தொகு]

ஹெராத்தின் ஆளுநர் முகமது இபின் தகீர், கிபி 856ல் இலியாஸ் இபின் ஆசாத்தின் இறப்பிற்குப் பின், அவரது மகன் இப்ராகிம் இபின் இலியாசை படைத்தலைவராக நியமனம் செய்தார். படைத்தலைவர் இப்ராகிம் இலியாஸ், சபாரித்து ஆட்சியாளர் யாகூப் இபின் அல் சபார் படைகளுடன் சி ஸ்தான் நகரத்தில் மோதினார். 857ல் நடைபெற்ற போரில் இப்ராகிம் இலியாஸ், சபாரித்து ஆட்சியாளரை கைது செய்து, சீஸ்தன் நகரத்தில் வீட்டுக்காவலில் வைத்தார்.[10]

திரான்சாக்சியானாவில் சமானித்துகள் (819–892)

[தொகு]
சாமனித்து பேரரசின் குராசான் மற்றும் திரான்சாக்சியானா பகுதிகளின் வரைபடம்

கிபி 839/40ல், சமானித்து வம்சத்தின் நூ இபின் ஆசாத், ஸ்டெப்பி புல்வெளிகளின் துருக்கிய நாடோடி கூட்டத்தினரிடமிருந்து நடு ஆசியாவின் இபிஜாப் பகுதியை கைப்பற்றினார்.

எதிரிகளிடமிருந்து அந்நகரத்தைக் காக்க சுற்றிலும் அரண் அமைத்தார். 841/12ல் நூ இபின் ஆசாத் இறக்கவும், அவரது இரண்டு உடன்பிறப்புகளான யாகியா மற்றும் அகமது ஆகியோர் அந்நகரத்தின் கூட்டாச்சியாளர்களாக குராசான் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.[10]

855ல் யாகியா இறக்க, அகமது ஷாஸ் மற்றும் திரான்சாக்சியானாவின் ஆட்சியாளரானார். அகமது 864/5ல் இறக்க, அவரது மகன் முதலாம் நசீர் பர்கானா மற்றும் சமர்கந்து பகுதிகளுக்கும்; மற்ற மகனான யாகூப் இபின் அகமது ஷாஸ் பகுதிக்கும் ஆட்சியாளர் ஆனார். [11]

சபாரித்து வம்ச ஆட்சியாளர்களால், தகிரித்து வம்ச ஆட்சியாளர்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்தில், சமானித்து வம்சத்தினர் எழுச்சி கொண்டு, தன் பகுதிகளை தன்னாட்சியுடன் ஆண்டனர். முதலாம் நசீர் தனது தம்பி இஸ்மாயில் இபின் அகமது மூலம் புகாராவை கைப்பற்றினார்.[11]

வரி வருவாயை பிரித்துக் கொள்வது தொடர்பாக உடன்பிறப்புகளுக்கிடையே பிணக்குகள் கிளைத்தன. உடன்பிறப்புகளில் இஸ்மாயில் இபின் அகமதுவின் கை ஓங்கியதால், சமானித்து அரசை நிறுவினார். திரான்சாக்சியானா பகுதியை கைப்பற்றிய இஸ்மாயிலின் தம்பி நசீருக்கு அப்பாசியக் கலீபகம் ஆதரவு அளித்தது. கிபி 892ல் நசீர் இறக்க, திரான்சாக்சியானா பகுதி இஸ்மாயிலின் கட்டுக்கள் வந்தது. [11]

இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சியின் உச்சம் (892–907)===

[தொகு]
இஸ்மாயில் இபின் அகமதுவின் கல்லறை, புகாரா

சில மாதங்களுக்குப் பின் இஸ்மாயில் இபின் அகமதுவின் தம்பியான யாகூப் அல் சபாரும் இறக்க, மற்றொரு தம்பி அமீர் இபின் லையத், கிபி 900ல் பால்க் நகரத்தில் இஸ்மாயில் படைகளுடன் மோதினார். போரின் முடிவில் அமீர் இபின் லையத் கைது செய்யப்பட்டு, பின்னர் பாக்தாத்திற்கு அனுப்பப்பட்டு, கொல்லப்பட்டார்.[12] இறுதியில் இஸ்மாயில் இபின் அகமது, கொராசான் மற்றும் திரான்சாக்சியானா பகுதிகளின் அமீராக அப்பாசிய கலீபகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.[12]

பின்னர் ஹெராத், குராசான் சீஸ்தன் மற்றும் பலுசிஸ்தான், பால்க், புகாரா, பெர்கானா, ஷாஷ், சமர்கந்து போன்ற நடு ஆசியாவின் பெரும்பகுதிகளை சமானித்துப் பேரரசில் கொண்டுவந்தார்.

இனக்குழுக்கள்

[தொகு]

சாமனித்துப் பேரரசில் பெரும்பான்மையாக பாரசீகர்கள் இருப்பினும், குரோசானியர்கள், பாக்திரியர்கள், சோக்தியானர்கள் மற்றும் சகர்களும் வாழ்ந்தனர்.

மொழிகள்

[தொகு]

பாரசீக மொழியே பேரரசின் ஆட்சி மொழியாக விளங்கியது. [13]பேரரசின்சில பகுதிகளில் பாக்திரியா மொழி, சோக்தியானா மொழி, யக்னோபி மொழி பயிலப்பட்டது.

பேரரசின் வீழ்ச்சி மற்றும் அழிவு (961–999)

[தொகு]

பத்தாம் நூற்றாண்டின் பின் பகுதியில் சாமனித்து பேரரசு வீழ்ச்சியடையத் துவங்கியது. கிபி 962ல் கொராசான் பகுதியின் படைத்தலைவர், தற்கால ஆப்கானித்தானின் காசுனி நகரத்தைக் கைப்பற்றி தன்னாட்சியுடன் ஆண்டார். [14] கஜினி முகமதுவின் தந்தையான செபுக்தேசின் காசுனி நகரத்தை தலைநகராகக் கொண்டு கஜினிப் பேரரசை நிறுவினார்.

கிபி 992ல் கார-கானித்து வம்சத்தின் பழங்குடியின தலைவர், சாமனித்துப் பேரரசின் தலைநகரான புகாராவை கைப்பற்றினார்.[15]

சாமனித்து ஆட்சியாளர்கள்

[தொகு]
புகாரா சமர்கந்து பெர்கானா ஷாஷ் ஹெராத்
சமன் குடா
ஆசாத் இபின் சமன்
நூ இபின் ஆசாத்
819–841/2
அகமது இபின் ஆசாத்
819–864/5
யாகியா இபின் ஆசாத்
819–855
இலியாஸ் இபின் ஆசாத்
819–856
அகமது இபின் ஆசாத்
819–864/5
இப்ராகிம் இபின் இலியாஸ்
856–867
இஸ்மாயில் இபின் அகமது
892–907
முதலாம் நசீர்
864–892
யாகூப் இபின் அகமது
தஹிரித்
இஸ்மாயில் இபின் அகமது
892–907
அகமது சாமானி இபின் இஸ்மாயில்
907–914
இரண்டாம் நசீர்
914–943
முதலாம் நூ
943–954
இப்ராகிம் இபின் அகமது
947
அப்த் அல் மாலிக் (அமீர்)
954–961
முதலாம் மன்சூர்
961–976
இரண்டாம் நூ
976–997
அப்துல் அல் அஜீஸ்
992
இரண்டாம் மன்சூர்
997–999
இரண்டாம் அப்துல் அல் மாலிக்
999
இஸ்மாயில் முண்டாசிர்
1000 – 1005

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Persian Prose Literature." World Eras. 2002. HighBeam Research. (September 3, 2012);"Princes, although they were often tutored in Arabic and religious subjects, frequently did not feel as comfortable with the Arabic language and preferred literature in Persian, which was either their mother tongue—as in the case of dynasties such as the Saffarids (861–1003), Samanids (873–1005), and Buyids (945–1055)...". [1] பரணிடப்பட்டது 2013-05-02 at the வந்தவழி இயந்திரம்
  2. Elton L. Daniel, History of Iran, (Greenwood Press, 2001), 74.
  3. Frye 1975, ப. 146.
  4. Paul Bergne (15 June 2007). The Birth of Tajikistan: National Identity and the Origins of the Republic. I.B.Tauris. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84511-283-7.
  5. Frye 1975, ப. 145.
  6. Taagepera, Rein (1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 475–504. doi:10.1111/0020-8833.00053. https://www.jstor.org/stable/2600793. 
  7. Frye 1975, ப. 151.
  8. Taagepera, Rein (1997-01-01). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 475–504. doi:10.1111/0020-8833.00053. https://www.jstor.org/stable/2600793. 
  9. Gibb 1986, ப. 685.
  10. 10.0 10.1 10.2 Frye 1975, ப. 136.
  11. 11.0 11.1 11.2 Frye 1975, ப. 137.
  12. 12.0 12.1 Frye 1975, ப. 138.
  13. Kirill Nourzhanov; Christian Bleuer (8 October 2013). Tajikistan: A Political and Social History. ANU E Press. pp. 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-925021-16-5.
  14. Sinor, Denis, ed. (1990), The Cambridge History of Early Inner Asia, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521243049
  15. Davidovich, E. A. (1998), "Chapter 6 The Karakhanids", in Asimov, M.S.; Bosworth, C.E. (eds.), History of Civilisations of Central Asia, vol. 4 part I, UNESCO Publishing, pp. 119–144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-3-103467-7

ஆதாரங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samanid Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமனித்து_பேரரசு&oldid=3243610" இலிருந்து மீள்விக்கப்பட்டது