சந்தலபள்ளி
சந்தலபள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635203 |
சந்தலபள்ளி (Chendrapalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.
பெயராய்வு
[தொகு]சந்தலு என்ற தெலுங்குச் சொல்லுக்குக் கம்பு என்பது பொருளாகும். இப்பகுதியில் கம்பு மிகுதியாக விளைந்த காரணத்தினால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தில் 1,507 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,467 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,201 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3,266 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 59.02% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்
[தொகு]- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 100.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Chendrapalli Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help)