உள்ளடக்கத்துக்குச் செல்

2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XVI ஆசிய விளையாட்டுக்கள்
XVI ஆசிய விளையாட்டுக்கள்
XVI ஆசிய விளையாட்டுக்கள்
சொலவம்: "கிளர்ச்சியூட்டும் விளையாட்டுக்கள், இசைவிணக்கமான ஆசியா"
நடத்திய நகரம்குவாங்சோ, சீனா
பங்கெடுத்த நாடுகள்45
நிகழ்வுகள்42 விளையாட்டுகளில் 476
துவக்க விழாநவம்பர் 12
நிறைவு விழாநவம்பர் 27
திறந்து வைத்தவர்சீனப் பிரதமர் வென் ஜியாபோ
வீரர்கள் உறுதிமொழிஃபூ ஃகைஃபெங்
நடுவர்கள் உறுதிமொழியான் நினன்
பந்தம் கொழுத்தியவர்ஃகெ சோங்
முதன்மை அரங்கம்ஹைசிங்சா தீவு
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சீனா
2006 (முந்தைய) (அடுத்த) 2014

2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பரவலாக XVI ஆசியட், நவம்பர் 12 முதல் நவம்பர் 27, 2010 வரை சீனாவில் குவாங்சோவில் நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு பெய்சிங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அடுத்து குவாங்சோ சீனாவின் இரண்டாவது நகரமாக நடத்துகிறது.இதுவரை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மிகப் பெரியதாக 42 விளையாட்டுகளில் 476 போட்டிகள் நடைபெறவுள்ளன. அம்மான், கோலாலம்பூர், சியோல் போன்ற பல நகரங்கள் மறுத்தமையால் சூலை 1,2004 அன்று குவாங்சோ மட்டுமே தனிநகரமாக நடத்த ஏலத்தை வென்றது.அண்மை நகரங்களான டோங்குவான்,ஃபோசன்,சன்வே ஆகியனவும் கூட்டாக விளையாட்டுக்களை நடத்தும்.

நிகழிடங்கள்

[தொகு]
குவாங்டோங் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

மொத்தம் 53 போட்டிக் களங்களும் 17 பயிற்சிக் களங்களும் அமைக்கப்பட்டுள்ளன.விளையாட்டுகள் சிற்றூர் உள்ளிட்ட நான்கு நிகழிடங்கள் குவாங்டோங் மாநிலத்திற்கு வெளியே உள்ளது.[1] இவற்றிற்கான கட்டுமான செலவு ¥15 பில்லியனாக நடத்தும் குழு அறிவித்துள்ளது. [2]

ஏப்ரல் 19, 2009, விழாக்குழுவினர் பவழ நதியில் அமைந்த ஹைக்சின்சா தீவில் திறப்புவிழா மற்றும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.[3]

துவக்கவிழா

[தொகு]

நவம்பர் 12, 2010 அன்று உள்ளூர்நேரம் 20:04க்கு விளையாட்டுக்களின் துவக்கவிழா நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டரங்கின் வெளியே பவழநதியில் அமைந்த ஹைக்சின்சா தீவில் நடைபெற்றது.ஒவ்வொரு அணியின் சார்பாக 45 படகுகள் பங்கேற்றன.[4] இவ்விழாவிற்கு சீனப்பிரதமர் வென் ஜியாபோ,[5] பாக்கித்தான் அதிபர் அசிஃப் அலி சர்தாரி,[6] தாய் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜிவா,[7] வருகை தந்து சிறப்பித்தனர்.

கவலைகளும் சர்ச்சைகளும்

[தொகு]

காற்று தரம்

[தொகு]

2008 பெய்சிங் போலவே குவாங்சோ நகரமும் காற்றின் தரத்தை உயர்த்துவதில் தீவிரமாக இருந்தது. இதற்கான இயக்கத்திற்காக ¥600 மில்லியன்கள் ஒதுக்கியும் 2009ஆம் ஆண்டு இறுதியில் 32 வேதி ஆலைகளை மூடியும் தனது கடமையை ஆற்றியது.[8] சூலை 13, 2010 வெளியான அறிக்கையின்படி காற்றின் தரம் 2009ஆம் ஆண்டு 2004ஆம் ஆண்டினதைவிட 12.01% உயர்ந்து 95.07% எட்டியது;[9] இருப்பினும் இதனை எட்ட ¥24 பில்லியன் செலவானது.[10] தற்போது விளையாட்டு நிர்வாகம் காற்றுமாசினைக் குறைக்க மகிழுந்து போக்குவரத்தை 40%வரை குறைத்துள்ளனர்[11] மற்றும் 11 நகரங்களில் தழல்சூட்டு கடைகளை தடைசெய்துள்ளனர்.[12]

மாண்டரின் அல்லது காந்தோநீசிய மொழி

[தொகு]

தொலைக்காட்சி செய்திகளில் குவாங்சோவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் காந்தோநீசிய மொழியில் இல்லாது மாண்டரின் மொழியை பயன்படுத்த நகரத்தின் சீனமக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு(CPPCC) எடுத்த முடிவிற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.[13] காந்தோநீசிய மொழிக்கு இருதரப்பில் பாதிப்பு ஏற்பட்டது.முதலாவதாக "உள்ளூர் குடிபெயர்தல்" - பிற பிராந்தியங்களிலிருந்து மக்கள் குவாங்டோங் மாநிலத்திற்கு இடம் பெயர்தல்.14 மில்லியன் மக்களில் புதிதாக குடிபெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் காந்தோநீசியம் பேசாதவர்கள்.இரண்டாவது அரசுக் கொள்கையான "சீரான சமுதாயம்";சீன மக்கள் குடியரசின் 1982ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 19ஆம் பிரிவு மாண்டரின் வகைப்பட்ட புதோங்குவாவை ஆட்சிமொழியாக அங்கீகரித்துள்ளது.சூன் 2010இல் நடந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 30,000 பேரில் 80% காந்தோநீசியத்திலிருந்து மாண்டரின் மாற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.[14]

துடுப்பாட்டம்

[தொகு]

இந்த விளையாட்டுகளில் முதன்முறையாக நடத்தப்படும் ஐந்து போட்டிகளில் துடுப்பாட்டமும் ஒன்று.இருப்பினும் துடுப்பாட்டத்தில் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ள இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் தனது முன்னதான "பன்னாட்டு வாக்குறுதி"களைக் கருத்தில்கொண்டு தேசிய துடுப்பாட்ட அணியை அனுப்ப மறுத்துள்ளது.[15] இதேவேளையில் இதன் முதன்மை போட்டியாளர்களான பாக்கித்தானும் இலங்கையும் தங்களது பங்கேற்பை உறுதி செய்துள்ளன.[16]

பதக்கப் பட்டியல்

[தொகு]

பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த முதல் பத்து நாடுகளின் விவரம்:

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சீனா* 199 119 98 416
2  தென் கொரியா 76 65 91 232
3  சப்பான் 48 74 94 216
4  ஈரான் 20 14 25 59
5  கசக்கஸ்தான் 18 23 38 79
6  இந்தியா 14 17 33 64
7  சீன தைப்பே 13 16 38 67
8  உஸ்பெகிஸ்தான் 11 22 23 56
9  தாய்லாந்து 11 9 32 52
10  மலேசியா 9 18 14 41
மொத்தம் 477 479 621 1577

குவாங்சோ ஆசியட்டில் இந்தியா

[தொகு]

இந்திய விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நீள்துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைமையில் நடந்தேறியது. இதுவரை நடந்துள்ள 16 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறப்பான பங்களிப்பு நிறைந்த போட்டிகளுள் இதுவும் ஒன்று. 14 தங்கங்களுடன் மொத்தம் 64 பதக்கங்களைப் பெற்றது இந்தியா.

பதக்கங்களின் விவரம்

[தொகு]

(2006-உடன் ஒப்பீடு:: ♦: முதன்முறை, ↔: அதே இடம், ↑: முன்னேற்றம், ↓: சரிவு)

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 2006 ஒப்பீடு
தடகளம் 5 2 4 11
குத்துச்சண்டை 2 3 4 9
டென்னிசு 2 1 2 5
கபடி 2 0 0 2
சுடுதல் 1 3 4 8
படகுவலித்தல் 1 3 1 5
மேசைக்கோல் பந்தாட்டம் 1 1 2 4
வில் எய்தல் 0 1 2 3
வூசூ 0 1 1 2
குழிப்பந்தாட்டம் (கோல்ஃப்) 0 1 0 1
பாய்மர கப்பலோட்டுதல் 0 1 0 1
சுவர்ப்பந்தாட்டம் 0 0 3 3
மல்யுத்தம் 0 0 3 3
சதுரங்கம் 0 0 2 2
சறுக்கு விளையாட்டு 0 0 2 2
நீச்சல் 0 0 1 1
கசரத்து (சீருடற்பயிற்சி) 0 0 1 1
வளைகோற் பந்தாட்டம் 0 0 1 1
மொத்தம் 14 17 33 64

தங்கம் வென்றவர்கள்

[தொகு]
பதக்கம் பெயர் விளையாட்டு பிரிவு
3 தங்கம் பங்கஜ் அத்வானி மேசைக்கோல் பந்தாட்டம் ஆடவர் பில்லியர்டுசு
3 தங்கம் பஜ்ரங் லால் தாக்கார் படகு வலித்தல் ஆடவர் தனியாள் துடுப்புப்படகு
3 தங்கம் ரோஞ்சன் சோதி சுடுதல் ஆடவர் இரட்டை டிராப்
3 தங்கம் பிரீஜா சிறீதரன் தடகளம் பெண்கள் 10000 மீ
3 தங்கம் சுதா சிங் தடகளம் பெண்கள் 3000 மீ கலசந்துரத்துதல் (இசுட்டீபுள்சேசு)
3 தங்கம் சோம்தேவ் தேவ்வர்மன்
சனம் சிங்
வரிப்பந்தாட்டம் ஆடவர் இரட்டையர்
3 தங்கம் சோம்தேவ் தேவ்வர்மன் வரிப்பந்தாட்டம் ஆடவர் ஒற்றையர்
3 தங்கம் அசுவினி அக்குன்சி தடகளம் பெண்கள் 400மீ தடையோட்டம்
3 தங்கம் ஜோசப் ஆபிரகாம் தடகளம் ஆண்கள் 400மீ தடையோட்டம்
3 தங்கம் விகாசு கிருஷ்ணன் யாதவ் குத்துச்சண்டை ஆடவர் 60கி
3 தங்கம் இந்தியா கபடி பெண்கள் கபடி
3 தங்கம் இந்தியா கபடி ஆண்கள் கபடி
3 தங்கம் மன்சீத் கவுர்
அசுவினி அக்குன்சி
சினி ஜோசு
மந்தீப் கவுர்
தடகளம் பெண்கள் 4x400 தடையோட்டம்
3 தங்கம் விஜேந்தர் குமார் சிங் குத்துச்சண்டை ஆண்கள் 75கி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Guangzhou Asian Games' new venues constructed". People's Daily Online. 2010-05-13. http://english.people.com.cn/90001/90779/90867/6984440.html. பார்த்த நாள்: 2010-06-30. 
  2. "RMB15 billion poured into major Asian Games projects". english.gz.gov.cn. 2010-07-03 இம் மூலத்தில் இருந்து 2020-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201001075758/http://www.gz2010.cn/10/0703/14/6AM56SCM0078002U.html. பார்த்த நாள்: 2010-07-06. 
  3. "Asian Games OC/CC venue set for August completion". Olympic Council of Asia. 2010-06-28 இம் மூலத்தில் இருந்து 2011-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110727140936/http://ocasia.org/News/IndexNewsRM.aspx?redirect=1158. பார்த்த நாள்: 2010-06-30. 
  4. "Guangzhou Asiad opening ceremony to be held along Pearl River". Xinhuanet. 2010-11-08. http://news.xinhuanet.com/english2010/sports/2010-11/08/c_13596282.htm. பார்த்த நாள்: 2010-11-11. 
  5. "温家宝将出席广州亚运会开幕式". Southcn.com. 2010-11-11 இம் மூலத்தில் இருந்து 2010-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101120165328/http://news.southcn.com/z/2010-11/11/content_17508119.htm. பார்த்த நாள்: 2010-11-11. 
  6. "Zardari to visit China for Asiad opening ceremony". Zee News. 2010-11-10. http://www.zeenews.com/news667205.html. பார்த்த நாள்: 2010-11-11. 
  7. "PM to visit China and Japan Nov 12-14". MCOT. 2010-11-11 இம் மூலத்தில் இருந்து 2011-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629194914/http://www.mcot.net/cfcustom/cache_page/128276.html. பார்த்த நாள்: 2010-11-11. 
  8. Qianlin, Qiu (2009-07-13). "Guangzhou to ensure better air quality for Asian Games". China Daily. http://www.chinadaily.com.cn/china/2009-07/13/content_8418627.htm. பார்த்த நாள்: 2010-07-14. 
  9. "亚运会环保工作受肯定 空气质量优良率达95.07%" (in Chinese). 信息时报. 2010-07-14 இம் மூலத்தில் இருந்து 2010-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100715210131/http://2010.163.com/10/0714/08/6BHP0TU900863AUC.html. பார்த்த நாள்: 2010-07-14. 
  10. 杨明 (2010-07-22). "穗投24亿改善空气迎亚运 环保部官员赞空气清洁" (in Chinese). 2010.163.com இம் மூலத்தில் இருந்து 2010-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100723154808/http://2010.163.com/10/0722/07/6C6AH7LQ00863AUC.html. பார்த்த நாள்: 2010-07-22. 
  11. "China to reduce vehicles during Asian Games". OneIndia. 2010-10-25 இம் மூலத்தில் இருந்து 2011-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111222013814/http://news.oneindia.in/2010/10/25/china-to-reduce-vehicle-movement-asian-games.html. பார்த்த நாள்: 2010-10-26. 
  12. "China's Guangdong province bans barbeque stalls in 11 cities ahead of Asian Games". Sify. 2010-10-26. http://sify.com/news/china-s-guangdong-province-bans-barbeque-stalls-in-11-cities-ahead-of-asian-games-news-international-kk0jOcibecc.html. பார்த்த நாள்: 2010-10-26. 
  13. Shasha, Deng (2010-07-09). "Proposal for news in Mandarin angers Guangzhou citizens". Xinhuanet. http://news.xinhuanet.com/english2010/china/2010-07/09/c_13392543.htm. பார்த்த நாள்: 2010-07-10. 
  14. "Cantonese faces fresh threat in its birthplace". SCMP. 2010-07-07 இம் மூலத்தில் இருந்து 2010-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100711004643/http://www.scmp.com/portal/site/SCMP/menuitem.2af62ecb329d3d7733492d9253a0a0a0/?vgnextoid=25c31f29c28a9210VgnVCM100000360a0a0aRCRD&ss=China&s=News. பார்த்த நாள்: 2010-07-11. 
  15. Mohapatra, Bikash (2010-06-01). "Indian cricket team to skip Asian Games". Rediff Sports. http://cricket.rediff.com/report/2010/jun/01/indian-cricket-team-to-skip-asian-games.htm. பார்த்த நாள்: 2010-07-16. 
  16. Welmilla, Hishan (2010-10-24). "From Delhi To Guangzhou". The Sunday Leader இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617030554/http://www.thesundayleader.lk/2010/10/24/from-delhi-to-guangzhou/. பார்த்த நாள்: 2010-10-24. 

வெளியிணைப்புகள்

[தொகு]