பெர்கானா

ஆள்கூறுகள்: 40°23′11″N 71°47′11″E / 40.38639°N 71.78639°E / 40.38639; 71.78639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்கானா
Fargʻona / Фарғона
பெர்கானா is located in உஸ்பெக்கிஸ்தான்
பெர்கானா
பெர்கானா
உஸ்பெகிஸ்தானில் பெர்கானா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 40°23′11″N 71°47′11″E / 40.38639°N 71.78639°E / 40.38639; 71.78639
நாடு உஸ்பெகிஸ்தான்
பிரதேசம்பெர்கானா
அரசு
 • வகைநகரம்
மக்கள்தொகை
 • மொத்தம்227,000[1]
இணையதளம்ferghana.uz

பெர்கானா (Fergana) (உசுபேகியம்: Fargʻona/Фарғона, فەرغانە; தாஜிக்: Фарғона, Farğona/Farƣona; பாரசீக மொழி: فرغانهFarġāna/Farqâna; உருசியம்: Фергана́), உஸ்பெகிஸ்தான் நாட்டின் பெர்கானா பிரதேசத்தின் தலைமையிட நகரம் ஆகும். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரம் தாஷ்கண்டிற்கு கிழக்கே 420 கிமீ தொலைவிலும்; கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. பண்டைய காலத்தில் புகழுடன் விளங்கிய இந்நகரத்தை 1876ல் நவீனப்படுத்தப்பட்டது.

புவியியல்[தொகு]

நடு ஆசியாவின் கிழக்கு உசுபெக்கித்தான் நாட்டில், பெர்கானாப் பள்ளத்தாக்கில் பெர்கானா நகரம் அமைந்துள்ளது.

பெர்கானவின் தெரு, 1913

பண்டைய & மத்திய கால வரலாறு[தொகு]

நடு ஆசியாவின் வடக்கு பெர்கானா சமவெளியில் அமைந்த பெர்கான நகரம், வடமேற்கு சீனாவின் சாங்சி மாகாணத் தலைநகரம் சிய்யான் மற்றும் கஷ்கர் நகரங்களுடன் பட்டுப் பாதையில் இணைகிறது. [2]

குசான் பேரரசில் முக்கிய நகரமாக பெர்கானா விளங்கியது. கிமு 329ல் அலெக்சாந்தர் காலத்திலும்; ஹெலனியக் காலத்தில், செலூக்கியப் பேரரசு மற்றும் கிரேக்க பாக்திரியா பேரரசு காலத்திலும், பெர்கானா நகரம் கிரேக்க யவனர்களின் குடியிருப்புகளில் ஒன்றாக விளங்கியது.

பாரசீகத்தின் சன்னி இசுலாமிய சாமனித்துப் பேரரசில் (819–999) பெர்கானா நகரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது.

முகலாயர் வம்சத்தின் பிறப்பிடமாக பெர்கானா நகரம் இருந்தது. பாபரின் தந்தை ஒமர் சேக் மிர்சா பெர்கானா நகரத்தின் படைத்தலவராக இருந்தவர். 1498ல் மிர்சாவின் இறப்பிற்குப் பின், இளம் வயதில் பாபர் பெர்கானவின் படைத்தலைவரானார்.

நவீன வரலாறு[தொகு]

1873ல் உருசியப் பேரரசின் விரிவாக்கத்தின் போது பெர்கானா பிரதேசம் ருசியாவில் இணைந்தது. நவீன பெர்கானா பாசறை நகரமாக 1876ல் ருசியர்களால் நிறுவப்பட்டது. 1907ல் ருசிய இராணுவ ஆளுநர் மிகேல் ஸ்கோபெலெவ் என்பவர் பெர்கானா நகராத்திற்கு நியு மார்கெலன் எனப்பெயரிட்டார்.

1924ல் போல்செவிக் புரட்சியாளர்கள் நியு மார்கெலன் நகரத்தைக் கைப்பற்றி, அதற்கு மீண்டும் பெர்கானா எனப்பெயரிட்டனர். [3]

இருபதாம் நூற்றாண்டில் பெர்கானா நகரம் நெசவு மற்றும் வேதியல் உரத் தொழிற்சாலைகளின் மையமாக மாறியது. சோவியத் ஒன்றிய ஆட்சியின் போது, இரண்டாம் உலகப் போரின் விளைவாக, இந்நகரத்தில் தொழிற்சாலைகள் வளரத் துவங்கியது. [1]

பெர்கானா வானூர்தி நிலையம்

1908ல் பெர்கானா சமவெளியின் முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெர்கானா நகரத்தில் நிறுவப்பட்டது.

மேற்கு உஸ்பெகிஸ்தானிலிருந்து இயற்கை எரிவாயுவை குழாய்கள் மூலம் பெர்கானாவிற்கு கொண்டு வந்து, உரத்தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தினர்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

சனவரி, 2007ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, பெர்கான நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,27,000 ஆகும். பெர்கானா நகரத்தின் முக்கிய இனக் குழுக்கள் தாஜிக் மற்றும் உஸ்பெக் மக்கள் ஆவார். ருசிய மொழி பேசும் 25% சத மக்களும் உள்ளனர். [1]

கல்வி நிலையங்கள்[தொகு]

1. பெர்கானா மருத்துவக் கல்லூரி 2. பெர்கானா பல்நோக்கு தொழில்நுட்பக் கல்லூரி 3. கிர்குலி தொழில் பயிற்சிக் கல்லூரி 4. கிர்குலி பல்நோக்கு தொழில்நுட்பக் கல்லூரி 5. பெர்கானா பல்கலைக்கழகம், பெர்கானா 6. பெர்கானா தவுலத் பல்கலைக்கழகம், பெர்கானா மற்றும் 7. குவாகுவான் தவுலத் பெடகோக்கிய நிறுவனம், கோக்கந்து

தட்பவெப்பம்[தொகு]

பெர்கானா குளிர் மண்டல பாலைவனப் பகுதியாகும். குறைந்த பனிக்காலம் கொண்டது. குளிர்கால சராசரி குறைந்தபட்ச வெப்பம் -2.8° ஆகவும்; அதிகபட்ச வெப்பம் 4.6°C ஆகவும் உள்ளது. கோடைக்காலத்தின் போது சனவரி மாத குறைந்தபட்ச வெப்பம் 20.3°C ஆகவும், சூலை மாத அதிகபட்ச வெப்பம் 34.7°C ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 200 மில்லி மீட்டருக்கும் குறைவாக உள்ளது. பனிக்காலத்திலும், பருவ மழைக்காலத்திலும் அதிக மழைப்பொழிவு கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பெர்கானா (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16.3
(61.3)
23.1
(73.6)
29.0
(84.2)
34.4
(93.9)
39.0
(102.2)
41.0
(105.8)
42.2
(108)
41.4
(106.5)
37.1
(98.8)
32.6
(90.7)
29.0
(84.2)
18.0
(64.4)
42.2
(108)
உயர் சராசரி °C (°F) 4.6
(40.3)
7.6
(45.7)
14.7
(58.5)
22.3
(72.1)
27.6
(81.7)
33.1
(91.6)
34.7
(94.5)
33.6
(92.5)
28.8
(83.8)
21.2
(70.2)
13.4
(56.1)
6.2
(43.2)
20.7
(69.3)
தினசரி சராசரி °C (°F) 0.2
(32.4)
2.9
(37.2)
9.3
(48.7)
16.0
(60.8)
20.9
(69.6)
25.7
(78.3)
27.4
(81.3)
25.8
(78.4)
20.7
(69.3)
13.7
(56.7)
7.5
(45.5)
1.8
(35.2)
14.3
(57.7)
தாழ் சராசரி °C (°F) -2.8
(27)
-0.6
(30.9)
4.9
(40.8)
10.5
(50.9)
14.6
(58.3)
18.5
(65.3)
20.3
(68.5)
18.6
(65.5)
13.7
(56.7)
8.0
(46.4)
3.2
(37.8)
-1.3
(29.7)
9.0
(48.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) -25.8
(-14.4)
-25.5
(-13.9)
-17.9
(-0.2)
-4.8
(23.4)
1.2
(34.2)
7.4
(45.3)
10.1
(50.2)
7.8
(46)
0.5
(32.9)
-7.4
(18.7)
-22.8
(-9)
-27.0
(-16.6)
−27.0
(−16.6)
பொழிவு mm (inches) 18
(0.71)
21
(0.83)
25
(0.98)
23
(0.91)
22
(0.87)
11
(0.43)
5
(0.2)
3
(0.12)
6
(0.24)
17
(0.67)
18
(0.71)
24
(0.94)
193
(7.6)
ஈரப்பதம் 81 76 67 61 56 48 48 52 56 66 74 82 64
சராசரி மழை நாட்கள் 4 7 10 10 13 10 8 5 4 6 7 6 90
சராசரி பனிபொழி நாட்கள் 7 5 1 0.1 0 0 0 0 0 0.3 1 5 19
சூரியஒளி நேரம் 106 109 153 205 276 337 362 345 292 218 150 95 2,648
Source #1: Pogoda.ru.net[4]
Source #2: NOAA (sun only, 1961–1990)[5]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Hill, John E. (2009) Through the Jade Gate to Rome: A Study of the Silk Routes during the Later Han Dynasty, 1st to 2nd Centuries CE. John E. Hill. BookSurge, Charleston, South Carolina. ISBN 978-1-4392-2134-1.
  • Watson, Burton. Trans. 1993. Records of the Grand Historian of China: Han Dynasty II. Translated from the Shiji of Sima Qian. Chapter 123: "The Account of Dayuan," Columbia University Press. Revised Edition. ISBN 0-231-08166-9; ISBN 0-231-08167-7 (pbk.)
  • Jean-Marie Thiébaud, Personnages marquants d'Asie centrale, du Turkestan et de l'Ouzbékistan, Paris, L'Harmattan, 2004. ISBN 2-7475-7017-7.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Flynn, Moya; Kosmarskaya, Natalya; Sabirova, Guzel (November 2014). "The Place of Memory in Understanding Urban Change in Central Asia: The Cities of Bishkek and Ferghana". Europe-Asia Studies 66 (9). 
  2. C. Michael Hogan, Silk Road, North China, The Megalithic Portal, ed. Andy Burnham, 2007
  3. Dates of renaming taken from Adrian Room, Placenames of the World: Origins and Meanings of the Names for Over 5000 Natural Features, Countries, Capitals, Territories, Cities and Historical Sites, McFarland, 1997, ISBN 0-7864-1814-1 (pbk) p.124
  4. "Weather and Climate - The Climate of Fergana" (in Russian). Weather and Climate (Погода и климат). Archived from the original on 6 December 2016. பார்க்கப்பட்ட நாள் 6 December 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Climate Normals for Fergana". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்கானா&oldid=2525516" இலிருந்து மீள்விக்கப்பட்டது